தமிழ்நாட்டிற்கு வாரி வழங்கியிருக்கும் மத்திய அரசு!! சென்னை வேற லெவலில் மாற போகுது!

பெங்களூர்- சென்னை விரைவுச்சாலை, தென்னிந்தியாவின் முக்கியமான விரைவுச்சாலை ஆக அமைக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 260கிமீ தொலைவிற்கு அமைக்கப்பட்டு வரும் இந்த விரைவுச்சாலையை பற்றிய புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. தேசிய நெடுஞ்சாலை துறையின் மாகாண அதிகாரி இந்த தகவலை வெளியிட்டு உள்ளார். இதுகுறித்தும், தென்னிந்திய அளவில் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என கருதப்படும் இந்த விரைவுச்சாலை குறித்தும் கூடுதல் தகவல்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

எந்தவொரு நாட்டிற்கும் சாலைகள் மிக அத்தியாவசியமானவை என்பதை உணர்ந்து இந்தியாவில் மத்திய அரசு நெடுஞ்சாலைகளிலும், விரைவுச்சாலைகளிலும் கடந்த பல வருடங்களாகவே கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக கொண்டுவரப்பட்ட மும்பை- டெல்லி விரைவுச்சாலை ஒட்டுமொத்த இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

chennai-bengaluru expressway karnataka almost done

அதேபோன்று, தென்னிந்தியாவில் முக்கியமான விரைவுச்சாலை சென்னை மற்றும் பெங்களூர் இடையே போடப்பட்டு வருகிறது. தொழிற்நுட்ப வளர்ச்சியினால் கடந்த 10 வருடங்களில் அசூர வளர்ச்சி கண்டிருக்கும் பெங்களூரை சர்வதேச துறைமுகத்தை கொண்ட சென்னை உடன் இன்னும் நெருக்கமாக இணைக்கும் விதமாக இந்த விரைவுச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

அதாவது, இந்த விரைவுச்சாலையினால் இந்த இரு முக்கிய தென்னிந்திய நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் வெகுவாக குறையும். மொத்தம் 260கிமீ தொலைவிற்கு இந்த விரைவுச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 71கிமீ சாலை கர்நாடகாவில் அமைகிறது. ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டிலும் இந்த விரைவுச்சாலை அமைகிறது. இந்த நிலையில், கர்நாடகாவில் 71கிமீ தொலைவிற்கான சாலை அமைக்கும் பணிகள் இன்னும் 1 மாத காலத்திற்குள் நிறைவடைய உள்ளதாம்.

"400 மீட்டர் பகுதியை தவிர, பெங்களூர்-சென்னை விரைவுச்சாலையின் கர்நாடகா பிரிவில் (ஹோஸ்கோட் முதல் பெத்தமங்கலா வரை) பணிகள் நிறைவடைந்துள்ளன. ஹோஸ்கோட் அருகே ஜின்னகெரா கிராஸில் உள்ள ஒரு கோவிலை இடமாற்றம் செய்வதில் தாமதம் ஏற்பட்டதால், இந்த 400 மீட்டர் பிரிவில் நிலுவையில் உள்ள பணிகள் 2 வாரங்களுக்கு முன் மாற்றப்பட்டன.

இன்னும் ஒரு மாதத்தில் முழுப் பகுதியையும் முடித்துவிடுவோம்" என ஆணித்தனமாக இதுகுறித்து கூறும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி விலாஸ் பி பிராமன்கர் சுங்கச்சாவடி கட்டணங்கள் குறித்து பேசுகையில், "நாங்கள் இன்னும் டோல் கட்டணத்தை இறுதி செய்யவில்லை. ஆனால், அடுத்த ஆண்டு ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் பிரிவுகள் நிறைவடைந்த பிறகு இந்த சாலையில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

கர்நாடகாவின் முழுப் பகுதியும் தயாரானதும், பெங்களூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் இந்த 71கிமீ சாலையை பயன்படுத்தி மாலூர் மற்றும் பங்கார்பேட்டை போன்ற இடங்களுக்கு செல்லலாம்" என்றார். ஏற்கனவே கூறியதுபோல், கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு என 3 மாநிலங்களிலும் இந்த விரைவுச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. தற்சமயம் பயன்பாட்டில் இருக்கும் சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை ஆந்திராவிற்குள் குறுகிய தொலைவிற்கு மட்டுமே செல்கிறது.

அதேபோல், இந்த புதிய விரைவுச்சாலை ஆனது காஞ்சிபுரத்தையும் சென்னை உடன் இணைக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் மொத்தம் 4 விதமான பேக்கேஜ்களாக இந்த பெங்களூர்- சென்னை விரைவுச்சாலையை அமைத்து வருகின்றனர். இதில், குடிபாலா (ஆந்திரா)- வாலஜாபாத் (24கிமீ), வாலஜாபாத்- அரக்கோணம் (24.5கிமீ), அரக்கோணம்- காஞ்சிபுரம் (25.5கிமீ) மற்றும் காஞ்சிபுரம்- ஸ்ரீபெரும்புதூர் (32.1கிமீ) உள்ளிட்டவை அடங்குகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பார்க்க போனால், தமிழ்நாட்டில் தான் இந்த விரைவுச்சாலையின் பெரும்பான்மையான பகுதிகள் அமையவுள்ளன. 100கிமீ-க்கும் அதிகமான சாலை தமிழ்நாட்டில்தான் அமைகிறது. அதேபோல், கர்நாடகாவை காட்டிலும் ஆந்திராவில் இந்த விரைவுச்சாலை அதிக தொலைவிற்கு அமையவுள்ளது. இது ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நிறைய கிராமங்களை பொருளாதார ரீதியாக மேம்பட வைக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 16, 2024, 23:25 [IST]
English summary
Chennai bengaluru expressway almost done in karnataka check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+