13 வயது சிறுவனை வாகனம் ஓட்ட அனுமதித்ததால் நடந்த விபரீதம்... பெற்றோர் மீது நடவடிக்கை பாய்கிறது?

சென்னை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தை உலுக்கிய வீடியோ... கோர விபத்தில் சிறுவன் பலியானதற்கு காரணம் இதுதான்... தந்தை சிக்குகிறார்

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள நல்லூர் என்ற பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருக்கு ஜெயசீலன் (13) என்ற மகனும், சோனியா (18) என்ற மகளும் உள்ளனர். ஜெயசீலனும், சோனியாவும் நேற்று (மே 10) டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட்டில் வெளியே சென்றனர்.

தமிழகத்தை உலுக்கிய வீடியோ... கோர விபத்தில் சிறுவன் பலியானதற்கு காரணம் இதுதான்... தந்தை சிக்குகிறார்

அதன்பின் மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தனர். இரு சக்கர வாகனத்தை ஜெயசீலன் ஓட்டி வந்தார். சோனியா பின்னால் அமர்ந்து வந்து கொண்டிருந்தார். இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தை உலுக்கிய வீடியோ... கோர விபத்தில் சிறுவன் பலியானதற்கு காரணம் இதுதான்... தந்தை சிக்குகிறார்

ஆனால் ஜெயசீலனும், சோனியாவும் ஹெல்மெட் அணியவில்லை. இதுதவிர 13 வயது மட்டுமே நிரம்பிய ஜெயசீலன் இரு சக்கர வாகனத்தை ஓட்டியதே முதலில் தவறுதான். 18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே வாகனங்களை இயக்க முடியும் என இந்தியாவின் மோட்டார் வாகன சட்டம் கூறுகிறது.

தமிழகத்தை உலுக்கிய வீடியோ... கோர விபத்தில் சிறுவன் பலியானதற்கு காரணம் இதுதான்... தந்தை சிக்குகிறார்

அதுவும் முறைப்படி டிரைவிங் லைசென்ஸ் பெற்றுதான் வாகனங்களை இயக்க வேண்டும். ஆனால் இந்த விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல் வாகனத்தை இயக்கிய ஜெயசீலன் கொடூரமான சாலை விபத்து ஒன்றில் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தை உலுக்கிய வீடியோ... கோர விபத்தில் சிறுவன் பலியானதற்கு காரணம் இதுதான்... தந்தை சிக்குகிறார்

ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ள இந்த விபத்து தொடர்பாக தந்தி டிவி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சூழலில் இந்த விபத்து தொடர்பாக சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயசீலனும், சோனியாவும் வடகரை சிக்னல் சந்திப்பு அருகே வந்து கொண்டிருந்தபோது முன்னால் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

தமிழகத்தை உலுக்கிய வீடியோ... கோர விபத்தில் சிறுவன் பலியானதற்கு காரணம் இதுதான்... தந்தை சிக்குகிறார்

அப்போது டேங்கர் லாரியின் இடது பக்கத்தில் (Left Side) இடைவெளி இருந்தது. இதனை பயன்படுத்தி கொண்டு டேங்கர் லாரியை முந்தி செல்ல ஜெயசீலன் முயன்றார். ஆனால் அது சிறிய அளவிலான இடைவெளி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ: அதிர்ச்சி... தமிழக காருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்த தெலங்கானா போலீஸ்: எதற்கு தெரியுமா?

தமிழகத்தை உலுக்கிய வீடியோ... கோர விபத்தில் சிறுவன் பலியானதற்கு காரணம் இதுதான்... தந்தை சிக்குகிறார்

அத்துடன் அங்கு மணல் மற்றும் கற்கள் சிதறி கிடந்தன. இதன் காரணமாக ஜெயசீலனும், சோனியாவும் நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்தனர். அப்போது டேங்கர் லாரியின் பின் சக்கரம் ஜெயசீலன் மீது ஏறியது. இதில், ஜெயசீலன் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார்.

தமிழகத்தை உலுக்கிய வீடியோ... கோர விபத்தில் சிறுவன் பலியானதற்கு காரணம் இதுதான்... தந்தை சிக்குகிறார்

ஆனால் இந்த விபரீதத்தை டேங்கர் லாரியின் டிரைவர் கவனிக்கவில்லை. எனவே அந்த சாலையில் பயணம் செய்து கொண்டிருந்த இதர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் டேங்கர் லாரியை நிறுத்துமாறு குரல் எழுப்பினர். இதன்பின்பே லாரி நின்றது.

MOST READ: கை காட்டி நிறுத்த முயன்ற போலீஸ்காரர் மீது டூவீலரை ஏற்றிய இளைஞர்... தெரிந்தே செய்த வீடியோ வைரல்...

தமிழகத்தை உலுக்கிய வீடியோ... கோர விபத்தில் சிறுவன் பலியானதற்கு காரணம் இதுதான்... தந்தை சிக்குகிறார்

ஆனால் அதற்குள் ஜெயசீலன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனிடையே இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்த ஜெயசீலனின் அக்கா சோனியா, இந்த கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார். இருந்தபோதும் அவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தை உலுக்கிய வீடியோ... கோர விபத்தில் சிறுவன் பலியானதற்கு காரணம் இதுதான்... தந்தை சிக்குகிறார்

முன்னதாக தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் ஜெயசீலனின் உடலை கைப்பற்றிய போலீசார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

MOST READ: துடிப்பான வயதில் பிரம்மிக்கும் செயலை செய்த இளைஞர்: அவர் பாராட்டு மழையில் நனைய காரணம் இதுதான்!

தமிழகத்தை உலுக்கிய வீடியோ... கோர விபத்தில் சிறுவன் பலியானதற்கு காரணம் இதுதான்... தந்தை சிக்குகிறார்

அத்துடன் லாரி டிரைவரிடமும் போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர். இதில், அவரது பெயர் முருகானந்தம் (37) என்பது தெரியவந்தது. இதன்பின் கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும் லாரியை இயக்கியதற்காக அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

தமிழகத்தை உலுக்கிய வீடியோ... கோர விபத்தில் சிறுவன் பலியானதற்கு காரணம் இதுதான்... தந்தை சிக்குகிறார்

ஜெயசீலனும், சோனியாவும் கீழே விழுவதை ரியர் வியூ மிரர் (Rearview Mirror) மூலமாக லாரி டிரைவர் கவனித்திருந்தால், இவ்வளவு பெரிய விபரீதம் அரங்கேறியிருக்காது என போலீசார் கூறினர். இதனிடையே ஜெயசீலனின் தந்தை செல்வத்தின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தமிழகத்தை உலுக்கிய வீடியோ... கோர விபத்தில் சிறுவன் பலியானதற்கு காரணம் இதுதான்... தந்தை சிக்குகிறார்

உரிய வயதை எட்டும் முன்பே ஜெயசீலனை இரு சக்கர வாகனம் ஓட்ட அனுமதித்ததற்காக செல்வம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தை உலுக்கிய வீடியோ... கோர விபத்தில் சிறுவன் பலியானதற்கு காரணம் இதுதான்... தந்தை சிக்குகிறார்

இதனிடையே இந்த கொடூர விபத்தை தொடர்ந்து, வாகன ஓட்டிகள் சிலர் போராட்டத்தில் குதித்தனர். அந்த பகுதியில் லாரி டிரைவர்கள் கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டுவதாகவும், இதன் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை உலுக்கிய வீடியோ... கோர விபத்தில் சிறுவன் பலியானதற்கு காரணம் இதுதான்... தந்தை சிக்குகிறார்

முன்னதாக ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்தியாவில் 18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே வாகனங்களை இயக்க முடியும். ஆனால் 50 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களை மட்டும் 16 வயது நிரம்பியர்கள் கூட இயக்கலாம்.

தமிழகத்தை உலுக்கிய வீடியோ... கோர விபத்தில் சிறுவன் பலியானதற்கு காரணம் இதுதான்... தந்தை சிக்குகிறார்

இருந்தபோதும் இத்தகைய விதிமுறைகள் எதையும் யாரும் கடைபிடிப்பது இல்லை. மிக இளம் வயதிலேயே வாகனம் ஓட்டுவது என்பது பெருமையாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஒரு சில பெற்றோர்களே தங்கள் குழந்தைகளை இளம் வயதிலேயே வாகனங்களை ஓட்டு ஊக்குவிக்கின்றனர்.

தமிழகத்தை உலுக்கிய வீடியோ... கோர விபத்தில் சிறுவன் பலியானதற்கு காரணம் இதுதான்... தந்தை சிக்குகிறார்

இதன் மூலமாக தங்கள் குழந்தை சுதந்திரமாக இருப்பதாகவும் வேறு அவர்கள் நினைத்து கொள்கின்றனர். இது போன்ற காரணங்களால் இந்தியாவில் சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது நீங்கள் நினைத்து கூட பார்க்க முடியாத வகையில் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

தமிழகத்தை உலுக்கிய வீடியோ... கோர விபத்தில் சிறுவன் பலியானதற்கு காரணம் இதுதான்... தந்தை சிக்குகிறார்

தலைநகர் டெல்லியில் மட்டும், உரிய வயதை எட்டாமல் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை வெறும் 5 ஆண்டுகளில் (2013-2018), 589 சதவீதம் அதிகரித்துள்ளது. டெல்லி போக்குவரத்து போலீசாரின் புள்ளி விபரங்கள் மூலம் இந்த அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்துள்ளது.

தமிழகத்தை உலுக்கிய வீடியோ... கோர விபத்தில் சிறுவன் பலியானதற்கு காரணம் இதுதான்... தந்தை சிக்குகிறார்

கடந்த 2013ம் ஆண்டில் பெரும்பாலும் 15-16 வயதுடையவர்கள் மட்டுமே விதிமீறி வாகனங்களை இயக்கி கொண்டிருந்தனர். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில், 13-14 வயது மட்டுமே நிரம்பியர்கள் கூட விதிமீறி வாகனங்களை இயக்கும் வகையில் சூழல் மாறியுள்ளது.

தமிழகத்தை உலுக்கிய வீடியோ... கோர விபத்தில் சிறுவன் பலியானதற்கு காரணம் இதுதான்... தந்தை சிக்குகிறார்

இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால் வெறும் 11 வயது நிரம்பிய சிறுவர்கள் கூட சில சமயங்களில் வாகனங்களை இயக்கி வருவதாக போலீசார் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். பெற்றோர்களுக்கு தெரியாமல் இவர்கள் வாகனங்களை இயக்கியிருக்கலாம் அல்லவா? என நீங்கள் நினைக்கலாம்.

தமிழகத்தை உலுக்கிய வீடியோ... கோர விபத்தில் சிறுவன் பலியானதற்கு காரணம் இதுதான்... தந்தை சிக்குகிறார்

ஆனால் நாங்கள் வாகனங்களை இயக்குவது எங்கள் பெற்றோர்களுக்கு தெரியும் என 96.4 சதவீத சிறுவர்கள் ஒப்புக்கொள்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எனவே முதலில் மாற வேண்டியது பெற்றோர்கள்தான்.

தமிழகத்தை உலுக்கிய வீடியோ... கோர விபத்தில் சிறுவன் பலியானதற்கு காரணம் இதுதான்... தந்தை சிக்குகிறார்

உரிய வயதை எட்டாமல் வாகனங்களை இயக்குவதால், தங்கள் பிள்ளைகளுக்கு மட்டுமல்லாது, சாலையில் செல்லும் இதர வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்து நேரும் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். பெற்றோர்களுக்கு சிறை உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகள் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம்.

தமிழகத்தை உலுக்கிய வீடியோ... கோர விபத்தில் சிறுவன் பலியானதற்கு காரணம் இதுதான்... தந்தை சிக்குகிறார்

அத்துடன் வாகனங்களை விடுவிப்பதற்கு முன்பாக மிக கடுமையான அபராதங்களை விதிக்க வேண்டும். பெரும்பாலும் பள்ளி மாணவர்கள்தான் கண்மூடித்தனமாக வாகனங்களை இயக்குகின்றனர். அவர்கள் வாகனங்களில் வருவது பள்ளி நிர்வாகங்களுக்கு தெரியவே செய்கிறது.

தமிழகத்தை உலுக்கிய வீடியோ... கோர விபத்தில் சிறுவன் பலியானதற்கு காரணம் இதுதான்... தந்தை சிக்குகிறார்

எனவே மாணவர்கள் பள்ளிக்கு வாகனங்களில் வருவதை தடை செய்தாலும் கூட இந்த பிரச்னையை ஓரளவிற்கு குறைக்கலாம். சிறுவர்கள், பெற்றோர்கள் மற்றும் வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் ஆகியோருக்கு கவுன்சிலிங்கும் வழங்கலாம்.இல்லாவிட்டால் ஜெயசீலன் போன்ற உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
13 Year Old Chennai Boy Riding Two-Wheeler Crushed To Death By Oil Tanker. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more