நிலவிற்கு மனிதனை அனுப்ப தயாராகும் இஸ்ரோ? இப்படி ஒரு சோதனைய யாருக்கும் தெரியாம சக்ஸஸ் பண்ணீட்டாங்க!
நிலவில் சந்திரயான் 3 லேண்டர் துள்ளி குதித்து பத்திரமாக மீண்டும் சாஃப்ட் லேண்டிங் ஆன சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ள நிலையில் இஸ்ரோ தற்போது நிலவிற்கு மனிதர்களை அனுப்ப தயாராகி வருவது உறுதியாக தெரிய வந்துள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இஸ்ரோ நிலவின் ஆராய்ச்சிக்காக சந்திரயான் 3 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் விண்ணிற்கு அனுப்பியது. இந்த விண்கலம் திட்டமிட்டபடி சரியாக கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் பத்திரமாக தரையிறங்கியது. நிலவில் தரையிறங்கிய பின் அதிலிருந்து வெளியான ரோவர் மற்றும் லேண்டர்கள் நிலவில் இஸ்ரோ விஞ்ஞானிகள் அளித்த உத்தரவின் அடிப்படையில் செயல்பட்டு ஆய்வுகளை செய்து அந்த தகவல்களை பூமிக்கு அனுப்பின.

தற்போது நிலவில் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடம் இருள் சூழ போகும் நேரம் என்பதால் லேண்டர் மற்றும் ரோவர் ஆகியன தற்போது தனது பணியை முடித்து தூக்க நிலைக்கு செல்ல போவதாக இஸ்ரோ அறிவித்திருந்தது. மேலும் அடுத்த 14 நாட்களுக்கு இருள் சூழ்ந்திருக்கும் நிலையில் அதன் பின்பு மீண்டும் சூரிய உதயம் ஏற்படும் போது மீண்டும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மீண்டும் 14 நாட்களுக்கு பிறகு விக்ரம் லேண்டர் மட்டும் பிரக்யான் ரோவர் ஆகிய கருவிகள் மீண்டும் உயிர்த்தெழுந்து தனது ஆய்வு பணிகளை மேற்கொள்ளுமா? என்பதை உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞான ஆர்வலர்கள் கவனமாக உற்றுநோக்கி கொண்டிருந்த நேரத்தில் தற்போது இஸ்ரோ ரகசிய ஆபரேஷன் ஒன்றை செய்துள்ளது.
இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த லேண்டரை வடிவமைக்கப்படும்போதே இந்த லேண்டெர் வருங்காலத்தில் மனிதர்களை நிலவிற்கு அனுப்பும் போது அங்கிருந்து மனிதர்களை மீண்டும் பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவதற்கான வழிகளை ஆய்வு செய்வதற்கான சின்ன பரிசோதனை கருவி ஒன்றையும் பொருத்தி அனுப்பியுள்ளது. இது குறித்து இஸ்ரோ இதுவரை பொதுவெளியில் எந்த தகவலையும் வெளியிடாமல் இருந்தது.
இந்நிலையில் இஸ்ரோ இந்த ரகசிய பரிசோதனையை சோதித்துப் பார்த்தது. அதன்படி சந்திரயான் சோதனை எல்லாம் முடிந்ததும் பூமியில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உடன் லேண்டர் நிலவிலிருந்து குதித்து மீண்டும் பத்திரமாக நிலவில் சாஃப்ட் லேண்ட் செய்ய வைக்கலாம் என திட்டமிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவை பெற்றுக் கொண்ட விக்ரம் லேண்டர் அதன்படி நிலவில் சுமார் 40செ.மீ உயரத்திற்கு மேலே எழும்பி மீண்டும் பத்திரமாக எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சாஃப்ட் லேண்ட் ஆனது.
இந்த வீடியோவை இஸ்ரோ தற்போது தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. அதில் இஸ்ரோ நிலவில் விக்ரம் லேண்ட்ர மீண்டும் சாஃப்ட் லேண்டிங் ஆனதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் விக்ரம் லேண்டர் இந்த மிஷினில் எதிர்பார்த்த வேலைகளை எல்லாம் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் பூமியிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் லேண்டரில் உள்ள இன்ஜின் மீண்டும் பயர் செய்யப்பட்டு விக்ரம் லேண்டர் 40 சென்டிமீட்டர் வரை உயரம் மேலே எழும்பி மேலும் தான் ஏற்கனவே தரையிறங்கிய இடத்தில் இருந்து 30 முதல் 40 சென்டிமீட்டர் தள்ளி மீண்டும் பத்திரமாக தரையிறங்கியது என குறிப்பிட்டுள்ளது.
இப்படியாக லேண்டரை நிலவில் துள்ளி குதிப்பது போல் சில உயரம் மட்டும் மேலே எழும்ப வைத்து சற்று தள்ளி மீண்டும் தரையை இறக்கியதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. எதிர்காலத்தில் மனிதர்களை நிலவிற்கு அனுப்பி அவர்களை பத்திரமாக நிலவிலிருந்து கிளப்பி பூமிக்கு கொண்டு வருவதற்கான ஒரு தொழில்நுட்ப சோதனையாகவே இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் போது அவர்கள் அங்குள்ள லேண்டரில் ஏறி பின்பு அது நிலவிலிருந்து கிளம்பி மீண்டும் விண்வெளிக்கு வந்து பூமிக்கு பத்திரமாக வர இப்படியான ஒரு இன்ஜினை தான் பயன்படுத்துவார்கள் அந்த இன்ஜின் சரியாக வேலை செய்து நிலவிலிருந்து லேண்டர் கிளம்பி பூமிக்கு வருவதற்காக ஒரு பரிசோதனை முயற்சியாக தான் இதை இஸ்ரோ செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சந்திரயான் 3 பயணம் குறித்து இதுவரை இஸ்ரோ தெரிவித்த தகவலில் இப்படியாக ஒரு சோதனை செய்யப் போவதை இஸ்ரோ பொதுவெளியில் அறிவிக்கவே இல்லை. இதை ஒரு ரகசிய திட்டமாகவே செய்துள்ளது. இந்த திட்டம் தற்போது வெற்றி பெற்றுள்ளதால் இதை பொதுவெளியில் அறிவித்துள்ளது இதனால் இஸ்ரோ விரைவில் மனிதர்களை நிலவிற்கு அனுப்பும் முயற்சியில் இறங்கும் என எதிர்பார்க்கலாம்


Click it and Unblock the Notifications