சென்னைக்கு வரவேண்டிய ஏசி ரயிலை மும்பைக்கு திருப்பி விட்டாங்க! யாரோட வேலையா இருக்கும்?
வெயிலுக்கு பஸ்ஸிலேயே ஏசி பஸ் இருந்தால் ஏறி போகலாம் என்ற நிலையில் மக்கள் இருக்கும் இந்த நேரத்தில் சென்னைக்கு வரவேண்டிய ஏசி லோக்கல் ரயில் இன்னும் தாமதமாகும் என்ற செய்தி வெளியாகி உள்ளது. இது சென்னை மக்களுக்கு கோடை வெயில் உஷ்ணத்தை விட கூடுதல் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியா முழுவதும் தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பல்வேறு இடங்களில் வெயில் தாங்க முடியாமல் மக்கள் திணறி வருகிறார்கள். எப்பொழுது இந்த கோடை முடியும் என்ற மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் சென்னை மக்களுக்கு இந்த கோடை வெப்பத்தையும் தாண்டி எரிச்சல் ஊட்டக்கூடிய செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.

இந்த கோடை காலத்தில் நாம் பஸ்களில் பயணம் செய்யும்போதே ஏசி பஸ்ஸாக வந்தால் சிறப்பாக இருக்கும். டிக்கெட் விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை ஓரளவுக்கு நிம்மதியாக பயணம் செய்யலாம் என்ற மனநிலையில் பாதி மக்கள் இருக்கிறார்கள். இப்படியாக ஏசி எங்கே தான் கிடைக்கும் என்ற தேடலில் மக்கள் சுற்றிக் கொண்டிருக்கும்போது சென்னைக்கு வர வேண்டிய ஏசி ரயில் தாமதமாகி உள்ளது.
சென்னை ஐசிஎஃப் ஆலையில் எலெக்ட்ரிக் ரயில்களுக்கான பெட்டிகள் தயாரிக்கப்பட்டு அந்தந்த பகுதிக்கு பயன்பாட்டிற்கு அனுப்பப்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை பெரும்பாலான மெட்ரோ நகரங்களில் எலெக்ட்ரிக் ரயில் பயன்பாடும் இருக்கிறது. குறிப்பாக சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் எலக்ட்ரிக் ரயில் மக்களின் பிரதான போக்குவரத்து வசதியாக இருக்கிறது.

இந்நிலையில் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில்களில் எப்படி ஏசி பட்டிருக்கிறதோ அதேபோல முழுமையாக ஏசி வசதியுடன் இயங்கும் ரயிலை உருவாக்க சென்னை ஐசிஎஃப் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணிகளை துவங்கியது. இதன்படி கடந்த 2023-ம் ஆண்டு லோக்கல் எலெக்ட்ரிக் ரயிலில் ஏசி வசதி கொண்ட பெட்டிகள் உருவாக்கப்பட்டன.
என்னதான் சென்னை ஐசிஎஃப் ஆலையில் இந்த ஏசி பெட்டிகள் உருவாக்கப்பட்டிருந்தாலும், முதல்கட்டமாக இந்த பெட்டிகள் மும்பையில் எலெக்ட்ரிக் ரயில் பயன்பாட்டிற்காக தான் அனுப்பப்பட்டது. இந்நிலையில் சென்னை ஐசிஎஃப் ஆலையில் தொடர்ந்து ஏசி வசதி கொண்ட எலக்ட்ரிக் ரயில் பெட்டிகள் எல்லாம் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 2023-24 ஆம் நிதியாண்டிலேயே சென்னையில் ஏசி வசதி கொண்ட எலெக்ட்ரிக் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்க்கப்பட்டது போல் அறிமுகமாகவில்லை. எலெக்ட்ரிக் பெட்டிகள் தயாரிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. சென்னையில் தயாராகும் 8 எலெக்ட்ரிக் ரயில் பெட்டிகளில் ஒரு எலெக்ட்ரிக் ரயில் பெட்டி நிச்சயம் சென்னை எலெக்ட்ரிக் ரயில் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்படும் என கூறப்பட்டது.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி சென்னைக்கு ஏசி வசதி கொண்ட எலெக்ட்ரிக் ரயில் பெட்டிகள் ஒதுக்கப்படுவதில் தாமதம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2022ம் ஆண்டு மாநில அரசு சென்னை பகுதியில் ஏசி வசதி கொண்ட எலெக்ட்ரிக் ரயிலை அறிமுகப்படுத்துவதற்காக ரயில்வே நிர்வாகத்துடன் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டது. அதன்படி சென்னை கடற்கரை மூலம் செங்கல்பட்டு வரை செல்லும் ரோட்டில் ஏசி வசதி கொண்ட ரயில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எதிர்பார்க்கப்பட்டது போல் ஏசி வசதி கொண்ட எலெக்ட்ரிக் ரயில் பெட்டிகள் அறிமுகமாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த ஏசி வசதி கொண்ட ரயில்களில் பல்வேறு விதமான வசதிகள் இருக்கிறது. முக்கியமாக இது தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் ரயிலில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வது ஓடும் ரயிலில் ஏறுவது உள்ளிட்ட எந்த விதமான சேட்டைகளையும் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னை எலெக்ட்ரிக் ரயில் திட்டத்தை தென்னக ரயில்வே நிர்வாகமே நிர்வாகம் செய்து வருகிறது. இதுதான் இந்த பிரச்சனைக்கு ஒரு பிரதான காரணமாக கூறப்படுகிறது. மும்பையை பொருத்தவரை எலெக்ட்ரிக் ரயில்களுக்கான தனி நிர்வாகம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நிர்வாகம்தான் எலெக்ட்ரிக் ரயில் பயன்பாட்டை முழுமையாக கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









