Chennai Airport கிட்ட சிங்கப்பூர், துபாய் எல்லாம் தோத்துடும்! செம சூப்பராக ஏர்போர்ட் திறப்பு விழாவிற்கு ரெடி

ஒரு நாட்டிற்கு விமான நிலையங்கள் மிகவும் அவசியமான ஒன்று, விமான நிலையங்கள் தான் அந்த நாட்டு வெளிநாடுகளுடன் எவ்வளவு தொடர்பில் இருக்கிறது, அதன் மூலம் எவ்வளவு வருமானம் நாட்டிற்கு வருகிறது என்பதை அளவிடும் ஒரு குறியீடு. இந்நிலையில் மத்திய அரசு விமான நிலையங்களை மேம்படுத்தி வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெங்களூரு விமான நிலையம் மேம்படுத்தப்பட்டு புதிய முனையம் திறக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது சென்னை விமான நிலையம் மேம்படுத்தப்பட்டு 2ம்வது முனையம் திறப்பு விழாவிற்காகத் தயாராக இருக்கிறது. இது குறித்து விரிவாகக் காணலாம்.

Chennai Airport New Terminal

சென்னை விமான நிலையத்தில் தற்போது ஒரே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான முனையங்கள் தனித்தனியாகச் செயல்பட்டு வருகிறது. தற்போது இரண்டாவதாக புதிய முனையம் உரவாக்கப்பட்டுள்ளது. இதற்காக 2 முனையத்தின் முதற்கட்ட வேலைகள் முடிந்து முனையம் திறக்கப்படுவதற்கான நிலையை அடைந்துள்ளது.

இந்த இரண்டாவது முனையத்தைப் பிரதமர் மோடி நாளை (ஏப்ரல் 8ம் தேதி) திறந்து வைக்கிறார். இந்த முனையம் சுமுார் 2.20 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ1260 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த முனையும் முற்றிலும் புதுமையான வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.

Chennai Airport New Terminal

இந்த புதிய முனையம் உருவாக்கப்பட்டால் தற்போது ஆண்டிற்கு 2.3 கோடி மக்களைக் கையாளும் கொள்ளளவு கொண்ட சென்னை விமான நிலையம் இனி ஆண்டிற்கு 3.5 கோடி மக்களைக் கையாளும் நிலைக்கு உயர்ந்துவிடும். இதனால் சென்னை தமிழகத்திலிருந்து ஏராளமான பயணிகள் விமானம் மூலம் பயணிக்க முடியும்.

இந்த புதிய முனையம் தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காகத் தமிழகத்தின் முக்கியமான கலாச்சாரமான பெண்கள் தினமும் வீட்டு வாசலில் போடும் கோலத்தை தீமாக எடுத்து வடிவமைத்துள்ளது. முழு முனையயுமும் கோலம் என்ற அடிப்படை தீம் உள்ளே இருக்கும்.

Chennai Airport New Terminal

கோலம் தீமில் இருந்தாலும் உள்ளே தமிழகத்தின் பிற கலாச்சாரங்களான , சேலை, கோவில்கள் உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இந்த விமான நிலையத்தின் வடிவமைப்பில் புகுத்தியுள்ளனர். இது குறித்த புகைப்படம் எல்லாம் தற்போது வெளியாகியுள்ளது. இதைப் பார்க்கும் போது நம் கண்கள் தானாக விரிகின்றன.

இந்த புகைப்படத்தின் இந்த விமான நிலையத்தின் சீலீங் லைட்கள் கோலம் வடிவில் வழங்கப்பட்டுள்ளது. இதன் தூண்கள் தங்க நிற ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தின் மேற்கூரை மடித்து வைக்கப்பட்ட சேலையின் பேட்டனில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த விமான நிலையத்தின் நுழைவு வாயில் கோவில்களில் உள்ள நுழைவு வாயில் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையின் மேற்கூரைகள் வெளியில் உள்ள வெளிச்சத்தை உள்ளே கடத்தும் வகையிலும், இதனால் லைட்கள் போட வேண்டிய தேவையில்லாதவாறு பகல் நேரத்தில் இயற்கை வெளிச்சத்திலேயே இந்த விமான நிலையம் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த விமான முனையம் நாளை (ஏப். 8ம் தேதி) பிரதமர் நரேந்திர மோடியால் திறக்கப்படுகிறது. அதன் பின் இந்த விமான முனையம் எவ்வாறு பயன்பாட்டிற்கு வரப்போகிறது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. மெல்ல மெல்ல ஒவ்வொரு ஏவியேஷன் நிறுவனமாக இந்த முனையத்திற்கு மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, April 7, 2023, 12:40 [IST]
English summary
Chennai airport new terminal building to be inaugurated by pm modi
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X