உலகிலேயே மிக பெரிய எஞ்சின் கொண்ட வாகனம் எது தெரியுமா? நீங்க நெனக்குறதவிட பெருசு, எடையும் அதிகம்!!
எஞ்சின்கள், இதுவே வாகனங்களின் இதயம் ஆகும். இது சீராக இயங்கினால் நம்முடைய பயணம் சிறந்ததாக இருக்கும். பைக், கார், ஆட்டோ, ரயில், விமானம் மற்றும் ராக்கெட்டுகள் கூட எஞ்சினாலேயே இயங்குகின்றன. இதனால்தான் எஞ்சின்கள் வாகனங்களின் இதயம் என்று கூறுகின்றனர். இத்தகைய எஞ்சினை நாம் நம்ப முடியாத அளவிற்கு மிகப் பெரிய உருவத்தில் தயாரித்திருப்பதை பற்றி நீங்கள் கேள்விப்பட்டது உண்டா?
இந்த பதிவில் அதுபற்றிய தகவலையே பார்க்க இருக்கின்றோம். அதாவது, இதுவரை கார், பைக், ரயில் என அனைத்து விதமான வாகனங்களிலும் பயன்படுத்தப்பட்ட மிகப் பெரிய எஞ்சின்கள் பற்றியும் அந்த எஞ்சினின் திறன் பற்றிய தகவலையுமே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

உலகின் மிகப் பெரிய மோட்டார்சைக்கிள் எஞ்சின் (The Largest Motorcycle Engine In The World): உலகிலேயே மிகப் பெரிய எஞ்சின் பைக் மாடலாக டிரையம்ப் நிறுவனத்தின் ராக்கெட் 3 ஸ்போர்ட்ஸ் இருக்கின்றது. இதில் 2500 சிசி எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதனால் 165 பிஎச்பி பவர் வரை வெளியேற்ற முடியும். மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 226 கிமீ ஆகும்.
இதுதவிர, வெறும் 2.73 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும். இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தைக் கூடிய திறன் கொண்டதே ராக்கெட் 3 ஸ்போர்ட்ஸ் ஆகும். இது உலகின் மிக சிறந்த ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு டஃப் கொடுக்கும் அதிக வேகம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பைக்கில் டிராக்சன் கன்ட்ரோல், ஏபிஎஸ், க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற நவீன கால வசதிகள் பல வழங்கப்பட்டு இருக்கின்றன.

உலகின் மிகப் பெரிய கார் எஞ்சின் (The Largest Car Engine In The World): நம்மில் பலர் புகாட்டி சிரோன் காரில் பயன்படுத்தப்பட்ட 8.0 லிட்டர் டபிள்யூ16 எஞ்ஜினையும், டாட்ஜ் வைப்பர் காரில் பயன்படுத்தப்பட்ட 8.4 லிட்டர் வி10 எஞ்ஜினையுமே இதுவரை கார்களில் பயன்படுத்தப்பட்ட உலகின் மிகப் பெரிய எஞ்சினாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இதைவிட பெரிய எஞ்ஜின் கார்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
ஃபியாட் காரிலேயே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஃபியாட் எஸ்76 கார் மாடலிலேயே அந்த பெரிய எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. 1910 ஆம் ஆண்டிலேயே இந்த கார் மாடல் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இது 23.5 லிட்டர் எஞ்ஜின் ஆகும். 4 சிலிண்டர் கான்ஃபிகரேஷன் கொண்டதே இந்த எஞ்சின் ஆகும். இது அதிகபட்சமாக 290 பிஎச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டது ஆகும்.

உலகின் மிகப் பெரிய ரயில் எஞ்சின் (The Largest Locomotive Engine In The World): பசிபிக் பிக்-பாய் லோகோமோடிவே உலகின் மிகப் பெரிய எஞ்சின் கொண்ட ரயில் ஆகும். இதனை வடிவமைத்தது அமெரிக்காவைச் சேர்ந்த லோகோமோட்டீவ் நிறுவனம் ஆகும். இதுவே இதுவரை தயாரித்ததிலேயே மிகப் பெரிய எஞ்சின் கொண்ட ரயில் ஆகும். இதன் ஒட்டுமொத்த எடை 604டன் ஆகும். இதனால் 5920பிஎச்பி வரை வெளியேற்ற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
உலகின் மிகப் பெரிய டர்போ-ஃபேன் எஞ்சின் (The Largest Turbofan Engine In The World): விமானங்களிலேயே டர்போ ஃபேன் எஞ்சின் பயன்படுத்தப்படுகின்றது. அந்தவகையில், உலகின் மிகப் பெரிய டர்போ எஞ்சின் போயிங் 777 விமானத்திலேயே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் எடை 8.3 டன் ஆகும்.

மேலும், 5 மீட்டர் நீளம் கொண்டதாகவும் அந்த எஞ்சின் காட்சியளிக்கின்றது. கற்பனைச் செய்ய முடியாத அளவு பெரியதாக அது இருக்கின்றது. இத்தகைய பெரிய எஞ்சினைக் கொண்டே போயிங் 777 விமானம் வானில் வட்டமடிக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எஞ்சின் 1,27,900 ஐபிஎஸ் திறன் கொண்டது ஆகும்.
உலகின் மிகப் பெரிய ராக்கெட் எஞ்சின் (The Largest Rocket Engine In The World): சாடர்ன் வி ராக்கெட்டில் பயன்படுத்தப்பட்ட சிங்கிள் சேம்பர் லிக்யூட்-புரபல்லன்டே உலகின் மிகப் பெரிய ராக்கெட் எஞ்சின் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுவே உலகின் மிக அதிக திறனை வெளியேற்றக் கூடிய எஞ்சின் ஆகும்.

இந்த ராக்கெட் வாயிலாகவே முதல் முறையாக நிலவிற்கு மனிதர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அதாவது, நீல் ஆம்ஸ்ட்ராங் இந்த ராக்கெட் வாயிலாகவே பயணித்தா். ஒவ்வொரு ராக்கெட்டும் 5.8 மீட்டர் உயரம் கொண்டதாகும் மற்றும் ஒவ்வொரு ராக்கெட்டும் தனித்துவமாக 54,250 பிஎச்பி வரை வெளியேற்றும்.
உலகின் மிகப் பெரிய எஞ்சின் (The Largest Engine In The World): மேலே பார்த்த அனைத்து எஞ்சின்களைக் காட்டிலும் மிக மிகப் பெரிய எஞ்சினே வார்ட்சிலா-சுல்ஸர் ஆர்டிஏ96-சி ஆகும். இது பின்லாந்து நாட்டைச் சேர்ந்த வார்ட்சிலா கார்பரேஷன் எனும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது ஆகும். இந்த எஞ்சின் கப்பலுக்கானது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Image Courtesy: National Air and Space Museum ஆமாங்க, உலகின் மிகப் பெரிய எஞ்சினை கப்பலே தாங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த எஞ்சின் 1 லட்சம் பிஎச்பி வரை வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய பிரமாண்ட எஞ்சினின் எடை 2300 டன் ஆகும். மேலும், இதன் நீளம் 26 மீட்டரும், உயரம் 13 மீட்டராகவும் இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்தவையே உலகின் மிகப் பெரிய எஞ்சின்கள் ஆகும். இதைவிட பெரிய எஞ்சினை வேறு எங்கும் பார்க்க முடியாது. இந்த எஞ்சின்கள் ஒவ்வொன்றும் நாம் நம்ப முடியாத அளவிற்கு பெரியதாகவும், திறனை வெளியேற்றக் கூடியதாகவும் காட்சியளிக்கின்றன. இதனால், இப்போதும் அவை உலக அதிசயமாக காட்சியளிக்கின்றன.


Click it and Unblock the Notifications









