மிரட்டி விட்ட இஸ்ரோ! சந்திரயான்-3 விண்கலனை சுத்தியும் இருக்கறது தங்கமா? இந்த ரகசியம் இவ்ளோ நாளா தெரியாம போச்சே
இந்தியா மட்டுமல்லாது உலகமே இன்று உச்சரித்து கொண்டிருக்கும் ஒரு பெயர், சந்திரயான்-3 (Chandrayaan-3). நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய (Moon Landing) உலகின் முதல் நாடு என்ற சாதனையை இந்தியா (India) படைக்குமா? என்பது இன்னும் ஒரு சில மணி நேரங்களில் தெரிந்து விடும்.
இந்தியா இந்த சாதனையை நிகழ்த்த வேண்டும் என விஞ்ஞானிகள் மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மறுபக்கம் மத வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று கொண்டுள்ளன. ஒட்டுமொத்தத்தில் நாடே பெரும் உணர்ச்சி பெருக்கோடு, ஒரு சாதனையை எதிர்நோக்கியுள்ளது.

இந்த நேரத்தில் சந்திரயான்-3 குறித்த சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்வதற்கு மக்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். இதில் நீங்களும் ஒருவர் என்றால், உங்களுக்குதான் இந்த செய்தி. சந்திரயான்-3 விண்கலனை சற்று உன்னிப்பாக கவனித்தால், தங்க திறத்தில் மெல்லிய தகடுகள் சுற்றப்பட்டிருப்பதை அறியலாம்.
சந்திரயான்-3 மட்டுமல்லாது, அனைத்து விண்கலன்களுமே தங்க நிறத்திலான மெல்லிய தகடுகளால் சுற்றப்பட்டிருக்கும். அது ஏன்? என்பதற்கான காரணத்தை இந்த செய்தி தொகுப்பு விரிவாக விளக்குகிறது. விண்கலன்களில் பயன்படுத்தப்படும் மெல்லிய தகடுகள், தங்கம் போல் காட்சியளிக்கும். ஆனால் உண்மையில் அவை தங்கம் கிடையாது.

பாலிஸ்டர் தன்மை கொண்ட பொருட்கள் மூலமாகதான் இந்த மெல்லிய தகடுகள் உருவாக்கப்படுகின்றன. இந்த மெல்லிய தகடுகளில் அலுமினிய பூச்சு இடம்பெற்றிருக்கும் என்பதும் இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் ஆகும். இந்த மெல்லிய தகடுகளை விஞ்ஞானிகள், எம்எல்ஐ (MLI) என்ற பெயரில் அழைக்கின்றனர்.
Multi-layer Insulation என்பதன் சுருக்கம்தான் MLI. பெயருக்கு ஏற்றபடி, பல்வேறு மெல்லிய தகடுகள், ஒன்றன் மீது ஒன்று என பல அடுக்குகளாக சுற்றப்பட்டிருக்கும். இன்னும் தெளிவாக சொல்வதென்றால், தங்க நிற மெல்லிய தகடுகள் வெளியே சுற்றப்பட்டிருக்கும். அதற்கு உள்ளே வெள்ளி நிற மெல்லிய தகடுகள் சுற்றப்பட்டிருக்கும்.
இவ்வாறு அடுக்கடுக்காக மெல்லிய தகடுகளை சுற்றி விண்கலன்களை பாதுகாப்பதால்தான் இதனை Multi-layer Insulation என அழைக்கின்றனர். இதில் தங்க நிற மெல்லிய தகடுகள் வெளியே சுற்றப்படுவதால், அவை நமது கண்களுக்கு தெரிகின்றன. கதிர்வீச்சுக்களில் இருந்து விண்கலன்களை பாதுகாப்பதுதான் இந்த மெல்லிய தகடுகளின் தலையாய பணி.
நீங்கள் இன்னும் கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால், விண்கலன் முழுவதும் இந்த மெல்லிய தகடுகள் சுற்றப்படுவதில்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம். விண்கலன்களின் ஒரு சில பகுதிகளை சுற்றி மட்டுமே இந்த மெல்லிய தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும். அப்படியானால் அந்த இடங்கள் எல்லாம் கதிர்வீச்சு அபாயத்தில் இருக்கின்றன என அர்த்தம்.
எனவேதான் அந்த பகுதிகளை எல்லாம் பாதுகாப்பதற்காக இந்த மெல்லிய தகடுகளை பொருத்துகின்றனர். பூமியில் இருந்து புறப்படும் விண்கலன்கள் அவற்றின் பயணத்தின்போது, வெப்பநிலையில் பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அடிக்கடி வெப்பநிலை மாறி கொண்டே இருந்தால், விண்கலன்களின் முக்கியமான பாகங்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
ஒரு கட்டத்தில் அதீத வெப்பநிலை, விண்கலன்களை ஒட்டுமொத்தமாக செயலிழக்க செய்து விடும். அப்படி எதுவும் நடக்க கூடாது என்பதற்காகவே இந்த மெல்லிய தகடுகள் சுற்றப்படுகின்றன. அதீத வெப்பம் மற்றும் புற ஊதா கதிர்களில் இருந்து விண்கலன்களை பாதுகாக்கும் வேலையை இந்த தகடுகள் செய்கின்றன. இந்த ஆபத்தான கதிர்வீச்சுகளை, மெல்லிய தகடுகள் உள்வாங்கி கொள்ளும். பின்னர் விண்வெளியிலேயே பிரதிபலித்து விடும். எனவே விண்கலன்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வெப்பம் மற்றும் ஆபத்தான கதிர்வீச்சு ஆகியவற்றில் இருந்து மட்டுமல்லாது, விண்வெளி துகள்களிடம் இருந்து விண்கலன்களை பாதுகாக்கும் வேலையையும் இந்த மெல்லிய தகடுகள் செய்கின்றன. எனவே விண்கலன்களின் வெற்றிகரமான செயல்பாட்டில், இந்த மெல்லிய தகடுகள் மிக முக்கியமான பங்கை ஆற்றுகின்றன.


Click it and Unblock the Notifications








