அமெரிக்காலாம் ஓரமா நில்லு! நிலவின் தென் துருவத்தில் கால் பதித்தது இந்தியா! உலகிலேயே முதல் நாடு

சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியது. உலக நாடுகள் மத்தியில் இந்தியாவிற்கு மிகப்பெரிய கௌரவமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. இதுவரை யாரும் தரையிறங்க முடியாத இடத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்கலத்தை பத்திரமாக தரையிறக்கி உலக சாதனை படைத்துள்ளனர். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

இன்றைய நாள் வரலாற்றில் நிச்சயம் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நாள் என்றே சொல்ல வேண்டும். பூமியிலிருந்து நிலவைப் பார்த்து ஆசைப்பட்ட காலம் போய் இனி நிலவில் நமக்காக ஒரு இடம் இருக்கிறது என இந்தியர்கள் மார்தட்டிக் கொள்ளும் நாளாக இன்று அமைந்துள்ளது. இந்தியாவின் பெரும் கனவு நினைவான தினம் இன்று தான். இஸ்ரோ விஞ்ஞானிகள், உலகில் பிற நாட்டு விஞ்ஞானிகள் கூட செய்ய முடியாத முக்கியமான சாதனையை இன்று செய்துள்ளார்கள்.

Chandrayaan-3

இந்தியாவின் பெரும் கனவாக இருப்பது சந்திராயன் திட்டம் தான் அதாவது பூமியிலிருந்து சந்திரனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ வடிவமைத்துள்ள திட்டம் தான் இந்த சந்திராயன். இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக பூமியிலிருந்து ஒரு விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பி சந்திரனில் தரையிறக்கி அங்கு ஆய்வுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்திற்கு சந்திரயான் 3 என பெயரிடப்பட்டது.

ஏற்கனவே சந்திராயன் 2 திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு முயற்சிக்கப்பட்டு அது வெற்றிகரமாக அமையாத நிலையில், சந்திரயான் 3 திட்டம் திட்டமிடப்பட்டு கடந்த ஜூலை மாதம் இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தயாராகி சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

Chandrayaan-3

பூமியிலிருந்து புயல் என கிளம்பிய இந்த சந்திராயன் 3 விண்கலம் பூமியின் புவியீர்ப்பு விசையில் மெல்ல மெல்ல பூமியை சுற்றி பூமியிலிருந்து விலகி சந்திரனின் புவியீர்ப்பு விசையில் ஈர்க்கப்பட்டு மெல்ல மெல்ல சந்திரனை சுற்றி இன்று சரியாக 06:04 மணிக்கு சந்திரனில் பத்திரமாக தரையறங்கி உலக சாதனை படைத்துள்ளது.

நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கும் முதல் விண்கலமாக இந்த சந்திரயான் 3 விண்கலம் தான் இருக்கிறது. இதுவரை பல நாடுகள் பூமியில் விண்கலத்தை தரைஇறக்கி இருந்தாலும் எந்த விண்கலமும் தென்துருவப் பகுதியில் தரையிறங்கவில்லை. எல்லாம் மத்தியிலோ அல்லது வட துருவப் பகுதிகளில் தான் தரை இறங்கியுள்ளது. இந்த பகுதியில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

Chandrayaan-3

ஆனால் சந்திரயான் பூமியிலிருந்து ஏவப்பட்ட பின்பு அங்கு நிலவின் தென் துருவப் பகுதியில் தண்ணீர் ஐஸ் வடிவில் இருப்பதற்கான ஆய்வுகள் ஆதாரங்கள் கிடைத்த பிறகு. பல நாடுகள் தற்போது தென்துருவப் பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இஸ்ரோவும் சந்திராயன் ஆய்வை மேற்கொண்டது.

நிலவின் தென் துருவப் பகுதியில் ஒரு விண்கலத்தை தர இயக்குவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அப்பகுதி மிக கடுமையாக இருக்கும் என்பதால் பல்வேறு ஆய்வுகளை செய்த பின்பு தான் அங்கு தரை இறங்கும் ஒரு லேண்டரையும் ரோவரையும் தயார் செய்ய முடியும். இப்படியாக தென்துருவ பகுதியில் தங்கள் லேண்டரையும் ரோவரையும் தரையிறக்க பல நாடுகள் முயற்சித்தும் இதுவரை முடியவில்லை.

ஆனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த வாய்ப்பை தவற விடவில்லை. சந்திரயான் திட்டத்தில் ஏற்பட்ட பாடத்தின் மூலம் சந்திராயன் 3 விண்கலத்தை தயார் செய்தனர். இதில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து எந்த சூழ்நிலை ஏற்பட்டாலும் வெற்றிகரமாக தரையிறங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதை தயார் செய்து விண்ணில் செலுத்தினர்.

இந்த விண்கலம் சுற்றி இன்று சரியாக மாலை 5:45 மணிக்கு தரையிறங்கும் பணியை துவங்கியது. மொத்தம் 4 கட்டங்களாக தரையிறங்கும் பணி துவங்கப்பட்டது. 100 கி.மீ உயரத்திலிருந்து 30 கிலோமீட்டர் உயரத்திற்கு அதன் உயரம் குறைக்கப்பட்டு அதே நேரத்தில் அதன் வேகமும் குறைக்கப்பட்டு பின்னர் சாய்வாக இருந்த விண்கலம் நேராக நிமிர்ந்த பட்டு மெல்ல அதன் உயரம் குறைக்கப்பட்டு வேகமும் படிப்படியாக குறைக்கப்பட்டு பத்திரமாக நிலவில் விண்கலம் தரையிறக்கப்பட்டது.

இந்த விண்கலம் நிலவில் சென்று பல்வேறு ஆய்வுகளை செய்துள்ளது முதற்கட்டமாக அடுத்த 4 மணி நேரம் கழித்து இந்த விண்கலத்திலிருந்து ரோவர் வெளியே வரும் வெளியே வந்து புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தை இஸ்ரோவிற்கு அனுப்பும். மேலும் நிலவில் பல பகுதிகளில் இது சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும். இது குறித்து தகவல்கள் எல்லாம் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று சாதித்துள்ளது. நிச்சயம் உலகில் மற்ற எந்த விஞ்ஞானிகளாலும் சாதிக்க முடியாத முக்கியமான சாதனையாக கருதப்படுகிறது. இந்த சாதனையை செய்த இஸ்ரோ விஞ்ஞானிகள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்களே. இவர்களுக்கான உங்கள் பாராட்டை நீங்கள் கமெண்டில் சொல்லுங்கள்

More from DriveSpark

Article Published On: Wednesday, August 23, 2023, 18:11 [IST]
English summary
Chandrayaan 3 vikram lander successfully landed on moon
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X