விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய சமையல்காரர்... அந்த யூடியூப் சேனலை இவர்தான் நடத்திகிட்டு இருக்கறாரா!

இன்று சினிமா நடிகர்களுக்கு இணையான ரசிகர்கள் பட்டாளத்தை ஒரு சில யூடியூபர்கள் (Youtuber​s) கொண்டுள்ளனர். அரசியல், நகைச்சுவை, அறிவியல் என பல பிரிவுகளில் யூடியூபர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த வரிசையில் சமையல் தொடர்பான தகவல்களை வழங்கும் யூடியூபர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே சமையல் கலை வல்லுனர்கள் பலர் தற்போது, யூடியூபர்களாக மாறி வருகின்றனர். அப்படி மாறிய ஒருவர்தான், செஃப் சமீம். Chef Shameem's Varieties என்ற யூடியூப் சேனலை இவர் நடத்தி கொண்டுள்ளார். சமையல் கலை வல்லுனர், யூடியூபர் ஆகியவற்றுடன், ரெஸ்டாரெண்ட் உரிமையாளர் என்கிற முகமும் இவருக்கு உண்டு.

கேரள மாநிலத்தை சேர்ந்த இவருக்கு, சமூக வலை தளங்களில் தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இவர் தற்போது புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்1 (BMW iX1) ஆகும். குடும்பத்துடன் ஷோரூமிற்கு நேரடியாக சென்று, செஃப் சமீம் இந்த காரை டெலிவரி எடுத்து வந்துள்ளார்.

Chef Shameem Buys BMW iX1 Electric Car

அந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. செஃப் சமீம் வாங்கியுள்ள பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்1 ஒரு எலெக்ட்ரிக் கார் (Electric Car) என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்1 எலெக்ட்ரிக் கார் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கிறது.

அவை iX1 LWB மற்றும் iX1 xDrive30 M Sport ஆகியவை ஆகும். இந்த 2 வேரியண்ட்களிலுமே 66.4 kWh பேட்டரி ஆப்ஷன்தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வேரியண்ட்களை பொறுத்து டிரைவிங் ரேஞ்ச் மாறுபடும். அதாவது iX1 LWB வேரியண்ட்டின் டிரைவிங் ரேஞ்ச் 531 கிலோ மீட்டர்கள் ஆகும்.

BMW iX1 Electric Car

அதே நேரத்தில் iX1 xDrive30 M Sport வேரியண்ட்டின் டிரைவிங் ரேஞ்ச் 440 கிலோ மீட்டர்களாக உள்ளது. இது சொகுசு கார் என்பதால், அதிநவீன வசதிகளுக்கு (Features) சற்றும் பஞ்சமில்லை. இதில், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 10.7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

இவை எல்லாம் தவிர, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, ஆம்பியண்ட் லைட்டிங், பனரோமிக் சன்ரூஃப், முன் பகுதியில் மெமரி மற்றும் மசாஜ் வசதியுடன் கூடிய இருக்கைகள் உள்ளிட்ட வசதிகளும் கூட, பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்1 சொகுசு எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளன.

தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் (iX1 LWB) விலை 49 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் (iX1 xDrive30 M Sport) விலை 66.90 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களும் எலெக்ட்ரிக் கார்களை வாங்க தொடங்கியுள்ளனர். இந்தியாவின் சுற்றுச்சூழலுக்கு நன்மையை ஏற்படுத்த கூடிய விஷயம் என்பதால், இது உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 18, 2025, 20:51 [IST]
English summary
Chef shameem buys bmw ix1 electric car viral video check all details here
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+