சென்னை- பெங்களூரு 2:25 மணி நேரத்தில் போகலாம்! ரகசியமாக நடக்கும் புல்லட் ரயில் திட்ட பணிகள்!

தற்போது மும்பை- ஆமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டம் மிக துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் இந்த தடத்தில் புல்லட் ரயில்கள் ஓட்டம் துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மத்திய அரசு அடுத்த புல்லட் ரயில் வழி தடத்திற்கான பணிகளைதுவங்கியுள்ளது. அதன்படி சென்னை- பெங்களூரு மைசூரு ஆகிய நகரங்களை கடக்கும் வகையில் புல்லட் ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை இங்கே காணலாம்.

தற்போது சென்னையில் துவங்கி ஆந்திரா மாநிலம் வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூரு ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த புல்லட் ரயில் திட்டம் போடப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த வழி தடத்தில் வந்தே பாரத் ரயில் இயங்கி வரும் நிலையில் புதிதாக புல்லட் ரயிலுக்கு ஒரு ரயில் பாதை அமைக்கப்பட்டு அதில் அதிக வேக ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது உள்ள 6.5 மணி நேர பயணத்தை இந்த ரயில் வெறும் 2 மணி நேரம் 25 நிமிடத்தில் கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chennai Bangalore Bullet Train

இந்த புல்லட் ரயில் திட்டத்தை தேசிய அதிகவேக ரயில் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனம் தான் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்கான சர்வே பணிகள் தற்போது நடந்து வருகிறது. விரைவில் நிலம் எடுப்பு பணிகள் நடக்கும். முக்கியமாக ஆந்திர, கர்நாடக எல்லையில் இந்த பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது பிரதமர் மோடியின் நேரடி பார்வையில் இந்த பணிகள் நடந்து வருகிறது.

இந்த புல்லட் ரயில் பாதையில் மொத்தம் 9 இடங்களில் ஸ்டேஷன்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, பூந்தமல்லி, அரக்கோணம், சித்ததூர், பங்கார்பேட், பெங்களூரு, சென்னபட்டனா, மாண்டியா மற்றும் மைசூரு ஆகிய பகுதிகளில் புல்லட் ரயில்கள் நின்று செல்லும் வகையில் பாதை கட்டமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Bangalore Bullet Train

இந்த புல்லட் ரயில் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அதிகாரிகள் நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் நிலம் எவ்வளவு தூரம் கையகப்படுத்தப்படவுள்ளது என்பதை அறிய கற்கள் ஊனப்பட்டு வருகின்றன.

இது போக புல்லட் ரயில் பாதை அமைப்பதற்கான சர்வேயும் நடக்கிறது. அதன்படி எந்தெந்த இடத்தில் எல்லாம் பாலங்கள் அமைக்கப்பட வேண்டும். எங்கு பூமிக்கு அடியில் பாதைகள் அமைக்கப்பட வேண்டும். எங்கு எல்லாம் புல்லட் ரயிலுக்கான மின்சாரத்தை வழங்க சப் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட வேண்டும் என திட்டமிடப்பட்டு வருகிறது.

Chennai Bangalore Bullet Train

இந்த புல்லட் ரயில் திட்டம் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில் இந்த வழி தடத்தில் மொத்தம் 350 கி.மீ வேகத்தில் புல்லட் ரயில்கள் பயணிக்கும். அதற்கு ஏற்றார் போல பாதுகாப்பு அம்சங்களும் இந்த இடங்களில் அதிகம் செய்ப்படும் என புல்லட் ரயிலை கட்டுமானம் செய்யும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது இந்த புல்லட் ரயில் வழி தடத்தை முழுமையாக வடிவமைக்க டென்டர் விடப்பட்டுள்ளது. இதை டென்டர் எடுக்கும் நிறுவனம் முழுமையாக ஆய்வு செய்து புல்லட் ரயில் வழிதடத்தை ஒருமேப்பாக உருவாக்கி வழங்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் புல்லட் ரயில் கட்டுமானம் என்பது நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் புல்லட் ரயில் பயணம் என்பது பலரது கனவாக இருக்கிறது. விரைவில் மும்பை ஆமதாபாத் இடையே இந்த புல்லட் ரயில் இயக்கம் துவங்கினாலும், சென்னைக்கு அடுத்தக்கட்ட புல்லட் ரயில் எப்பொழுது வரும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. தற்போது தான் பணி ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் குறைந்தது 5 ஆண்டுகளாவது ஆகும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, June 13, 2025, 11:50 [IST]
English summary
Chennai bangalore mysuru bullet train project current status route map full plan details
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X