கின்னஸ் உலக சாதனை படைத்த சென்னை ஆட்டோ டிரைவர் ஜெகதீசன்!

Posted By:

இரண்டு சக்கரங்களில் ஆட்டோரிக்ஷாவை அதிக தூரம் ஓட்டி சென்று உலக சாதனை படைத்த சென்னையை சேர்ந்த ஜெகதீசனின் பெயர் 2016ம் ஆண்டு கின்னஸ் புத்தக பிரதியில் இடம்பெற இருக்கிறது.

மும்பையில், நடந்த இதற்கான நிகழ்ச்சியில் கின்னஸ் சாதனைக்காக நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச அளவை காட்டிலும், இரு மடங்கு கூடுதல் தூரத்தை அவர் கடந்து அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார். அவரை பற்றியும், அவரது சாதனை பற்றியும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஆட்டோ ஓட்டுனர்

ஆட்டோ ஓட்டுனர்

சென்னையை சேர்ந்த ஜெகதீசன் [27]ஆட்டோரிக்ஷா ஓட்டுனராக இருக்கிறார். சிறு வயது முதலே பைக் ஸ்டன்ட் செய்வதில் ஆர்வம் இருந்துள்ளது. இந்தநிலையில், ஆட்டோ ஓட்டுனராக மாறிய பின், ஆட்டோரிக்ஷாவிலும் தனது சாகச வித்தையை பயிற்சி செய்திருக்கிறார்.

 பயிற்சி

பயிற்சி

பகலில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், இரவு நேரங்களில் மட்டும் ஆட்டோரிக்ஷாவை இரண்டு சக்கரங்களில் செலுத்தி பயிற்சி செய்திருக்கிறார். பல ஆண்டுகள் கடின பயிற்சிக்கு பின் இந்த உலக சாதனையை படைத்திருக்கிறார்.

 கன்ட்ரோல்

கன்ட்ரோல்

மணிக்கு 80 கிமீ வேகத்தில் ஆட்டோரிக்ஷாவை செலுத்தி இவ்வாறு சாகசம் செய்வதாகவும், ஸ்டீயரிங் கன்ட்ரோலில்தான் இந்த வித்தைக்கான சூட்சுமம் இருப்பதாகவும் பெருமிதம் தெரிவிக்கிறார்.

கின்னஸ் சாதனை

கின்னஸ் சாதனை

இந்தநிலையில், தனது திறமையை கின்னஸ் சாதனை புத்தகத்தின் இந்திய அமைப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி 17ந் தேதி மும்பை, ஜூகு பகுதியிலுள்ள விமான ஓடுதளத்தில் கின்னஸ் அதிகாரிகள் முன்பு அவர் தனது சாதனையை நிகழ்த்தி காட்டி அசத்தினார்.

கின்னஸ் நிபந்தனைகள்

கின்னஸ் நிபந்தனைகள்

குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரம் ஆட்டோ ரிக்ஷாவை இரண்டு சக்கரங்களில் செலுத்த வேண்டும். இடையில் ஒருமுறை கூட கீழே இறங்காமல், இரண்டு சக்கரங்களில் மட்டுமே முழுவதுமாக ஓட்ட வேண்டும் என்று கின்னஸ் சாதனை அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கின்னஸ் அமைப்பாளர்கள் வியப்பு

கின்னஸ் அமைப்பாளர்கள் வியப்பு

நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்சமான ஒரு கிலோமீட்டர் தூரத்தைவிட, இரு மடங்கு தூரத்திற்கு தனது ஆட்டோரிக்ஷாவை இரண்டு சக்கரங்களில் செலுத்தியிருக்கிறார். அவர் 2.2 கிலோமீட்டர் தூரம் வெறும் இரண்டு சக்கரங்களில் ஆட்டோரிக்ஷாவை செலுத்தி, புதிய உலக சாதனை படைத்தார். இது கின்னஸ் நிர்வாகிகளையே அசர வைத்திருக்கிறது.

கின்னஸ் புத்தகத்தில் பெயர்

கின்னஸ் புத்தகத்தில் பெயர்

நான்காண்டுகளுக்கு முன்பு அவர் சாதனை படைத்துவிட்டாலும், முதல்முறையாக அவரது பெயர் 2016ம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

ஜெகதீசன் சாதனை படைத்த வீடியோவை ஸ்லைடில் காணலாம்.

சென்னை ஆட்டோ டிரைவரின் கின்னஸ் சாதனை

முந்தைய ஸ்லைடில் உள்ள வீடியோ காட்சிகளில் சில இடங்களில் பொது சாலைகளில் ஆட்டோரிக்ஷா சாகசம் நடைபெறுவதாக அமைந்துள்ளது. அதனை டிரைவ்ஸ்பார்க் தளம் ஊக்குவிக்கவில்லை என்பதை தெரிவிக்கிறோம். பொது சாலைகளில் இதுபோன்ற சாகசங்களை செய்வதை கண்டிப்பாக தவிர்க்குமாறு டிரைவ்ஸ்பார்க் தளம் கேட்டுக்கொள்கிறது.

எங்களது சமூக வலைதள பக்கங்கள்

ஃபேஸ்புக் பக்கம்

டுவிட்டர் பக்கம்

 

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Chennai based autorickshaw driver Jagathish M has managed to see his name in the Guinness World Records, for the 2016 edition. The Indian had to drive his small vehicle on two wheels for 1.37 miles (2.2 km) and for that, he took it to just under 50 mph (80 km/h) before being able to steer it and leave a wheel hanging in the air.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more