சந்திரயான் 3 படைக்க போகும் அடுத்த புதிய சாதனை! நாளை உலகமே இந்தியாவை பத்தி தான் பேசப்போகுது!
நிலவில் சந்திரயான் 3யின் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய சிவசக்தி என்ற இடத்தில் சூரியன் மீண்டும் உதிக்கப்போகிறது. இதனால் உறக்க நிலையில் உள்ள லேண்டர் மற்றும் ரோவர் மீண்டும் தனது செயல்பாட்டிற்கு வரப் போகிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இஸ்ரோ விண்வெளி மையம் ஆய்வுக்காக கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி சந்திரயான் 3 என்ற விண்கலத்தை விண்ணில் அனுப்பியது. இது சுமார் 40 நாள் பயணத்திற்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி நிலவில் பத்திரமாக தரை இறங்கியது. இதன் மூலம் இந்தியா நிலவில் தென் துருவ பகுதியில் தரையிறங்கிய முதல் நாடாகவும் நிலவில் பத்திரமாக தரையிறங்கிய உலகின் நான்காவது நாடாகவும் மாறியது.

இந்நிலையில் நிலவு தரையிறங்கிய விக்ரம் லேண்டர் மற்றும் ப்ரக்யான் ரோவர் தனது பணிகளை துவங்கின. இந்த லேண்டரும் ரோவரும் சூரிய ஒளியால் ஏற்படும் சக்தியை மின் சக்தியாக மாற்றி அதை பயன்படுத்தி தான் தனது செயல்பாடுகளை செய்து வந்தது. இதற்காக நிலவில் சூரியன் இருக்கும் நேரத்தில் தான் இது பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
சரியாக 14 நாட்கள் சூரிய ஒளியின் மூலம் சக்தியை பெற்றுக் கொண்டு இந்த லேண்டரும் ரோவரும் பணியாற்றி வந்த நிலையில் நிலவில் மீண்டும் இரவு நேரத்திற்கான காலம் வந்தது. இதை அடுத்து இஸ்ரோ விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகளின் உத்தரவுப்படி உறக்க நிலைக்கு சென்றன.
இந்த லேண்டரையும் ரோவரையும் உறக்க நிலையில் இருந்து மீண்டும் சூரிய வெளிச்சம் வரும்போது தானாக உயிர்பித்து தனது பணிகளை செய்யும் படி தான் இதை இஸ்ரோ விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகள் திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் இது சாத்தியமா என்பது தெரியவில்லை.
நிலவின் இருள் சூழ்ந்த நேரத்தில் அங்கு எந்த மாதிரியான சூழ்நிலைகள் இருக்கும், இதனால் லேண்டரும் ரோவரும் எப்படியான பாதிப்புகளுக்கு உள்ளாகும், இதிலிருந்து மீண்டும் சூரியன் ஒளி வரும்போது அதனால் எழுந்து செயல்பட முடியுமா? என்பது பூமியிலிருந்து கணிக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தொடர்ந்து 14 நாட்களுக்கு பணிகளுக்கு பிறகு உறக்க நிலைக்கு சென்ற லேண்டரும் ரோவரும் தற்போது மீண்டும் உறக்கத்திலிருந்து எழும் காலம் வந்துவிட்டது. இன்று அல்லது நாளை நிலவின் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதிக்கு சூரிய வெளிச்சம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்த தகவல் கிடைத்தவுடன் பூமியிலிருந்து இரண்டு முறை லேண்ருக்கும் ரோவருக்கும் மீண்டும் உறக்கத்தில் இருந்து எழுந்திருக்க கமெண்ட் அனுப்ப வாய்ப்பு உள்ளது. இந்த இரண்டு முயற்சியையும் இஸ்ரோ செய்ய உள்ளது. இதில் முதல் முயற்சியிலேயே எழுந்து விட்டால் எந்த பிரச்சினையும் இல்லை.
திட்டமிட்டபடி இருக்கிறது என அர்த்தம். முதல் முயற்சி தோல்வியில் முடிந்தால் சற்று நேரம் எடுத்து கொண்டு சூரிய ஒளியில் இருந்து மீண்டும் பேட்டரி தன்னை சார்ஜ் ஏற்றிக் கொள்ள நேரம் வழங்கி, பின்னர் இஸ்ரோ தரப்பிலிருந்து மீண்டும் இரண்டாவது கமெண்ட் வழங்கப்படும்.
இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த இரண்டு கமெண்டுக்குள் கண்டிப்பாக விக்ரம் லேண்டரும் தனது உறக்க நிலையிலிருந்து மீண்டும் எழுந்து தனது பணிகளை துவங்கும் என எதிர்பார்க்கின்றனர். இதுவரை எல்லாம் திட்டமிட்டபடி நடந்து வருவதால் இதுவும் திட்டமிட்ட படியே நடக்கும் என எதிர்பார்க்கின்றனர். தற்போது தக்க தருணத்திற்காக தான் இஸ்ரோ விஞ்ஞானிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த முயற்சியில் விக்ரம் லேண்டரும் ப்ரக்யான் ரோவரும் தனது உறக்க நிலையில் இருந்து எழுந்து விட்டால் இது ஒரு உலக சாதனையாகவே பார்க்கப்படும். உலகில் வேறு எந்த விஞ்ஞானங்களும் இப்படியான சாதனையை இதுவரை செய்யவில்லை. இது உலகின் மிகப்பெரிய சாதனையாக இருக்கும்.
நிலவின் இருள் சூழ்ந்த பகுதியில் இருக்கும் வெப்பநிலை மைனஸ் 200 டிகிரிக்கும் குறைவாக இருப்பதால் அங்கு எலெக்ட்ரானிக் பாகங்கள் செயல் இழந்து போகக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில் இதையெல்லாம் தாக்குப் பிடிக்கும் வகையில் தான் லேண்டரையும் ரோவரையும் இஸ்ரோ டிசைன் செய்து உள்ளார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இஸ்ரோவின் சந்திரயான் 3 அடுத்த கட்ட சாதனையை செய்யும் தருணம் வந்துவிட்டது. சந்திரயான் 2 இஸ்ரோவிற்கு வெற்றிகரமாக அமையாத நிலையில் சந்திரயான் 3 அதன் மூலம் கற்ற பாடங்களில் இருந்து பல்வேறு மாற்றங்களை செய்து தற்போது மிகப்பெரிய சாதனையை படைக்க தயாராகிவிட்டது. இந்த தருணத்தில் நாம் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் துணை நிற்போம்


Click it and Unblock the Notifications








