2 விமான ஓடுபாதைகளை இணைக்கும் விதமாக சென்னை விமான நிலையத்திற்கு 2 சுரங்க பாதைகள்..!!
2 விமான ஓடுபாதைகளை இணைக்கும் விதமாக சென்னை விமான நிலையத்திற்கு 2 சுரங்க பாதைகள்..!!
Recommended Video

சென்னை விமான நிலையத்தில் தினமும் அதிகரித்து வரும் பயணிகள் நெரிசலை கட்டுப்படுத்த ரூ. 700 கோடி செலவில் 2 புதிய சுரங்க பாதைகள் அமைக்கப்படவுள்ளன.

சென்னை விமான நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான விமானங்கள் வந்து செல்கின்றன. இதனால் உள்நாடு மற்றும் வெளிநாடு முனையங்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் அலைமோதுகின்றன.

பல ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் வந்து செல்லும் சென்னை விமான நிலையத்தில் நாளுக்கு நாள் கூட்ட நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.

தொடர்ந்து எழுந்த வந்த இந்த பிரச்சனையை கட்டுபட்டுத்த விமான போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு இரண்டு வசதிகள் செய்யப்படுவதாக தீர்மானமானது.
Trending On Drivespark Tamil:

அதன்படி, பயணிகள் வந்துசெல்ல ஒரு சுரங்க பாதையும், உடமைகள் கொண்ட செல்ல மற்றொரு சுரங்க வழியும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு சுமார் 10 அடி ஆழத்தில் 1.5 கி.மீ நீளத்திற்கு இந்த இரண்டு சுரங்க பாதைகளுக்கான வழித்தடம் அமைக்கப்படுகிறது.

இதற்கான ரூ. 700 கோடி முதலீடு செய்யப்படும் என விமான போக்குவரத்து அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இரண்டு சுரங்க பாதைகளும் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் பயணிகளின் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.

சென்னையில் மெட்ரோ ரயிலிற்கான சுரங்க பாதைகளை கட்டமைத்த நிறுவனங்கள் மூலம் விமான நிலைய சுரங்க வழித்தடத்திற்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

பயணிகள் விரைவாக விமானத்தை சென்றடைய இரண்டு விமான ஓடுதள பாதைகளை இந்த சுரங்க பாதைகள் இணைக்கும் வகையில் கட்டப்படும் என விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடு செல்லும் பயணிகளின் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

அதேபோல சென்னை விமான நிலையத்திற்கு வருபவர்கள் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரித்துக்கொண்டே போகிறது.

கூட்ட நெரிசல், அதனால் விமான நிலையத்திற்குள் ஏற்படும் வாகன போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றால் பல பயணிகள் கடைசி நேரத்தில் விமானத்தை பிடிப்பது அதிகரித்துக்கொண்டே உள்ளது.
Trending On Drivespark Tamil:

இதை தடுக்கும் விதமாகத்தான் சென்னை விமான நிலையத்தில், 2 விமான ஓடுபாதைகளை இணைக்கும் விதமாக 2 சுரங்க பாதைகள் கட்டமைக்கப்படுகின்றன.

விரைவில் தொடங்கப்படும் இதற்கான கட்டமைப்பு பணிகள், இந்த வருடம் ஜூன் அல்லது ஜூலைக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Trending DriveSpark YouTube Videos


Click it and Unblock the Notifications








