சந்திரயான் 3 லேண்ட் ஆன இடத்திற்கு பெயர் வைத்த இந்தியா! இப்படி ஒரு பெயரை தேர்வு செய்ய செம கட்ஸ் வேணும்!
சந்திரயான் 3 திட்டத்தின் படி வெற்றிகரமாக விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்கி , அதிலிருந்து பிரக்யான் ரோவர் நிலவில் இறங்கி தனது ஆய்வுப் பணிகளை துவங்கியுள்ளது. இந்த நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகப்பெரிய சாதனை படைத்தனர். இவர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பாராட்டினார். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவின் மிகப்பெரும் கனவு திட்டமாக இருந்தது சந்திரயான் திட்டம் தான். சந்திரயான் திட்டத்தின் படி விண்வெளிக்கு சாட்டிலைட்டை அனுப்பி அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு நிலவின் தென் துருவப் பகுதியில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை இந்தியா கண்டுபிடித்தது இதையடுத்து உலக நாடுகள் முழுவதும் சந்திரன் குறித்த ஆய்வுகளை மீண்டும் துவங்கியது.

2019 ஆம் ஆண்டு சந்திரயான் 2 விண்கலத்தை இந்தியா விண்ணில் அனுப்பியது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த திட்டம் வெற்றிகரமாக அமையாமல் போனது. இந்நிலையில் மீண்டும் புதிய திட்டத்தை செயல்படுத்த இந்தியா முடிவு செய்தது. அதன்படி சந்திரயான்2 மூலம் கற்ற பாடங்களை வைத்து சந்திரயான் 3 திட்டத்தை இந்தியா வடிவமைத்திருந்தது.
கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. திட்டமிட்டபடி பயணித்த சந்திரயான் 3 விண்கலம் சரியாக கடந்த 23ஆம் தேதி மாலை 06:04 மணிக்கு நிலவில் தரையிறங்கியது. உலகில் வேறு எந்த நாடுகளும் நிலவின் தென்துருவ பகுதியில் இதுவரை தரையிறங்காத நிலையில் இந்தியா முதன்முறையாக இந்த சாதனையை படைத்துள்ளது. இது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மிகப்பெரிய கௌரவமாக அமைந்துள்ளது.

இந்த சாதனை நிகழும் போது இந்திய பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டிற்காக தென்னாப்பிரிக்காவில் இருந்தார். அப்பொழுது அவர் அங்கிருந்து நேரலை மூலமாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிலையில் இந்தியா திரும்பியவுடன் பிரதமர் மோடி நேராக பெங்களூர் வந்து இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து தனது பாராட்டுகளை தெரிவிப்பதற்காக ஏற்பாடுகளை செய்திருந்தார். அதன்படி இன்று காலை பெங்களூர் இஸ்ரோ மையத்திற்கு நேரடியாக வந்திருந்தார்.
அப்பொழுது விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய அவர் அவர்களுக்கான பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும் தான் இந்த நிகழ்வின் போது கட்டாயம் இருக்க வேண்டும் என நினைத்ததாகவும் ஆனால் தென்னாப்பிரிக்காவில் இருந்ததால் தன்னால் நேரில் வர முடியவில்லை என்றும் அதனால் தான் தற்போது நேரில் வந்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியின் போது முக்கியமான மூன்று அறிவிப்புகளை பிரதமர் மோடி வெளியிட்டார்.

அதன்படி தற்போது சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கியுள்ள இடத்திற்கு இந்தியா "சிவசக்தி" என பெயர் வைப்பதாகவும் இந்த பெயரை சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றி பாதைக்கு எடுத்துச் சென்றதில் பெண்கள் மற்றும் ஆண்களின் பங்கு அதிகமாக இருப்பதால் இந்த பெயரை இந்தியா தேர்வு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கால தலைமுறையினர் இந்த "சிவசக்தி" என்ற இடத்தை அறிவியலின் வளர்ச்சியை மக்களின் பயன்பாட்டிற்காக பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். மக்களின் நலனை நமது தலைமையான நோக்கம் என அவர் பேசியுள்ளார். இது மட்டுமல்ல கடந்த 2019 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் நிலவின் தென் துருவப் பகுதியில் மோதியது. இந்த இடத்திற்கு "திரங்கா பாயிண்ட்" எனவும் அவர் பெயர் வைத்துள்ளார்.
சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கியது இந்திய விண்வெளி ஆய்வில் மிக முக்கியமான மைல்களாக பார்க்கப்படுகிறது என்றும், இந்த தருணத்திற்காக தான் இந்தியா நீண்ட நாட்கள் கனவுடன் இருந்ததாகவும் இந்த இந்த கனவு நிறைவேறிய நாளான அக்டோபர் 23ஆம் தேதியை இந்தியா தேசிய விண்வெளி தினமாக கொண்டாடும் எனவும் தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிரதமர் மோடி இஸ்ரோவில் சாதனை படைத்த விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கும் போது நிலவில் இந்தியாவிற்கு சொந்தமாக உள்ள சந்திரயான் 2 மற்றும் 3 இருக்கும் பகுதிகளுக்கு பெயர் வைத்ததோடு இந்தியாவின் தேசிய விண்வெளி தினத்தையும் அறிவித்தது இந்திய விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் வகையில் இருக்கிறது. இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து இந்த ஊக்கத்தின் காரணமாக அடுத்தடுத்த திட்டங்களை விரிவுபடுத்தி வெற்றியை பெறுவார்கள் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications
