நிலவிலேயே பள்ளத்தை உருவாக்கிய விக்ரம் லேண்டர்! 2 மாதத்திற்கு பிறகு கண்டு பிடித்த இஸ்ரோ விஞ்ஞானிகள்!

சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் போது மிகப்பெரிய பள்ளத்தை உருவாக்கியுள்ளது. தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது. பூமியிலிருந்து ஒரு விண்கலத்தை நிலவிற்கு அனுப்பி அதை பத்திரமாக நிலவில் தரையிறங்க வைத்து, அங்கு ஆய்வுகளை நடத்தி முடித்துள்ளது. இப்படியாக நிலவிற்கு சென்ற சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் போது மிகப்பெரிய பள்ளத்தை உருவாக்கியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

chandrayaan 3 ejected halo

இதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நிலவின் தென்துருவப் பகுதியில் சாஃப்ட் லேண்டிங் செய்யப்பட்டது. நிலவில் இந்த விக்ரம் லேண்டர் சாஃப்ட் லேண்டிங் செய்வதற்காக அதில் பிரத்தியேக இன்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவை லேண்ட்ர் சரியாக தரையிறங்கும் பகுதிக்கு செல்லும் போது, அதிகமான உந்து சக்தியை ஏற்படுத்தி நிலவில் கீழே விழும் லேண்டரின் வேகத்தை குறைத்து சாஃப்ட் லேண்டிங் செய்ய உதவும்.

இப்படியாக அதன் இன்ஜினில் இருந்து வரும் திரஸ்டர் அதிக சக்தி வாய்ந்ததாக இருப்பதால் நிலவின் மேல் பரப்பில் உள்ள மணல் மற்றும் கல் ஆகியவை இதன் சக்தியால் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் இடத்திலிருந்து பறந்து கொஞ்சம் தொலைவில் சென்று விழும். இதனால் விக்ரம் லேண்டர் ஒரு குறிப்பிட்ட பள்ளம் இருக்கும் பகுதியிலேயே தரை இறங்கும். இதுதான் இஸ்ரோ திட்டமிட்டு இருந்தது.

chandrayaan 3 ejected halo

இப்படியாக விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் போது அங்கு பள்ளம் ஏற்பட்டதா என்பதை உறுதி செய்வதற்காக ஆய்வுகள் நடத்தப்பட்டது. இப்படியாக பள்ளம் ஏற்பட்டால் அதற்கு "ரிஜெக்ட்டா ஹாலோ" என பெயர். இந்நிலையில் விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், விக்ரம் லேண்டரில் தரையிறங்கிய பின்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஒப்பீடு செய்து பார்க்கப்பட்டது.

இதில் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய பின்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதியை சுற்றி ஒரு வெளிச்சமான பேட்ச் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இது விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது அங்கிருந்து தூக்கி வீசப்பட்ட மணல் மற்றும் கற்களால் உருவானதாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இது சுமார் 108.4 சதுர மீட்டர் அளவிலாக பள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது.

chandrayaan 3 ejected halo

இந்த விக்ரம் லேண்டர் தரை இறங்கும் போது தூக்கி வீசப்பட்ட மணல் மற்றும் கற்களின் எடையை பார்த்தால் சுமார் 2.06 டன் அளவிலான எடை கொண்ட நிலவின் பொருட்கள் எல்லாம் தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு மூலம் இஸ்ரோ நிலவில் தரை இயங்குவது குறித்து சில படிப்பினைகளை பெற்றுள்ளது.

குறிப்பிட்ட அளவுள்ள இன்ஜின், திரஸ்ட்டர் மற்றும் எடை கொண்ட லேண்டாரை தயாரிப்பது மூலம் நிலவின் மேற்பரப்பில் எவ்வளவு பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதை கணக்கிட்டு எதிர்காலத்தில் நிலவிற்கு இப்படியாக லேண்டரை அனுப்பினால் அது நிலவின் மேற்பரப்பில் குறைவான பாதிப்பை மட்டும் ஏற்படுத்தி எப்படி தரை இறங்குவது என்பதை ஆய்வு செய்வதற்காக இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

chandrayaan 3 ejected halo

இந்த ஆய்வுகள் மூலம் இஸ்ரோவிற்கு நிலவின் மார்ஃபாலஜி, ஜியாலஜி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இன்னும் நல்ல புரிதல்கள் ஏற்படுகிறது. இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான் திட்டம் மூலம் பல்வேறு ஆய்வுகளை வெற்றிகரமாக செய்துள்ளனர். எதிர்காலத்தில் இந்தியாவிலிருந்து நிலவுக்கு மனிதர்களை அனுப்ப பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக தான் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இஸ்ரோ பல்வேறு ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. முக்கியமாக சந்திரயான் 3 மூலம் உலக விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இஸ்ரோவின் அடுத்தடுத்த திட்டங்கள் மிக முக்கியமான திட்டங்களாக இருக்கின்றன. இதிலும் இஸ்ரோ நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கலாம்.

Article Published On: Friday, October 27, 2023, 17:09 [IST]
English summary
Chandrayaan 3 vikram lander displaces lunar soil created an ejected halo
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X