சென்னையில் குறையும் கொரோனா தொற்று... பின்னணயில் காவல் துறை செய்த அதிரடி... என்னனு தெரியுமா?

சென்னையில் கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக காவல் துறையினர் அதிரடி காட்டி வருகின்றனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சென்னையில் குறையும் கொரோனா தொற்று... பின்னணயில் காவல் துறை செய்த அதிரடி... என்னனு தெரியுமா?

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. குறிப்பாக தமிழகத்தின் முக்கியமான நகரங்களான சென்னை, கோவை போன்ற பகுதிகளில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்து வருகிறது.

சென்னையில் குறையும் கொரோனா தொற்று... பின்னணயில் காவல் துறை செய்த அதிரடி... என்னனு தெரியுமா?

கோவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் தற்போது தளர்வுகள் அற்ற முழுமையான ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக தேவையில்லாமல் யாரும் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது எனவும், அத்தியாவசியமான வேலைகள் இருந்தால் மட்டுமே வெளியே வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் குறையும் கொரோனா தொற்று... பின்னணயில் காவல் துறை செய்த அதிரடி... என்னனு தெரியுமா?

எனினும் ஒரு சிலர் விதிமுறைகளை மீறி தொடர்ந்து வெளியே சுற்றி கொண்டுள்ளனர். அவர்களை கண்காணிப்பதற்காக காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழக தலைநகர் சென்னையில் காவல் துறையினரின் கண்காணிப்பு பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சென்னையில் குறையும் கொரோனா தொற்று... பின்னணயில் காவல் துறை செய்த அதிரடி... என்னனு தெரியுமா?

இதன்படி கோவிட்-19 ஊரடங்கு விதிமுறைகளை மீறியதற்காக சென்னையில் கடந்த சனிக்கிழமையன்று 4,480 பேர் மீது காவல் துறையினர் அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளனர். அத்துடன் கடந்த சனிக்கிழமையன்று 2,620 வாகனங்களையும் சென்னை காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னையில் குறையும் கொரோனா தொற்று... பின்னணயில் காவல் துறை செய்த அதிரடி... என்னனு தெரியுமா?

சென்னையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை கண்காணிப்பதற்காக 153 செக்-பாயிண்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சென்னை பெருநகரம் 348 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் தற்போது கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

சென்னையில் குறையும் கொரோனா தொற்று... பின்னணயில் காவல் துறை செய்த அதிரடி... என்னனு தெரியுமா?

இந்த நேரத்தில் வாகன ஓட்டிகள் தேவையின்றி வெளியே சுற்றினால், வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கலாம் என்பதால், காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக கொரோனா வைரஸ் இரண்டாவது அலையால் சென்னையில் வாகன உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் குறையும் கொரோனா தொற்று... பின்னணயில் காவல் துறை செய்த அதிரடி... என்னனு தெரியுமா?

தமிழக தலைநகர் சென்னைதான் ஆசியாவிட் டெட்ராய்டு என வர்ணிக்கப்படுகிறது. அந்த அளவிற்கு சென்னையை சுற்றிலும் முக்கியமான நிறுவனங்களின் வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையால், வாகன உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் குறையும் கொரோனா தொற்று... பின்னணயில் காவல் துறை செய்த அதிரடி... என்னனு தெரியுமா?

அத்துடன் கடந்த ஆண்டு முதல் அலை ஏற்பட்ட சமயத்தை போல், இம்முறையும் டீலர்ஷிப்கள் மூடப்பட்டுள்ளதால், வாகன விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பிரச்னை எதிரொலியால், ஆன்லைன் மூலம் வாகனங்களை விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Chennai: 2,620 Vehicles Seized For Violating COVID-19 Lockdown Norms. Read in Tamil
Story first published: Monday, May 31, 2021, 16:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X