சென்னை விமான நிலையத்தில் நடக்கும் அதிசயம்! ஒரே டைம்ல 2 விமானங்கள் பறக்கபோகுது!

சென்னை விமான நிலையத்தில் தற்போது இரண்டாவது ரன்வே பயன்பாட்டிற்கு வந்துள்ளது. நாள் ஒரே நேரத்தில் அதிகமான விமானங்களை கையாளும் விமான நிலையமாக சென்னை விமான நிலையம் மாறி வருகிறது. இனி சென்னை விமான நிலையங்களில் விமானங்கள் காலதாமதம் ஆவது என்பது குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.

சென்னை விமான நிலையம் என்பது இந்தியாவின் மிக முக்கிய விமான நிலையங்களில் ஒன்றாக இருக்கிறது. தினமும் நூற்றுக்கணக்கான விமானங்கள் இந்த விமான நிலையங்களில் இருந்து கையாளப்பட்டு வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான பயணிகள் தினம் தோறும் பயணம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இதுவரை ஒரே ஒரு ரன்வே மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.

chennai airport 2nd runway

கடந்த 2018-ம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் இரண்டாவது ரன்வே கட்டமைக்கப்பட்டது. ஆனால் கொரோனா மற்றும் பல்வேறு சிக்கல்கள் காரணமாக இந்த ரன்வே பயன்பாட்டில் இல்லாமல் இருந்து வந்தது. சுமார் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்னை விமான நிலைய நிர்வாகம் இந்த இரண்டாவது ரன்வேயை தற்போது பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.

தற்போது சென்னை விமான நிலையத்தில் இருக்கும் ஒரு ரன்வேயில் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்திற்கு 35 முதல் 40 விமானங்களை கையாளும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரே நேரத்தில் 2 ரன்வேயில் பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் இனி ஒரு மணி நேரத்திற்கு சென்னை விமான நிலையத்தில் 55 விமானங்களை கையாளும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

chennai airport 2nd runway

இதனால் அதிக டிராபிக் இருக்கும் நேரங்களில் ஏற்படும் விமான தாமதத்தை தவிர்ப்பதற்கு இது ஒரு நல்ல வழியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நன்மையை டேக் ஆப் செய்ய பயன்படுத்தும்போது மற்றொரு நன்மையை லேண்ட் செய்ய பயன்படுத்த முடியும். இதனால் ஒரே நேரத்தில் அதிகமான விமானங்களை கையாள முடியும்.

தற்போது சென்னை விமான நிலையத்தில் ஆர்என்ஓய் 25, ஆர்என்ஓய் 30 என்ற இரண்டு ரன்வேக்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் ஏதாவது ஒரு ரன்வே மட்டுமே பயன்படுத்தப்படும். தற்போது இரண்டு ரன்வேக்களிலுமே டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் என்பது நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்காலத்தில் ஆர்என்ஒய் 30 என்ற ரன்வேயை டேக்ஆப்பிற்காக மட்டும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால் இனி சென்னை விமான நிலையங்களில் இருந்து வெளிநாட்டிற்கு மற்றும் உள்நாட்டிற்கும் விமானத்தில் பயணிக்கும் பயணிகள் விமான காலதாமதத்தை தவிர்க்க முடியும். பலர் விமானத்தில் ஏறிய பின்பு விமானம் டேக்ஸி லைனில் நிறுத்தப்பட்டு டேக்ஆப்பிற்காக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் இனி அப்படியான சூழ்நிலைகள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் விமானத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விமான சேவைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்த டேக்ஸி லைன் மற்றும் ரன்வே தேவை அதிகமாக இருக்கிறது. அதை கருத்தில் கொண்டு சென்னை விமான நிலைய நிர்வாகம் இந்த ஏற்பாடுகளை செய்துள்ளது. சுமார் 6 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு இந்த நடைமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது.

இது ஒரு பக்கம் இருந்தாலும் புதிதாக விமான நிலையத்தை கட்டமைப்பதற்கான ஏற்பாடுகளையும் சென்னை விமான நிலைய நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி பரந்தூர் பகுதியில் விமான நிலையத்தை கட்டமைத்து அங்கு வெளிநாடுகளுக்கான விமானங்களை கையாள திட்டமிடப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் எல்லாம் தற்போது நடந்து வருகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னை விமான நிலையத்தில் இரண்டு ரன்வேகள் இருந்தாலும் இரண்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியாத சூழ்நிலை இதனால் வரை இருந்து வந்தது. இதை மாற்றி தற்போது டேக்ஸி லைன்களை எல்லாம் சரி செய்து இருக்கும் தொழில்நுட்ப பிரச்சனைகளை சரி செய்து இந்த நன்மைகளை ஒரே நேரத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 13, 2024, 11:12 [IST]
English summary
Chennai airport 2nd runway simultaneous operations begins
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+