10 நிமிடத்தில் இவி காரை 100% சார்ஜ் ஏற்றலாம்! உலகை மிரள விட்ட இந்திய விஞ்ஞானி!
இந்தியாவைச் சேர்ந்த ஆய்வாளர் அங்கூர் குப்தா உலகையே மிரள வைக்கும் பேட்டரி சார்ஜிங் தொழில்நுட்பம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இந்த தொழில்நுட்பம் மூலம் சார்ஜ் செய்தால் எலெக்ட்ரிக் கார்கள் எல்லாம் பத்து நிமிடத்தில் சார்ஜ் ஏறிவிடும். செல்போன் லேப்டாப் எல்லாம் ஒரே நிமிடத்தில் சார்ஜ் ஏறிவிடும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் தற்போது எலெக்ட்ரிக் கார்களின் மோகம் அதிகமாகி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வாகன தயாரிப்பாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி தங்கள் தயாரிப்புகளை நகர்த்த துவங்கிவிட்டனர். இதற்கு முக்கியமான காரணம் மாசு வெளியீடு தான். பெட்ரோல் டீசல் வாகனங்கள் அதிகமான மாசுகளை வெளியிட்டு வருகிறது.

புவி வெப்பமயமாதலுக்கு உலகம் முழுவதும் இயங்கும் வாகனங்களில் இருந்து வெளியேறும் மாசு மிக முக்கியமான காரணமாக இருப்பதால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே தயாரிக்க வேண்டும் என்ற கொள்கையில் தற்போது இந்த மாற்றங்களை செய்து வருகின்றன. தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதில் இருக்கும் மிகப்பெரிய சிக்கல் சார்ஜிங் தொழில்நுட்பம் தான்.
தற்போது உள்ள சார்ஜிங் தொழில்நுட்பத்தின் படி ஒரு முழு எலெக்ட்ரிக் காரை சார்ஜ் ஏற்ற பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. சில வாகனங்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன் வழங்கப்பட்டாலும் அதன் மூலம் சார்ஜ் ஏற்றினால் பேட்டரியின் வாழ்நாள் குறையும் அபாயமும் இருக்கிறது. பெட்ரோல் டீசல் கார் போல இந்த சார்ஜிங் பிரச்சனை இருப்பதால் எலெக்ட்ரிக் கார்களை நீண்ட தூரம் எடுத்துச் செல்ல முடியாது.

இதற்கு தீர்வு வழங்கும் வகையில் இந்தியாவைச் சேர்ந்த ஆய்வாளர் அங்கூர் குப்தா என்பவர் தனது குழுவினருடன் சேர்ந்து புதிய சார்ஜிங் தொழில்நுட்பம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இந்த சார்ஜிங் தொழில்நுட்பம் மூலம் சார்ஜ் ஏற்றுவதன் மூலம் எலெக்ட்ரிக் கார்களை பெரும் 10 நிமிடத்தில் முழு பேட்டரியையும் சார்ஜ் செய்துவிட முடியும் அதே நேரத்தில் செல்போன் லேப்டாப் போன்ற கருவிகளையும் வெறும் ஒரே நிமிடத்தில் சார்ஜ் ஏற்றி விட முடியும்.
இந்த தொழில்நுட்பம் தற்போது அதிகம் பயன்படுத்தப்படும் லித்தியம் அயான் பேட்டரிகளில் தான் பயன்படுத்த முடியும் தொழில்நுட்பமாக இருக்கிறது. இந்த பேட்டரிகள் சார்ஜ் ஆவதற்கு பேட்டரிக்குள் இருக்கும் போர் என்ற விஷயம் மிக முக்கியமானதாக இருக்கிறது. தற்போது இருக்கும் பேட்டரி சார்ஜிங் தொழில்நுட்பத்தில் ஒரே நேரத்தில் ஒரு மூலம் போர் மட்டுமே சார்ஜ் ஏற்ற பயன்படும்.

இதனால் வரிசையாக ஒவ்வொரு போராக சார்ஜ் ஏற்ற அதிக நேரம் எடுக்கும். இதனால் தான் தற்போது பேட்டரியை சார்ஜ் ஏற்ற அதிக நேரம் நாம் சார்ஜ் போட வேண்டிய தேவை இருக்கிறது. எவ்வளவு அதிக மின்சாரம் வந்தாலும் பேட்டரி குறைவான சார்ஜையே தன்னூள் எடுத்துக் கொள்வதால் இந்த நேரம் ஆகிறது. இதற்கு மாற்று வழியை தான் இந்த ஆய்வு குழு கண்டுபிடித்துள்ளது.
அதன்படி இந்த ஆய்வுக்குழு ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கி அந்த தொழில்நுட்பத்தின் மூலம் சார்ஜ் ஏற்றினால் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான போர்கள் மூலம் சார்ஜ் ஏற்ற முடியும் என நிரூபணம் செய்துள்ளது.இப்படியாக சார்ஜ் ஏற்றினால் தற்போது இருக்கும் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தின் படி பேட்டரியின் ஆயுள் குறையாமல் இருக்கும். பேட்டரியும் வேகமாக சூடாகாமல் இருக்கும்.
மெதுவாக சார்ஜ் ஏற்றும் தொழில்நுட்பத்தில் எப்படி சார்ஜ் ஏறி நீண்ட நேரம் நமக்கு சார்ஜ் கிடைக்கிறதோ அதேபோல இந்த புதிய தொழில்நுட்பத்திலும் சார்ஜ் விரைவாக ஏறி நீண்ட நேரம் சார்ஜ் கிடைக்கும். இந்த தொழில்நுட்பத்திற்கு சூப்பர் கெப்பாஸிட்டர் என அவர்கள் பெயர் வைத்துள்ளார்கள். இந்த சூப்பர் கெபாஸிட்டர்களை பயன்படுத்தி எதிர் காலத்தில் பேட்டரிகள் தயாரிக்கப்படலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய ஆராய்ச்சியாளர் அங்கூர் குப்தா கண்டுபிடித்த இந்த விஷயத்தை செயல்முறையில் சாத்தியமாக்கி விட்டால் அடுத்த பேட்டரி தயாரிக்கும் நிறுவனங்கள் எல்லாம் இந்த சூப்பர் கெப்பாசிட்டர் மூலம் பேட்டரிகளை தயாரிப்பார்கள் இதனால் பேட்டரிகளை மிக விரைவாக சார்ஜ் ஏற்ற முடியும். இது எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகன உலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தலாம்


Click it and Unblock the Notifications









