20 கோடி ரூபாய் காரை அசால்ட்டா அனாதை போல் விட்டு செல்லும் பிரபலம்! எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கா?
கோர்டன் ராம்சே (Gordon Ramsay), பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த பிரபல சமையல் நிபுணர். கோர்டன் ராம்சே இந்த பெயரை கேள்விப்படாதவர்கள் கூட, இவரது முகத்தை அவ்வப்போது தொலைக்காட்சியிலும், சமூக வலைத்தளங்களிலும் பார்த்திருப்பீர்கள். இங்கிலாந்தை சேர்ந்தவராக இருப்பினும், இந்தியா வரையில் பிரபலமாகி இருப்பதில் இருந்தே அறியலாம், கோர்டன் ராம்சே எந்த அளவிற்கு செல்வ செழிப்பில் திளைக்கிறார் என்பதை. இவர் 1997இல் நிறுவிய கோர்டன் ராம்சே உணவகங்களின் கீழ் பல்வேறு உணவகங்கள் இங்கிலாந்தில் செயல்படுகின்றன. அவற்றுள் பல உணவகங்கள் சிறந்த உணவு வகைகளுக்காக விருதுகளை பெற்றுள்ளன.
உணவகங்களை நடத்துவது மட்டுமின்றி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் மற்றும் எழுத்தாளராகவும் கோர்டன் ராம்சே திகழ்கிறார். இதன் மூலமாக செல்வ செழிப்பில் திகழும் கோர்டன் ராம்சேவிடம் ஃபெராரி (Ferrari) கார் ஒன்று உள்ளது. இந்த நிலையில் அந்த ஃபெராரி காருடன் கோர்டன் ராம்சே காட்சியளிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

கோர்டன் ராம்சேவிடம் இருப்பது ஃபெராரி டேடோனா எஸ்பி3 (Daytona SP3) கார் ஆகும். இந்த காரில் இலண்டன் சாலைகளில் இவர் சுற்றி திரிந்த போது எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த விலையுயர்ந்த ஃபெராரி காரை கோர்டன் ராம்சே மாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டுமே பயன்படுத்துகிறாராம்.
அதாவது, நாள் முழுக்க சாலையின் ஓரத்தில் இந்த கார் நிறுத்தி வைக்கப்படுகிறது. அவ்வாறு, இரவு நேரத்தில் காரை எடுக்க கோர்டன் ராம்சே வந்த போது காட்சிப்படுத்தப்பட்ட வீடியோ தான் தற்போது வெளியாகி உள்ளது. மேலும், இந்த வீடியோவில் பரபரப்பான இலண்டன் சாலைகளில் கோர்டன் ராம்சே தனது ஃபெராரி காரை ஓட்டும் காட்சிகளையும் பார்க்க முடிகிறது.

ஃபெராரி டேடோனா எஸ்பி3 காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், உலகளவில் இது மொத்தமாக வெறும் 599 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால், உலகின் மிகவும் அரிதான ஃபெராரி கார்களுள் ஒன்றாக இதனை சொல்லலாம். 1967ஆம் ஆண்டில் பிரபலமான 24 ஹவர்ஸ் ஆஃப் டேடோனா போட்டியில் முதல் 3 இடங்களை ஃபெராரி கார்கள் பிடித்ததை நினைவுக்கூறும் விதமாக, இந்த காருக்கு டேடோனா எஸ்பி3 என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இது பின்பக்கத்தில் என்ஜினை கொண்ட ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். ஸ்பெஷல் எடிசன் கார்களில் பின்பக்கத்தில் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் என்ஜினை கொண்ட முதல் கார், டேடோனா எஸ்பி3 ஆகும். இந்த ஃபெராரி ஸ்போர்ட்ஸ் காரில் பொருத்தப்படும் 6.5 லிட்டர் வி12 என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 840 பிஎஸ் மற்றும் 697 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இந்த காரில் என்ஜின் உடன் 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. லேஃபெராரி அபெர்டா சேசிஸில் உருவாக்கப்பட்ட இந்த டேடோனா எஸ்பி3 கார், எடையை குறைக்கும் பொருட்டு கார்பன் ஃபைபர் எலிமெண்ட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 2.85 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த ஃபெராரி காரின் மதிப்பு ஏறக்குறைய சுமார் ரூ.20 கோடி ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.20 கோடியில் கார் என்பது நமக்கு வேண்டுமாயின் ஆச்சிரியமாக இருக்கலாம், ஆனால் பிரிட்டிஷ் மக்களுக்கு அவர்கள் வழக்கமாக வாங்கும் கார்களை விட இதனை விலை கொஞ்சம் அதிகம் அவ்வளவுதான். இருப்பினும், இத்தகைய காரை சர்வ சாதாரணமாக சாலையின் ஓரத்தில் கோர்டன் ராம்சே நிறுத்தி வைக்கிறார்.


Click it and Unblock the Notifications









