சந்திரயான் 3-ஐ விடுங்க சந்திரயான் 4 குறித்த இஸ்ரோவின் திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா? இது செம மாஸ்பா!
இஸ்ரோவின் சந்திரயாவ் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி உலக சாதனை படைத்துள்ளது. இதற்கான வெற்றியை தற்போது இந்திய மக்கள் கொண்டாடிக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் சந்திரயான் 4 குறித்து ஒரு முக்கியமான தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரோ சந்திரயான் 4 என்ற மற்றொரு திட்டத்தையும் தற்போது திட்டமிட்டு அதற்கான பணிகளை துவக்கி உள்ளது. அதைப் பற்றி இங்கு விரிவாக காணலாம் வாருங்கள்.
இஸ்ரோ இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமாக இருககிறது. ஒரு காலத்தில் மிகக் குறைவான பட்ஜெட் காரணமாக ராக்கெட் தயாரிப்பதில் மிக பின்தங்கிய நாடாக இருந்தது. ஆனால் இன்று அதே இஸ்ரோ உலகில் வேறு எந்த நாடுகளும் செய்ய முடியாத அளவிற்கு மிக முக்கியமான ஒரு சாதனையை செய்துள்ளது. தனது விண்கலத்தை வெற்றிகரமாக நிலவின் தென் துருவ பகுதியில் சாஃப்ட் லேண்டிங்செய்துள்ளது.

நிலவில் இதுவரை அமெரிக்க சீனா ரஷ்யா போன்ற மூன்று நாடுகள் மட்டுமே தங்கள் விண்கலத்தை தரையிறக்கியுள்ளன. இந்நிலையில் இந்த மூன்று நாடுகளும் நிலவின் மத்திய பகுதி அல்லது வட துருவப் பகுதியில் தான் தரையிறக்கியுள்ளது. தவிர தென் துருவ பகுதியில் இதுவரை எந்த நாடும் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிறது இல்லை. ஆனால் இந்த தென் துருவப் பகுதியில் இஸ்ரோ தனது விண்கலத்தை இன்று வெற்றிகரமாக தரையிறக்கி உள்ளது.
இந்த வெற்றியை தற்போது உலகில் உள்ள அனைத்து இந்தியர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரோவின் அடுத்த சந்திரன் குறித்த ஆய்வு திட்டமான சந்திரயான் 4 திட்டம் குறித்த முக்கியமான அப்டேட் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது. அதன்படி இஸ்ரோ தற்போது தனது அடுத்த கட்ட நிலவு குறித்து ஆய்வுக்கும் தயாராகிவிட்டது தெரியவந்துள்ளது.

இஸ்ரோ தனது அடுத்த கட்ட நிலவு குறித்த ஆய்வுக்கு லுனார் போலார் எக்ஸ்ப்ளோரேஷன் மிஷன் LUPEX என பெயர் வைத்துள்ளது. இந்த திட்டத்தை இஸ்ரோ தனியாக செய்யப்போவதில்லை இதற்காக இஸ்ரோ ஜப்பான் நாட்டின் விண்வெளி ஆய்வு மையமான ஜாக்ஸா-JAXA என்ற அமைப்புடன் கூட்டு சேர்ந்து இந்த திட்டத்தை திட்டமிட்டுள்ளது.
சந்திரயான் 3 வெற்றிக்கு பிறகு சந்திரன் குழுவினர் அடுத்ததாக இந்த ஜாக்ஸா அமைப்புடன் சேர்ந்து சந்திரயான் 4 திட்டத்தை வெற்றிகரமாக செய்யும் பணியில் இறங்க உள்ளனர். சந்திரயான் 4 திட்டத்தின் படி இந்த இரு நாடுகளும் சேர்ந்து லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய கருவிகளை தயாரித்து சந்திரனுக்கு அனுப்ப உள்ளனர். இந்த திட்டத்தின் நோக்கம் குறித்த முக்கியமான தகவல் கிடைத்துள்ளது.
இந்தியாவின் இஸ்ரோவும் ஜப்பானின் ஜாக்ஸா அமைப்பும் சேர்ந்து இந்தத் திட்டத்தில் நிலவிலிருந்து சாம்பிள்களை பூமிக்கு எடுத்து வருவதற்கான முயற்சியில் இறங்கவுள்ளனர். இங்கிருந்து ராக்கெட் மூலம் விண்கலத்தை நிலவிற்கு அனுப்பி அந்த விண்கலத்தை நிலவில் தரையிறக்கி அங்கு ரோவர்களை அனுப்பி அங்கிருந்து சாம்பிள்களை எடுத்து மீண்டும் ரோவரை விண்கலத்தில் ஏற்றி, விண்கலத்தை நிலவிலிருந்து கிளப்பி அதை பூமிக்கு கொண்டு வந்து பூமியில் அந்த சாம்பலை எடுத்து ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.
இது மட்டுமல்லாமல் தற்போது சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வெயில் இருக்கும் நேரம் அதாவது பகல் நேரத்தில் மட்டுமே செயல்படும்படி உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் 14 நாட்கள் மட்டுமே இந்த விண்கலத்தால் நிலவில் ஆய்வு செய்ய முடியும். ஆனால் இந்த சந்திரயான் 4 திட்டத்தின் படி நிலவில் சூரிய வெளிச்சம் இல்லாத நேரத்தில் எப்படி ஆய்வுகளை மேற்கொள்வது என்பதற்காக தனி ரோவர் ஒன்றையும் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இந்த சந்திரயான் 4 திட்டம் இனிதான் முழு வீச்சில் பணியை துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த சந்திரயான் 4 திட்டத்திற்கான லேண்டர், ரோவர்கள் உள்ளிட்ட அனைத்தும் அடுத்த ஒரு சில ஆண்டுகளில் தயாராகி விடும் என தெரிகிறது. இந்தத் திட்டத்தின் படி வரும் 2026 ஆம் ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டிற்குள் சந்திரயான் 4 திட்டத்தை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா இந்த விண்வெளி ஆய்வு மையத்தில் புதிய மைல் கல்லை எட்டி உள்ள நிலையில் இனி அடுத்தடுத்து மிகப்பெரிய வளர்ச்சிகளை சந்திக்க போகிறது. இதற்காக சர்வதேச அளவில் ஜப்பானுடன் கூட்டுறவு வைத்து அடுத்த கட்ட சந்திரன் குறித்த ஆய்வுகளை செய்து வருகிறது. இதற்கிடையில் ஆதித்யா எல்1 விண்கலத்தையும் தயாரித்து வருகிறது .இது சூரியனை ஆய்வு செய்ய விரைவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது


Click it and Unblock the Notifications








