அண்ணா சாலை பள்ளத்திற்கு நெட்டிசன்கள் தாறுமாறு மீம்ஸ்

Written By:

வடபழனி சென்றுகொண்டுயிருந்த மாநகர பேருந்து ஒன்று அண்ணா சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் இறங்கியது. ஓட்டுநரின் சாதுர்யத்தால் 30க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 10 அடி ஆழத்தில் உருவான இந்த திடீர் பள்ளத்திற்கு அருகில் நடந்து வரும் மெட்ரோ ரயில் பணிகள் தான் காரணம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இன்று இதற்கான சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அவ்வழியாக வாகனங்கள் வழக்கம்போல இயங்கி வருகிறது. சென்னையின் பிராதன சாலை ஒன்றில் உருவான இந்த பள்ளத்தை வைத்து நெட்டிசன்கள் இணையதளங்களை பரபரப்பாக்கி விட்டனர்.

மீம்ஸுகளை குவிக்கும் அண்ணா சாலை திடீர் பள்ளம்

ஞாயிறு அன்று இந்த சம்பவம் நடந்ததால், இணையத்தில் சும்மா உலாவிக்கொண்டுயிருந்த நெட்டிசன்கள் கையில் அவல் பொறி சிக்கியதுபோல் ஆகிவிட்டது. அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா முதல் பிரதமர் நரேந்திர மோடி வரை அனைவரையும் மீம்ஸில் அதகளம் செய்து விட்டனர். யாரையும் விட்டுவைக்கவில்லை.

நெட்டிசன்களின் ஆக்கத்திறன் மிக்க மீம்ஸ்களை சற்று கீழே ஸ்கார்ல் செய்து பார்ப்போமா...

பைரவா படத்திற்கு பிறகு மீம்ஸ்களில் சிறிது காலம் பார்க்க முடியாதிருந்த நடிகர் விஜய்யின் முகம், இந்த சம்பவத்தில் மீண்டும் ரீ-எண்ட்ரி ஆனது.

கவிழ்ந்த பேருந்தை ஒரு சூப்பர்மேனாக விஜய் தூக்க முயல்வது போல இருந்த மீம்ஸில் கில்லி விஜயயை வைத்து பக்கவாக மேட்சிங் செய்து விட்டனர் நெட்டிசன்கள்.

ஜெயலலித்தா சமாதி மேல் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா செய்த சபதம் அவருக்கு ஞாபகம் இருக்கோ இல்லையோ, நமது நெட்டிசன்கள் அதை மறப்பதாக இல்லை.

சிறிது காலம் முன்பு வரை டிரெண்டிங்கில் இருந்த சசிகலாவின் சபதத்திற்கு மீண்டும் உயிர்கொடுத்து, உணர்வு கொடுத்து வெளியான இந்த மீம்ஸ் கச்சிதமாக வைரலானது.

அண்ணா சாலை திடீர் பள்ளம் சென்னையை தாண்டி, காஷ்மீர் வரை சென்று விட்டது. அதற்கு உதாரணம் தான் இந்த மீம்ஸ்.

சென்னையில் விழுந்த இந்த பள்ளத்தில் கீழே பார்த்தால், காஷ்மீரில் சுரங்க வழிப்பாதையை திறந்து வைத்த பிறகு மோடி கைக்காட்டி வரவேற்பு தெரிவிக்கிறார். இதை விட இந்த சம்பவத்தை வைரலாக்க வேறதுவும் வேண்டாம்.

சின்னம்மா சபதத்தை ஞாபகப்படுத்த மீண்டும் ஒரு மீம்ஸ். ஆனால் இம்முறை சிங்கம் படத்தின் வசனத்துடன் இந்த மீம்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால் எதிர்பாராதவிதமாக மீம்ஸின் படம், எழுத்து, கமண்ட் அன அனைத்தும் திருத்தமாக பொருந்தியுள்ளது.

விஜய்யின் மீது அப்படி என்ன தான் நெட்டிசன்களுக்கு அன்போ தெரியவில்லை, இந்த சம்பவத்தால் சின்னம்மாவிற்கு பிறகு இணையத்தை கலக்கியவர் இளைய தளபதி தான்.

ஆனால் இந்த குறிப்பிட்ட மீம்ஸை உருவாக்கியவர்கள் நடிகர் அஜித்தின் ரசிகர் பக்கத்தை சேர்ந்தவர்கள். ஆனால் விஜய் இதில் மாஸாக இருக்கிறார் என்பதை மறுக்கமுடியவில்லை.

மாநில அரசின் செயல்பாடுகளையும், மத்திய அரசின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டு பார்க்கும் வகையில் இந்த மீம்ஸில் கமெண்ட் இடம்பெற்றுள்ளது.

நகரத்திலிருந்து நரகத்திற்கு செல்ல வழிப்பாத அமைந்துவிட்டது போல அதே மீம்ஸில் அதகள கமெண்டும் இடம்பெற்றுள்ளது. நல்ல கற்பனை!

விஜய்யை கலாய்த்தால் அவரது ரசிகர்கள் அஜித்தை சும்மாவா விடுவார்கள். இதோ அஜித்தின் மாஸான ஒரு மீம்ஸ்.

வேதாளம் படத்தில் அஜித்தின் ஆட்டம் உலகம் அறிந்தது. ஏற்கனவே அதற்கு மீம்ஸ் குவிந்து ஓய்திருந்த நிலையில். MTC பேருந்து மீது அதே ஆட்டத்தை அஜித் இங்கே அடுகிறார்.

மீண்டு அஜித்தான் வருகிறார். சமீபத்தில் அவர் நடித்து வரும் விவேகம் படத்தின் போஸ்டரை எடுத்து இந்த மீம்ஸை உருவாக்கியுள்ளனர்.

பேருந்துகுள் இருந்து , அஜித் மிசைல் போன்ற துப்பாக்கியுடன் எட்டி பார்த்து குறிவைத்து சுடுகிறார். விவேகம் படத்தின் உண்மையான போஸ்டரை விட, இது பலநூறு விளம்பரத்தை அளித்துள்ளது.

அண்ணா சாலையில் பள்ளம் ஏற்பட்ட சம்பவத்தால் இணையத்தை கலக்கியது அஜித், விஜய் ரசிகர்கள் தான். அஜித் போய் இதே மீம்ஸில் விஜய் வருகிறார்.

ஸ்பைடர் மேன் போல விஜய் வேடமணிந்திருந்ததை வைத்து, அண்ணா சாலை விபத்தை சீரமைக்க அவர் கிளம்புவது போல உருவாக்கப்பட்டுயிருக்கும் இந்த் மீம்ஸ். கலாய்பின் உச்சம்.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கல்லை உருட்டி, வழியை கண்டுபிடிக்கும் காட்சியை இந்த சம்பவத்துடன் ஒப்பிட்டுயிருந்தனர் நெட்டிசன்கள். இது கொஞ்சநேரத்திற்கு இணையத்தில் வைரலாக இருந்தது.

2012 படத்துடன் இந்த சம்பவத்தை ஒப்பிட்டு மீம்ஸ் உருவாக்குவது வரவேற்கக்கூடிய ஒன்று தான். நிச்சயம் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பலரும் நிச்சயம் அதை 2012 படத்தின் இந்த காட்சியுடன் ஒப்பிட்டு பார்த்திருப்பார்கள்.

அங்கு சுத்தி, இங்கு சுத்தி இறுதியில் பூமாதேவியையே அண்ணா சாலை திடீர் பள்ளம் சம்பவத்தில் வம்பிற்கு இழுத்துவிட்டனர்.

தற்போதைய காலகட்டத்தில் 3டி திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருவதன் காரணமாக, இந்த சம்பவம் பூமாதேவியின் 3டி வடிவம் என்ற இந்த மீம்ஸிற்கு ஏகோபித்த அகோபித்த வரவேற்பு.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Chennai Anna Salai road crashes make netizens to think creative and to do breaking the internet by memes
Please Wait while comments are loading...

Latest Photos