ஹாலிவுட் படத்துல வர சீன் மாதிரி ராக்கெட் டூ ராக்கெட் மாறப்போகும் சாம்பிள்! திக் திக் திக் நிமிடங்கள்!
இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ சந்திரயான் 4 திட்டத்தை விரைவில் செயல்படுத்த ஆலோசனை நடத்தி வருகிறது. இதில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இதன்படி சந்திரயான் 3 போல இல்லாமல் இதில் இரண்டு ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி இந்த திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. எதற்காக இரண்டு ராக்கெட்கள் விண்ணிலே ஏற்படுகின்றன என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
2023-ம் ஆண்டு சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்கி சாதனை படைத்தது. உலகில் வேறு எந்த விஞ்ஞானிகளும் செய்யாத சாதனையை இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்தனர். இந்நிலையில் இந்தியா தனது அடுத்த கட்ட செயல்பாட்டை நிகழ்த்துவதற்காக சந்திரயான் 4 திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த சந்திரயான் 4 திட்டத்தின் படி நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்கி அங்கிருந்து சில சாம்பிள்களை எடுத்துக் கொண்டு மீண்டும் சந்திரயான் 4 விண்கலம் பூமிக்கு திரும்புவதை இந்த திட்டத்தின் நோக்கமாக இருக்கிறது. இதற்காக சந்திரயான் 3 திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட யுக்திகள் போக கூடுதலாக அங்கிருந்து கிளம்பி இங்கு வருவதற்கான யுக்திகளும் சேர்ந்து பயன்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி இந்த சந்திரயான் 4 விண்கலம் என்பது ஆறு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பாகமான புரொபஷனல் என்பது ராக்கெட்டில் இருந்து விண்கலம் பிரிந்து சென்றவுடன் அது சந்திரனை நோக்கி பயணிக்க உதவும். அடுத்த கட்டமான டிசென்டர் என்பது நிலவில் தரை இறங்குவதற்காக உதவும். பின்னர்அதலிருந்து வெளியேறும் ரோவர் நிலவின் மேற்பரப்பில் உள்ள சில சாம்பிள்களை கலெக்ட் செய்து மீண்டும் மாடுல் உள்ளே வரும்.

அங்கிருந்து அசெண்டர் என்ற கருவி மூலம் நிலவிலிருந்து கிளம்பி மீண்டும் விண்வெளிக்கு நிலவின் சாம்பில்களுடன் இந்த கருவி கிளம்பும். பின்னர் பூமிக்கு வரும் ரீஎன்ட்ரி மாடுல்களுக்கு நிலவிலிருந்து எடுக்கப்பட்ட சாம்பிள் டிரான்ஸ்ஃபர் செய்யப்படும். பின்னர் பூமிக்கு ரீ-என்ட்ரி மாடுல் மூலம் சாம்பிள்கள் எல்லாம் வந்து சேரும். இதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.
இதற்காக சந்திரயான்3 திட்டத்திற்காக பயன்படுத்தப்பட்ட எல்விஎம் 3 ராக்கெட் மூலம் புரொபைல்சன், டிசென்டர், அசென்டர் ஆகிய மாடுல்கள் விண்ணில் முதலில் ஏவப்படும். அதன் பின்னர் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் டிரான்ஸ்ஃபர் மற்றும் ரீஎன்ட்ரி மாடுல்கள் அனுப்பப்படும். முதலாவதாக அனுப்பப்படும் ராக்கெட்டில் உள்ள மாடுல்கள் அனைத்து வேலையும் முடித்துவிட்டு இரண்டாவதாக அனுப்பப்படும் மாடுலுக்கு அதன் சாம்பிளை அனுப்பியவுடன் இரண்டாவதாக அனுப்பப்பட்ட மாடுல்கள் மீண்டும் அதை பத்திரமாக பூமிக்கு கொண்டு வந்து சேர்க்கும்.

இந்த சாம்பிள்களை வைத்து பூமியில் விஞ்ஞானிகள் ஆய்வு செய்வார்கள். அதன்படி இது வெற்றி அடைந்து விட்டால் நிலவிலிருந்து பூமிக்கு சாம்பிள்களை கொண்டு வந்த உலகின் நான்காவது நாடாக இந்தியா மாறும். இந்தியாவில் இந்த சாதனைக்காக மக்கள் பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ககன்யான் திட்டத்திற்கு பிறகு இஸ்ரோ சந்திரயான் 4 திட்டத்தை தீவிரமாக கையில் எடுக்கும் என எதிர்பார்க்கலாம்.
சந்திராயன் 3 திட்டம் போல சந்திரயான் 4 திட்டமும் வெற்றிகரமாக நிறைவேற பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான ஆய்வுகள் எல்லாம் தற்போது துவங்கி விட்டது. விரைவில் இதற்கான சோதனைகள் எல்லாம் நடத்தப்பட்டு அனைத்தும் தயாராக மாறிய பின்பு சந்திரயான் 4 திட்டம் எப்பொழுது நிறைவேற்றப்படும் என்ற விரிவான விவரங்கள் எல்லாம் நமக்கு தெரிவிக்கப்படும்.
இஸ்ரோ தற்போது பூமியிலிருந்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி அவர்களை பத்திரமாக மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் முயற்சியில் ககன்யான் திட்டம் என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்றை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு இறுதி 2025-ம் ஆண்டு துவக்கத்திற்குள் இது வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்திற்கு மிகப்பெரிய பெயர் கிடைக்கப் போகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் விண்வெளி ஆய்வு பல்வேறு ஆய்வுகளை அடுத்தடுத்து நடத்தி அதில் வெற்றியும் கண்டு வருகின்றன. ககன்யான் திட்டத்திற்கான சோதனையும் வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது சந்திரயான் 4 திட்டத்திற்கான முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது, அறிவியல் ஆர்வலர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.


Click it and Unblock the Notifications









