இது தமிழ்நாடுதானா! வெளிநாட்டு விமான நிலையங்களுக்கு சவால் விடும் சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம்!
சென்னை விமான நிலையத்தின் நான்காவதுமுனையம் (Chennai Airport T4) இன்று முதல் செயல்பாட்டிற்கு வருகிறது. சர்தேச விமானங்களை கையாண்டு வந்த இந்த முனையம் தற்போது உள்நாட்டு விமானங்களை (Domestic Flight) கையாளும் முனையமாக மாற்றப்பட்டு செயல்பட துவங்கியுள்ளது. இந்த புதிய முனையம் குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
சென்னை விமான நிலையம் என்பது இந்தியாவில் உள்ள பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாக இருக்கிறது. லட்சக்கணக்கான பயணிகளை ஒவ்வொரு மாதமும் கையாளும் இந்த விமான நிலையம் இந்தியாவிலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான சேவையை கொண்ட விமான நிலையமாக இருக்கிறது. இந்த விமான நிலையத்தில் உள்நாட்டு விமான பயணிகளின் வசதியை அதிகப்படுத்த 4வது முனையத்தை கட்டமைக்கும் பணி நடந்து வந்தது.

இந்நிலையில் தற்போது இந்த முனையும் உள்நாட்டு விமானங்களை கையாளும் வகையில் கட்டமைக்கப்பட்டு விட்டதால் இதன் பணிகள் இன்று முதல் துவங்குகிறது. முதற்கட்டமாக ஏர் இந்தியா மற்றும் ஏர் அலையன்ஸ் ஆகிய விமான நிறுவனங்களின் விமானங்கள் இந்த முனையம் வழியாக இயக்கப்படுகிறது. .
முதல் விமானமாக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் போர்ட் பிளேயரில் இருந்து கிளம்பி சென்னையை வந்தது. இதில் சுமார் 144 பயணிகள் பயணம் செய்து சென்னை வந்தனர். மீண்டும் இதே விமானம் சென்னையில் இருந்து கிளம்பி பெங்களூருக்கு சென்றது. இந்த விமானம்தான் இந்த முனையத்தில் கையாளப்பட்ட முதல் விமானமாக இருக்கிறது.

தொடர்ந்து இந்த முனையத்தில் உள்நாட்டு விமானங்கள் மட்டுமே கையாளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இதே முனையத்தில் தான் சர்வதேச விமானங்கள் கையாளப்பட்டன. தற்போது அவையெல்லாம் நீக்கப்பட்டு புதிதாக வேறு இடத்திற்கு செல்லப்பட்டது. அதனால் இந்த முனையம் உள்நாட்டு விமானத்தை கையாளும் முனையமாக மாற்றப்பட்டுள்ளது.
நான்காவது முனையம் தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை விமான நிலையத்தில் சர்வதேச விமான நிலையத்திற்கு பக்கவாட்டில் உள்ள இரு பக்கமும் உள்நாட்டு விமானங்களை கையாளும் முனையங்களாக செயல்படுகின்றன. இந்த இருமுனையமும் சேர்த்து ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக இருக்கிறது.

புதிதாக கட்டப்பட்டுள்ள 4வது முனையத்தில் நேற்று சோதனை ஆப்ரேஷன் நடந்தது. அதன்படி விமானம் தரையிறங்கி கேட்பகுதிக்கு வருவது அங்கு பயணிகளை சோதனை செய்து விமானத்திற்குள் அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனைகள் எல்லாம் திட்டமிட்டபடி நடந்த நிலையில் இன்று இந்த முனையம் முழுவதுமாக மக்கள் செயல்பாட்டிற்கு வருகிறது.
தற்போது இரண்டு நிறுவனங்களின் விமானங்கள் மட்டுமே இந்த இணையத்தில் செயல்பட்டுக்கு வரும் நிலையில் அடுத்தடுத்த வாரங்களில் விமானங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த இந்த முனையத்தையும் சென்னையின் பரபரப்பான விமான நிலையமாக மாற்ற பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தின் உட்புற பகுதி பெங்களூருவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள விமான நிலையம் போல டிசைன் செய்யப்பட்டுள்ளது. இது பல்வேறு வகையான தொழிற்நுட்பங்களை விமான நிலையத்தில் உள்ளே இருக்கும் வகையில் கட்டமைத்துள்ளனர்.

தற்போது சென்னையில் செயல்படும் உள்நாட்டு விமானங்களை கையாள இரண்டு முனையுங்கள் வந்து விட்டதால் இனி பயணிகளுக்கு கூட்ட நெரிசல் இல்லாமல் விமானத்தில் ஏற வசதியாக இருக்கும். அதே நேரம் தற்போது சென்னை விமான நிலையத்தை பரந்தூர் பகுதிக்கு மாற்ற திட்டமிட்டு வருவதால் விரைவில் இந்த விமான நிலையமும் முற்றிலுமாக மாற்றப்பட வாய்ப்பு இருக்கிறது என்பது இங்கு நாம் குறிப்பிட வேண்டியது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விமான சேவை என்பது மிக முக்கியமான சேவையாக இருக்கிறது. சென்னை போன்ற பெரு நகரங்களில் விமானத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் விமான நிலையங்களின் தேவை அதிகமாக உள்ளது. இந்நிலையில் உள்நாட்டு விமானங்களை கையாள இரண்டு முனையங்கள் இருப்பது தற்போது பயன்களுக்கு சௌகரியத்தை ஏற்படுத்தி தரும்.


Click it and Unblock the Notifications









