வரும் 6ம் தேதி மெரீனா பீச்க்கு வந்திடுங்க! விமான சாகசம் வேற லெவல்ல நடக்கப்போகுது!

சென்னையில் வரும் 6ம் தேதி இந்திய விமானப்படை சார்பில் 92ம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்வாக வானில் விமானங்களை வைத்து சாகச நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான விமானங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களும் இந்த நிகழ்ச்சியை கண்டு களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக இந்த சாகசங்கள் எப்படி நிகழ்த்தப்படுகின்றன இதற்காக என்னென்ன விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்ற விவரங்களை காணலாம் வாருங்கள்.

இந்திய விமானப்படையின் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படியாக இந்த ஆண்டு சென்னையில் வைத்து இந்திய விமானப்படையின் ஆண்டு விழா கொண்டாட திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பாரதிய வாயு சேனா என்ற தீமின் கீழ் இந்த கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த கொண்டாட்டங்கள் ஆற்றல், சக்தி மற்றும் சார்பின்மை ஆகியவற்றை பறைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Chennai Air Show

இந்த சாகச நிகழ்ச்சிக்காக சென்னையில் உள்ள 72 விமானப்படை விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த விமானப்படை விமானங்கள் சென்னை வான்வெளியில் பறந்து பல்வேறு விதமான சாகசங்களை செய்ய உள்ளன. மொத்தம் 3 குழுக்களாக இந்த விமானப்படை பிரிக்கப்பட்டுள்ளது. ஆகாஷ் கங்கா என்ற குழுவினர் ஸ்கை டைவிங் செய்வதில் தேர்ச்சி பெற்ற குழுவினராக இருக்கிறார்கள்.

அடுத்ததாக சூரிய கிரன் என்ற ஏரோபிக் குழுவினர் அதிக வேகத்தில் செல்லும் விமானங்களை ஒரே பாதையில் ஒரே வடிவமைப்பில் பயணிக்க வைத்து சாகசம் செய்யும் குழுவினராக இருக்கிறார்கள். இறுதியாக சரங்கு ஹெலிகாப்டர் டிஸ்ப்ளே குழுவினர் ஹெலிகாப்டர்கள் மூலம் வான்வெளியில் கோரியோகிராபி செய்யும் குழுவினராக இருக்கிறார்கள். இந்த மூன்று குழுவினரும் சேர்ந்து இந்த விமானப்படை விமான சாகச நிகழ்ச்சியில் பல்வேறு விதமான சாகசங்களை செய்யப் போகிறார்கள்.

Chennai Air Show

இந்த விமான சாகசங்களுக்காக இந்திய விமானப்படை தங்கள் பயன்பாட்டில் உள்ள இலகு ரக காம்பேக்ட் ஏர்கிராஃப்ட்டான தேஜஸ் விமானத்தையும் இலகு ரக காம்பேக்ட் ஹெலிகாப்டரான பிரசாந்த் ஹெலிகாப்டர்களையும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. மொத்தம் 72 ரக விமானங்கள் இந்த விமான சாகசத்தில் பயன்படுத்த தற்போது திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விமான சாகச நிகழ்ச்சி இந்தியா விமானப்படையில் எவ்வளவு தூரம் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக ஏவியேஷன் தொழில்நுட்பத்தில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை எட்டி உள்ளதை இந்த விமான சாகச நிகழ்ச்சிகள் மக்களுக்கு நல்ல விதமாக எடுத்துக்காட்டுகிறது.

Chennai Air Show

இந்த விமான சாகச நிகழ்ச்சியில் பாரம்பரிய விமானமான டகோட்டா மற்றும் ஹார்வேர்டு ஆகிய விமானங்களும் பங்கேற்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இது விமானங்கள் குறித்த வரலாற்று கண்காட்சியில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விமான சாதகத்தை காண ஏராளமான மக்கள் தற்போது ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

வரும் அக்டோபர் 6ம் தேதி காலை 11:00 மணி முதல் சென்னை மெரினா பீச் பகுதியில் குழுமினால் இந்த விமான சாகசங்களை காண முடியும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் இந்த விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க முடியும். இது நமது நாட்டின் விமானப்படையின் திறனை காட்டுவது மட்டுமல்லாமல் இளைஞர்கள் மத்தியில் தேசிய உணர்வையும் வான்வெளியில் இந்தியாவிற்கு பாதுகாப்பு இருப்பதை மக்கள் மனதில் உறுதி செய்வதற்காகவும் நடத்தப்படுகிறது.

தேஜஸ் போன்ற அதிநவீன ரக விமானங்களை இந்த விமான கண்காட்சியில் பயன்படுத்துவது மக்களை கண்டிப்பாக ரசிக்க வைக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய விமான போர்படை எந்த அளவுக்கு திறன் கொண்டதாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் விதமாகவும் பல்வேறு விதமான சாகசங்கள் வான்வெளியில் நிகழ்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இது கீழே இருந்து பார்ப்பவர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியமான விஷயமாக காட்சியளிக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது இந்த விமானப்படை சாகச நிகழ்ச்சிக்காக பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த சாகச நிகழ்ச்சிகள் நடக்கும்போது இது நிச்சயம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த நிகழ்ச்சியை நீங்கள் காண ஆர்வமாக இருந்தால் உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 1, 2024, 11:48 [IST]
English summary
Chennai air show oct 6 indian air force aircraft list
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X