நிலவில் மீண்டும் லேண்ட் செய்ய தயாராகும் இந்தியா! இந்த முறை நாசாவே ஆச்சரியப்படுற ஒரு விஷயத்தை செய்ய போறாங்க!

இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தற்போது தனது சந்திரயான் 4 திட்டம் குறித்த புதிய தகவல்களை எல்லாம் வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த நான்கு ஆண்டுகளில் இஸ்ரோ சந்திரனுக்கு சந்திரயான் 4 விண்கலத்தை அனுப்பி அங்கிருந்து மாதிரிகளை எடுத்துக்கொண்டு பூமிக்கு பத்திரமாக திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.

இந்தியாவின் வின்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சந்திரயான் 3 என்ற விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கி மிகப்பெரிய சாதனை படைத்தது. நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கிய முதல் நாடாக இந்தியா மாறியது. இந்நிலையில் உலக நாடுகள் முழுவதும் இஸ்ரோவை தற்போது பாராட்டி வரும் நிலையில் இஸ்ரோ அடுத்தடுத்த சாதனைகளுக்காக தயாராகி வருகிறது.

chandrayaan 4

இஸ்ரோவின் ஆதித்யா எல்1 என்ற விண்கலம் தற்போது சூரியனை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எல் 1 என்ற பாதைக்கு சென்று அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்ய இந்த விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரோ தற்போது சந்திரயான் 4 திட்டத்தை தயார் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த திட்டம் குறித்த பல்வேறு முக்கிய தகவல்களும் நமக்கு கிடைத்துள்ளன.

அடுத்த முக்கிய திட்டமாக ககன்யான் என்ற திட்டத்தை தான் செயல்படுத்தி வருகிறது. ககன்யான் என்ற திட்டத்தின் படி பூமியிலிருந்து மூன்று மனிதர்களை சுமார் 400 கிலோமீட்டர் உயரத்திற்கு விண்வெளிக்கு கூட்டி சென்று மீண்டும் அவர்களை பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவது தான் இந்த திட்டத்தின் நோக்கமாக இருக்கிறது. இந்த திட்டத்திற்கான முதற்கட்ட சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் 2ம் கட்ட சோதனை 2024-ம் ஆண்டு முதல்பாதியில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

chandrayaan 4

அதன் பின்பு 2024-ம் ஆண்டு இறுதி அல்லது 2025-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து மனிதர்களை இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் தற்போது பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இஸ்ரோ தனது சந்திரயான் 4 திட்டத்தை துவக்கியுள்ளது. திட்டத்தில் பூமியிலிருந்து விண்கலத்தை பத்திரமாக நிலவில் தரையிறக்கி அங்கு ஆய்வுகளை செய்து அந்த தரவுகளை மட்டும் அந்த விண்கலம் பூமிக்கு அனுப்பி வைத்தது.

ஆனால் சந்திரயான் 4 திட்டத்தின் படி நிலவிலிருந்து சில மாதிரிகளை எடுத்து பூமிக்கு கொண்டு வருவது தான் அதன் நோக்கமாக இருக்கிறது. இதற்காக இஸ்ரோ ஸ்பேடெக்ஸ் என்ற புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது. இந்த தொழில்நுட்பம் விண்வெளியில் இரண்டு வேறு சாட்டிலைட்கள் ஒன்றோடு ஒன்று இணைத்து அது தகவல் மற்றும் சில பொருட்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றும் வகையில் இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

chandrayaan 4

இந்த தொழில்நுட்பம் சந்திரயான் 4 விண்கல திட்டத்திலும் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தில் ஒரு லேண்டர் மற்றும் ஒரு ரோவர் மட்டுமே இருந்தது. இது லேண்டர் என்பது பத்திரமாக விண்கலத்தை நிலவில் தரையிறக்கவும் ரோவர் என்பது நிலவின் பல்வேறு பகுதிக்கு சென்று ஆய்வு செய்து தரவுகளை பூமிக்கு அனுப்பும் கருவியாகவும் செயல்பட்டது.

சந்திரயான் 4 திட்டத்தின் படி நிலவில் விண்கலம் தரையிறங்கி அங்கு ரோவர் சில பகுதிகளுக்கு சென்று மாதிரிகளை சேகரித்து மீண்டும் லேண்டருக்குள் ஏறி அந்த லேண்டெர் மீண்டும் நிலவிலிருந்து கிளம்பி நிலவின் வெளி மண்டல பகுதிக்கு வரும். இதற்கிடையே பூமியிலிருந்து மற்றொரு விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டு அது நிலவை நோக்கி செல்லும்.

chandrayaan 4

இந்த இரு விண்கலமும் நிலவின் வெளிமண்டல பகுதியில் ஒன்றோடு ஒன்று சந்தித்து இணைப்புகளை ஏற்படுத்தி நிலவிலிருந்து கிளம்பி வரும் விண்கலத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரியை பூமியில் இருந்து சென்ற விண்கலத்திற்கு மாற்றும் பின்னர் பூமியிலிருந்து சென்ற விண்கலம் மீண்டும் பத்திரமாக பூமியிலேயே வந்து தரை இறங்கும்.

இதுதான் சந்திரயான் 4 திட்டத்திற்கான முழு வரையறையாக இருக்கிறது. இதில் விண்வெளியில் இருந்து பத்திரமாக மீண்டும் பூமிக்கு தர இறங்கும் தொழில்நுட்பத்தை ககன்யான் திட்ட மூலம் இஸ்ரோ ஒருமுறை சோதித்து பார்க்க போகிறது. அதைத் திட்டத்தை தான் சந்திரயான் 4 விண்கல முயற்சியிலும் செயல்படுத்த உள்ளது.

விண்வெளியில் இரண்டு வேறு வேறு விண்கலங்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கும் டாக்கிங் தொழில்நுட்பமான ஸ்பெடெக்ஸ் என்ற தொழில்நுட்பம் இதுவரை சோதனை செய்யப்படவில்லை. இது சோதனை செய்யப்பட்ட பின்பு தான் சந்திரயான் 4 விண்கலம் என்பது முழுமையாக தயார் செய்ய முடியும். ஆனால் இந்த டாக்கிங் தொழில்நுட்பம் கிட்டத்தட்ட இறுதிக்கட்ட பணிகளை எட்டி உள்ளது. இதனால் விரைவில் இதன் சோதனையும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் அடுத்த நான்காண்டுகளில் இஸ்ரோ சந்திரயான் 4 என்ற விண்கலத்தை தயார் செய்து நிலவுக்கு மீண்டும் விண்கலத்தை அனுப்ப தயாராகிவிடும் என இஸ்ரோவின் சேர்மன் சோம்நா தெரிவித்துள்ளார். இஸ்ரோவில் இந்த அறிவிப்பு விண்வெளி ஆய்வாளர்களை மகிழ்ச்சியாக ஆக்கி உள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் தற்போது சர்வதேச அளவில் தரம் உயர்ந்த விண்வெளி ஆய்வு மையமாக மாறி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா கடந்து 2008 ஆம் ஆண்டு முதல் முதலாக சந்திரயான் 1 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய நிலையில் அடுத்து நீண்ட நாட்கள் சந்திரயான் திட்டத்திற்காக எடுத்துக் கொண்டது. ஆனால் இது மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் தற்போது தனது பணிகளை துரிதப்படுத்தி சந்திரயான் 4 திட்டத்தை அடுத்த நான்கு ஆண்டுகளில் செய்து முடிக்க திட்டமிட்டுள்ளது நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.

More from DriveSpark

Article Published On: Friday, December 15, 2023, 15:12 [IST]
English summary
Chandrayaan 4 isro chairman s somanath revealed india space plans
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X