சென்னை விமான நிலையத்திற்கு வந்த முக்கிய அப்டேட்! இனி பேப்பர தூக்கிட்டு போக வேண்டிய தேவையில்லை!

சென்னை விமான நிலையம் இந்தியாவின் 14வது விமான நிலையமாக டிஜிட்டல் யாத்ரா தளத்தில் இயங்கும் விமான நிலையமாக மாறி உள்ளது. இந்த டிஜிட்டல் யாத்ரா தளத்தை மத்திய சிவில் ஏவியேஷன் துறை சார்பில் கொண்டுவரப்பட்டுள்ள தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பத்தால் என்ன பயன் சென்னைக்கு இது எந்த அளவுக்கு உதவப் போகிறது என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மத்திய சிவில் ஏவியேஷன் துறை இந்தியாவில் உள்ள விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு சிரமம் இல்லாத பயணத்தை கொண்டு வருவதற்காக டிஜிட்டல் யாத்ரா என்ற புதிய தளத்தை உருவாக்கியது. கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த தளம் இந்தியாவில் உள்ள புது டெல்லி, பெங்களூரு, வாரணாசி, ஆகிய விமான நிலையங்களில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

Chennai airport DigiYatra

பின்னர் இது மெல்ல மெல்ல விரிவடைந்து அடுத்த 10 விமான நிலையங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது 14 வது விமான நிலையமாக சென்னை விமான நிலையத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னை விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணிகளுக்கு ஏராளமான வசதிகள் வந்து குவியப்போகின்றன.

இந்த டிஜிட்டல் யாத்ரா தொழில்நுட்பம் என்பது பயணிகளின் முகத்தை அடையாளம் கண்டு அவர்களுக்கு விமான பயணத்தில் எந்தவித சிரமமும் இல்லாமல் சுலபமாக விமானத்தில் ஏறுவதற்கான வழியை வகுத்துக் கொடுக்கிறது. இதனால் தேவையில்லாமல் விமான பயணத்தின் போது ஆங்காங்கே பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்படுவது தவிர்க்கப்படும்.

Chennai airport DigiYatra

இந்த டிஜிட்டல் யாத்ரா ஆப் மூலம் விமான பயணம் செய்ய முதலில் இந்த ஆப்பை பதிவிறக்கி அதில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின்பு விமான நிலையத்திற்குள் நுழைந்த பின்பு இந்த ஆப்பை அங்குள்ள டிஜிட்டல் யாத்ரா மையத்திற்கு சென்று உங்களது அடையாள அட்டையை காண்பித்து முதன்முறையாக சோதனை செய்ய வேண்டும். இது முதன்முறை மட்டுமே செய்ய வேண்டியது அதன் பின்னர் இதை செய்ய வேண்டிய தேவை இல்லை.

இப்படியாக பதிவு செய்யும் போது உங்கள் முகம் நேரடியாக கேமரா மூலம் பதிவு செய்யப்படும். அதன் பின்பு நீங்கள் விமானத்தின் உள்ளே ஏறுவதற்காக பாதுகாப்பு சோதனைக்கு நிற்கும் போதும் சரி, அல்லது விமானத்திற்கு உள்ளே போர்டிங் செய்யும் போதும் சரி, ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்களது போர்டிங் பாஸ் மற்றும் டிக்கெட்டை காட்ட வேண்டிய அவசியம் கிடையாது.

அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி கேமரா மூலம் உங்களது முகம் ஸ்கேன் செய்யப்பட்டு உங்களது டிஜிட்டல் யாத்ரா ஐடி மூலம் நீங்கள் குறிப்பிட்ட நபர் தான் என்பதை கண்டறியப்பட்டு உங்களுக்கான டிக்கெட் என அனைத்தும் அதிலேயே காட்டப்பட்டு விடும். இதற்காக ஒவ்வொரு முறை நீங்கள் விமான நிலையத்திற்கு செல்லும் போது அந்த குறிப்பிட்ட டிக்கெட்டை புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.

இதன் மூலம் உங்கள் டிக்கெட் மற்றும் போடிங் பாஸ் அனைத்தும் ஒரே டோக்கனுக்குள் கொண்டுவரப்பட்டு உங்களுக்கு சிரமம் இல்லாத போர்டிங் என்பது நடைபெறும் இதனால் தற்போது பல நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். அவர்களது அவர்கள் ஒவ்வொரு முறையும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தங்களது ஐடி ப்ரூஃப் மற்றும் விமான டிக்கெட் புக்கிங் பாஸ் ஆகியவற்றை காண்பிக்க வேண்டிய தேவை இருக்கிறது. இனி அது போன்ற தேவை இருக்காது.

இது மட்டுமல்ல நீங்கள் நேரடியாக லக்கேஜ்களை செக்கிங் செய்யவும் இது பயன்படுகிறது. எந்தவித மனித தொடர்பும் இல்லாமல் நேரடியாக மிஷின் இருக்கும் இடத்திற்கு சென்று உங்கள் முகத்தை காண்பித்து அது உங்களது லக்கேஜ் தான் என்பதை உறுதி செய்த பின்பு நீங்கள் லக்கேஜை வைத்தால் அது தானியங்கியாக எடை போட்டு உங்கள் லக்கேஜை எடுத்துக் கொள்ளும்.

இப்படியாக பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில் இந்த டிஜிட்டல் யாத்ரா என்ற தொழில்நுட்பம் உதவுகிறது. இது தற்போது சென்னை விமான நிலையத்திலும் இயக்கத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இனி சென்னை விமான நிலையத்திலிருந்து நீங்கள் எங்கு சென்றாலும் இந்த டிஜிட்டல் யாத்ரா ஆப்பை பயன்படுத்தி எந்தவித பேப்பர் மூலம் அடையாள அட்டைகளை காண்பிக்காமல் நீங்கள் பயணம் செய்ய முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா டிஜிட்டல் மையமாகி வரும் நிலையில் விமான நிலையங்களை டிஜிட்டல் மையமாக இப்படியான டிஜிட்டல் யாத்ரா என்ற ஆப்பை அறிமுகப்படுத்தி மத்திய அரசு மிகப் பெரிய முயற்சியில் இறங்கி உள்ளது. இதை நிச்சயம் பாராட்ட வேண்டும். பலருக்கு விமான நிலையங்கள் ஏற்படும் பிரச்சனையை இது பெருமளவு குறைத்து விடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

More from DriveSpark

Article Published On: Thursday, February 22, 2024, 18:15 [IST]
English summary
Chennai airport digiyatra network joins as 14th member
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+