வெற்றிகரமாக பிரிந்தது சந்திரயான் 3 லேண்டர்! நிலவில் இன்னும் கொஞ்ச நாள்ல தரையிறங்க போகுது!

சந்திரயான் 3 விண்கலம் புரொபஷனல் மாடுலிருந்து லேண்டர் மாடுல் வெற்றிகரமாக பிரிந்தது. தற்போது விக்ரம் லேண்டர் நிலவை நோக்கி தனது பயணத்தை துவங்கியுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் இதை நிலவில் தரையிறங்க போகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இஸ்ரோ மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கு பெரும் கனவாக இருப்பது சந்திரயான் 3 திட்டம் தான் நிலவில் வெகு சில நாடுகளே தங்கள் விண்கலத்தை தரையிறக்கி ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்தியாவும் அந்த பட்டியலில் சேர சந்திரயான் 3 திட்டம் மூலம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

chandrayaan-3s vikram lander separated

சந்திராயன் 2 விண்கலம் நிலவில் சென்று தர இயங்கும்போது ஏற்பட்ட பிரச்சனையால் வெற்றிகரமாக அமையாத நிலையில் அடுத்த கட்ட திட்டமாக சந்திரயான் 3 விண்கலம் விண்வெளி ஏவுதலுக்கு தயாரானது. கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த விண்கலம் பூமியின் புவியீர்ப்பை வைத்து பூமியை சுற்றி மெல்ல மெல்ல பூமியிலிருந்து விலகி நிலவின் புவியீர்ப்பு சென்று நிலவை சுற்றி தற்போது மெல்ல மெல்ல நிலவை நெருங்கி வருகிறது. இப்படியாக பூமியை விட்டு விலகவும் நிலவை நெருங்கவும் மட்டுமே அவ்வப்போது தேவையான நேரங்களில் பூமியிலிருந்து இந்த புரொபஷனல் மாடுல் இன்ஜினை இயக்கி அதன் திசையையும் வேகத்தையும் குறைக்கின்றனர்.

chandrayaan-3s vikram lander separated

இப்படியாக நேற்று இந்த சந்திரயான் 3 விண்கலம் நிலவிலிருந்து 153 கிலோமீட்டர்க்கு 163 கிலோமீட்டர் என்ற அளவில் சுற்றி வருகிறது. இந்நிலையில் இந்த சமுதாயத்தை விண்கலத்தில் உள்ள இரண்டு பாகங்களான புரொபஷனல் மாடுல் மற்றும் லேண்டர் மாடல் ஆகியவற்றை இனி தனித் தனியாக பிரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இதில் புரொபஷனல் மாடல் நிலவிலிருந்து குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் நிலவை சுற்றி வந்து அது குறித்த தகவல்களை பூமிக்கு அனுப்பும். லேண்டர் மாடுல் தனியா பிரிந்து நிலவில் மேலும் நெருங்கி நிலவில் தரையங்குவதற்கான பணியை துவங்கும். இந்நிலையில் இந்த இரண்டு மாடலையும் தனித்தனியாக பிரிக்க இஸ்ரோ முடிவு செய்தது.

அதன்படி இன்று மதியம் சுமார் ஒரு மணிக்கு மேல் இஸ்ரோ இந்த இரு பகுதிகளையும் பிரிக்கும் பணியை செய்தது. இந்நிலையில் இந்த லேண்டர் மாடுல் மற்றும் புரொபஷனல் மாடுல் ஆகிய இரண்டும் தனித்தனியாக தற்போது பிரிந்து விட்டது. இது தற்போது இரண்டும் தனித்தனி பாதைகளில் பயணிக்க துவங்கி விட்டது.

புரொபஷனல் மாடல் தொடர்ந்து நிலைமை சுற்றி வரும் லேண்டர் மாடுல் தொடர்ந்து நிலவை நோக்கி பயணித்து தனது உயரத்தை குறைத்து நிலவில் தரையிறங்கும் பணியை செய்யும். நிலவின் தென் துருவப் பகுதியில் தான் சந்திரயான் திரையரங்க போகிறது. இதுவரை அந்த பகுதியில் எந்த லேண்டரும் தரையிறங்கியது இல்லை.

நிலவில் தொந்தரவு பகுதியில் தான் நீர் ஐஸ் வடிவில் இருப்பதாக சந்திராயன் ஒன் கண்டுபிடித்தது அதன் பிறகு தான் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் நிலவிற்கான தனது பயணத்தை துவக்க ஆயத்தமானார்கள் தற்போது சந்திராயான் 3 வெற்றிகரமாக நிலவில் இறங்கினால் நிலவில் பல்வேறு ஆய்வுகளை நிகழ்த்தப் போகிறது.

சந்திரயான் 3 நிலவை நோக்கி பயணிக்கும் இதே நேரத்தில் தான் ரஷ்யா லூனா 25 என்ற விண்கலத்தை கடந்த 11ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. இதுவும் சந்திரனை நோக்கி பயணித்து வருகிறது. இந்த விண்கலம் சந்திராயனுக்கு முன்பே நிலவில் தரையிறங்க வாய்ப்பிருப்பதாக பேசப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்குவது இந்தியாவில் மிக முக்கியமான சாதனையாக கருதப்படும் விஷயமாகும். இதற்காக ஒட்டுமொத்த இந்திய மக்களும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். தற்போது வெற்றிகரமாக லேண்டர் புரொபஷனலிருந்து பிரிந்துள்ளது. அடுத்தடுத்த நாட்களில் அதன் உயரம் குறைக்கப்பட்டு வரும் 23ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கலாம்.

Article Published On: Thursday, August 17, 2023, 14:03 [IST]
English summary
Chandrayaan 3s vikram lander detaches from spacecraft
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+