சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை பணிகள் விறுவிறு... !!

Written By:

சென்னை - பெங்களூர் இடையே அமைக்கப்பட இருக்கும் புதிய எக்ஸ்பிரஸ் சாலைப் பணிகளை துவங்கும் பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது. இது இரு நகரங்களுக்கு இடையே பயணிப்போர் மத்தியில் ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது.

 சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை பணிகள் விறுவிறு... !!

சென்னை - பெங்களூர் இடையிலான போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது சென்னையிலிருந்து வேலூர் - கிருஷ்ணகிரி- ஓசூர் வழியாக தேசிய நெடுஞ்சாலை 44 வழியாகவும், ராணிப்பேட்டை - சித்தூர்- பலம்னேர்- ஒசக்கோட்டை வழியாக மற்றொரு சாலையிலும் செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

 சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை பணிகள் விறுவிறு... !!

சென்னையிலிருந்து வேலூர் - கிருஷ்ணகிரி - ஓசூர் இடையிலான 372 கிமீ தூரம் கொண்ட சாலை நாட்டிலேயே அதிக போக்குவரத்து மிகந்த சாலைகளில் ஒன்றாக இருக்கிறது. அதேபோன்று, சித்தூர் வழியான 335 கிமீ தூரம் கொண்ட சாலையில் மூன்றில் ஒரு பங்கு இருவழித்தடமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பாதுகாப்பு கருதி வேலூர்- கிருஷ்ணகிரி- ஓசூர் சாலையையே தேர்ந்து எடுக்கின்றனர்.

 சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை பணிகள் விறுவிறு... !!

இந்த நிலையில், இருநகரங்களுக்கு இடையிலான போக்குவரத்துத் தேவை அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு புதிய விரைவு சாலையை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

 சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை பணிகள் விறுவிறு... !!

இந்த சாலையானது பக்கத்திற்கு தலா 3 வழித்தடங்களுடன் 6 வழித்தட சாலையாக அமைகிறது. 90 மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கும். மேற்சொன்ன இரண்டு சாலைகளுக்கும் இடையில் இந்த புதிய சாலை அமைக்கப்பட இருக்கிறது. மேற்கண்ட சாலைகளில் சென்னையிலிருந்து பெங்களூர் செல்வதற்கு 6 முதல் 8 மணிநேரம் பிடிக்கிறது.

 சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை பணிகள் விறுவிறு... !!

புதிய எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்படும்போது, இருநகரங்களையும் 4 மணிநேரத்தில் இணைக்கும் வாய்ப்பு இருக்கிறது. சென்னை புறநகரில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பெங்களூர் புறநகர் பகுதியான ஒசக்கோட்டையில் முடிகிறது இந்த புதிய சாலை.

 சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை பணிகள் விறுவிறு... !!

ஸ்ரீபெரும்புதூர்- அரக்கோணம்-குடியாத்தம்- வி-கோட்டா- பலம்னேர்- மாலூர்- ஒசகோட்டை வரை இந்த புதிய சாலை அமைக்கப்பட இருக்கிறது. இந்த சாலை கட்டுமானப் பணிகள் 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர்.

 சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை பணிகள் விறுவிறு... !!

இந்த புதிய சாலை 262 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட இருக்கிறது. இந்த சாலையில் மணிக்கு 120 கிமீ வேகம் வரை செல்வதற்கான கட்டமைப்பு வசதிகளுடன் அமைகிறது.

 சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை பணிகள் விறுவிறு... !!

இந்த சாலையில் தங்கு தடையில்லாமல் செல்வதற்கு ஏதுவாக 60 பெரிய பாலங்களும், 97 சிறிய பாலங்களும் அமைக்கப்பட இருக்கின்றன. ரயில் தண்டவாளம் கடக்கும் பகுதிகளில் 4 தடங்களுடன் கூடிய மேம்பாலங்களும், யானைகள் கடக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு, அதற்கான கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட இருக்கின்றன.

 சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை பணிகள் விறுவிறு... !!

இந்த புதிய சாலைக்காக 2,800 ஹேக்டேர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும், மீதமுள்ள நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவாக முடிக்கவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.

சென்னை- பெங்களூர் இடையிலான புதிய எக்ஸ்பிரஸ் சாலை!

இந்த புதிய சாலை அமைந்தால் வார இறுதியில் இந்த இரு நகரங்களுக்கு இடையே பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும். தொழில் வளர்ச்சியும், ரியர் எஸ்டேட் துறையிலும் பெரும் வளர்ச்சி ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
The Chennai-Bangalore Expressway is a proposed corridor that would start at Hoskote in Bengaluru and would end in Sriperumbudur in Tamil Nadu. It is a 268-km road that would allow vehicles to ply at a speed of 120 km per hour.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark