டிரெயின் டிக்கெட்டை கேன்சல் செய்தால் எந்த நேரத்தில் எவ்வளவு கட்டணம் பிடிக்கப்படும்?.. பலருக்கு தெரியாத தகவல்!
ஆசியாவிலேயே மிகப் பெரிய போக்குவரத்து வலையமைப்பைக் கொண்ட துறையாக இந்தியன் ரயில்வேஸ் உள்ளது. இதன் சேவையை பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது என கூறிவிடலாம். அப்படியே இருப்பார்கள் எனில் அவர்கள் சொற்ப அளவிலேயே இருப்பார்கள் என உறுதியாக கூறலாம். டிக்கெட்டின் விலை குறைவு, பயண நேரமும் குறைவு மற்றும் உரிய நேரத்தில் சென்று சேர முடியும் என்பதனால் பலர் ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சேவையில் சில கசப்பான விஷயங்களும் உள்ளன. கேன்சல் செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு கணிசமான அளவு தொகையை இந்தியன் ரயில்வேஸ் அபராதமாக பிடித்துக் கொள்வதே பலரும் விரும்பாத செயலாக இருக்கின்றது. தங்களுக்கு எந்த வகையிலும் நஷ்டம் ஏற்பட்டு விடக்கூடாது என்கிற காரணத்திற்காகவே குறிப்பிட்ட அளவு தொகையை இந்தியன் ரயில்வேஸ், டிக்கெட்டை ரத்து செய்யும்போது கட்டணமாக பிடித்துக் கொள்கின்றது.

கன்ஃபார்ம் டிக்கெட், ஆர்ஏசி அல்லது காத்திருப்பு டிக்கெட் என எதுவாக இருந்தாலும் அதை கேன்சல் செய்யும்பட்சத்தில் அதற்கான அபராதம் வசூலிக்கப்படுகின்றது. அபராதம் வசூலிக்கப்பட்டு மீதம் இருக்கும் தொகையே டிக்கெட்டை புக் செய்த பயணிக்கு திரும்ப வழங்கப்படுகின்றது. இந்த கட்டணம் பிடித்தல் எதன் அடிப்படையில், எவ்வளவு வரை பிடிக்கப்படுகின்றது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.
டிக்கெட் கேன்சலஷேனுக்கான கட்டணம், நேரம், காலம் மற்றும் வகுப்பு ஆகியவற்றைப் பொருத்தே வசூலிக்கப்படுகின்றன. செகண்ட் சீட்டர், செகண்ட் கிளாஸ் ஸ்லீப்பர், ஏசி ஃபர்ஸ்ட் கிளாஸ், ஏசி சேர் கேர் என பல வகைகளில் ரயில் வகுப்புகள் உள்ளன. இவற்றின் அடிப்படையிலும் கட்டணம் பிடித்தம் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

உதாரணமாக 48 மணி நேரத்திற்கு முன்னதாக கன்ஃபார்மான டிக்கெட்டை ரத்து செய்கின்றோம் என்றால் அதற்கான கட்டணமாக ரூ. 60 பிடித்தம் செய்யப்படும். இந்த தொகைக் கழிக்கப்பட்டு மீதம் உள்ள தொகை பயணியின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வழங்கப்படும். ஒருவேளை டிக்கெட் கவுண்டரில் ரத்து செய்யப்படுகின்றது என்றால் ரொக்கமாக கைகளில் வழங்கப்படும்.
இந்த தொகை பிடித்தமான செகண்ட் கிளாஸுக்கு மட்டுமே பொருந்தும். வகுப்புகள் மாற மாற கட்டணமும் கணிசமாக உயரும். அந்தவகையில், கன்ஃபார்ம் செய்யப்பட்ட ஏசி2 டைர்/ ஃப்ர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட்டுகளுக்கு ரூ. 200 கட்டணமும், ஏசி 3 டைர், ஏசி சேர் கேர், ஏசி - 3 எக்கனாமி ஆகிய வகுப்புகளுக்கு, டிக்கெட் ரத்து கட்டணமாக ரூ. 180 வசூலிக்கப்படும்.

இதே கேன்சலேஷன் கட்டணம் 48 மணிக்கும் குறைவாக, 12 மணி நேரத்திற்கும் மேலாக இருந்தால் லேசாக மாறுபடும். இந்த நேரத்தில் டிக்கெட் தொகையில் இருந்து சுமார் 25 சதவீதம் வரை கேன்சலுக்கான அபராதமாக பிடித்தம் செய்யப்படும். அதுவே, நீங்கள் 12 மணி நேரத்திற்கும் குறைவாக மற்றும் 4 மணி நேரத்திற்கும் அதிகமான நேரத்தில் டிக்கெட்டை ரத்து செய்கிறீர்கள் எனில் 50 சதவீதம் வரை அபராதமாக கழிக்கப்படும்.
இந்த கழித்தல்கள் அனைத்து வகுப்புகளுக்குமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆர்ஏசி அல்லது வெயிட்டிங் லிஸ்டில் உள்ள டிக்கெட்டை ரயில் கிளம்பும் அரை மணி நேரம் முன்னதாக கேன்சல் செய்தால் முழு தொகையும் ரிட்டர்ன் வழங்கப்படும். இந்த நிலையில் அந்தளவு நஷ்டம் ஏற்படாது என்கிற காரணத்தினால் முழு டிக்கெட் தொகையும் ரிட்டன் வழங்கப்படுகின்றது.

இதன் வாயிலாக இந்தியன் ரயில்வேஸுக்கு, ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்வதன் வாயிலாகவும் கணிசமான அளவு தொகை லாபம் கிடைத்து வருவதை நம்மால் உணர முடிகின்றது. 2022-23 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் இந்தியன் ரயில்வேஸ் 48 ஆயிரத்து 913 கோடி வருவாயை பெற்றிருக்கின்றது. முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் இது அதிக வருவாய் என்பது குறிப்பிடத்தகுந்தது.
2022-23 க்கு முந்தைய நிதியாண்டில் 28,569 கோடி வருவாயை மட்டுமே இந்தியன் ரயில்வேஸ் ஈட்டி இருந்தது. 2022 ஏப்ரல் 1 தொடங்கி 31 டிசம்பர் 2022 வரை 59.61 கோடி பயணிகள் முன் பதிவு செய்திருக்கின்றனர். முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 6சதவீதம் உயர்வு ஆகும். இதுதவிர, முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் வாயிலாகவும் பல கோடி பயணிகள் ஆண்டு தோறும் பயணித்து வருகின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









