வெறும் 19 வயதில் மொத்த இந்தியாவைவும் பெருமைப்படுத்திய சென்னை இளைஞர்!! இது எல்லாம் காலத்துக்கும் நிற்கும்!

இந்தியாவில் பைக் ரைடர்களுக்கு பஞ்சமே கிடையாது. ஒரு காலத்தில் பைக் & கார் ரேசர்கள் என்றாலே வெளிநாடுகளில் மட்டும்தான் இருப்பர் என்கிற நிலை மாறி தற்போது இந்தியாவில் இருந்தும் பல தரமான பைக் ரைடர்கள் உலகளவில் ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோல், புது, புது இந்திய பைக் ரைடர்கள் உலக தரத்திற்கு முன்னேறி உள்ளனர். அந்த வரிசையில், வெறும் 19 வயதே ஆன நம் சென்னையை சேர்ந்த இளம் பைக் ரேசர் ஒருவர் சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்பதற்கு தகுதி பெற்றுள்ளார். யார் அந்த இளம் பைக் ரைடர்? கூடுதல் விபரங்களை இனி விரிவாக பார்க்கலாம், வாங்க.

கவின் குவிண்டால் (Kavin Quintal), சென்னையை சேர்ந்த வளர்ந்துவரும் இளம் பைக் ரைடர், வயது 19. ஐரோப்பிய ஸ்டாக் சாம்பியன்ஷிப் மற்றும் ஆசியன் ரோடு ரேசிங் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ள உலக தரம் வாய்ந்த பைக் ரைடர் கவின் குவிண்டால் ஆவார். ஜூனியர் ஜிபி பந்தயத்தின் 3 சுற்றுகளில் முதல் 10 இடங்களுக்குள் தனது இடத்தை பிடித்து அசத்தியவர்.

kavin quintal at worldsbk ssp300

13 வயதில் இருந்தே தேசிய அளவிலான பைக் பந்தயங்களில் கலந்துக் கொண்டுவரும் கவின் குவிண்டால், 2021 மற்றும் 2023 என இருமுறை இந்தியாவின் டேலண்ட் கோப்பையை வென்றுள்ளார். இதன் மூலமாக, ஆசிய அளவிலான போட்டிகளில் கலந்துக் கொள்ள ஆரம்பித்த கவின் குவிண்டாலுக்கு ஐரோப்பிய பைக் பந்தயங்களிலும் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் கவின் குவிண்டால் உலகளவில் கவனிக்கப்படும் பைக் ரைடர் ஆகினார்.

அதனை தொடர்ந்து தற்போது, உலகின் மிக பெரிய சூப்பர்பைக் சாம்பியன்ஷிப் பந்தயங்களுள் ஒன்றான வேர்ல்டு எஸ்.பி.கே எஸ்.எஸ்.பி300 (WorldSBK SSP300) பந்தயத்தில் கலந்துக் கொள்ள தயாராகி வருகிறார், கவின் குவிண்டால். இந்தியாவில் இருந்து எந்தவொரு பைக் ரைடரும் இதுவரையில் இந்த சர்வதேச பைக் பந்தயத்தில் கலந்துக் கொண்டதில்லை. இதன் மூலமாக வேர்ல்டு எஸ்.பி.கே எஸ்.எஸ்.பி300-இல் கலந்துக் கொள்ளும் முதல் இந்திய பைக் ரைடர் என்கிற பெருமையை நம் சென்னையை சேர்ந்த கவின் குவிண்டால் பெறவுள்ளார்.

kavin quintal at worldsbk ssp300

அயர்லாந்தை சேர்ந்த டீம்# 109 ரெட்ரோ டிராஃபிக் கவாஸாகி (Team# 109 Retro Traffic Kawasaki) குழு உடன் இணைந்து இந்த பந்தயத்தில் கவின் குவிண்டால் போட்டியிடவுள்ளார். டீம்# 109 ரெட்ரோ டிராஃபிக் கவாஸாகி குழுவை நிர்வகிப்பது காமன் ரேசிங் க்ளோபல் சர்வீஸ் என்கிற நிறுவனம் ஆகும்.

டீம்# 109 ரெட்ரோ டிராஃபிக் கவாஸாகி குழுவில் அங்கம் வகித்துவரும் ஸ்பெயின் பைக் ரைடர் டேனியல் மோகேடாவின் இடத்தை நிரப்பும் பொருட்டு இந்தியாவின் குவிண்டால் கலந்துக் கொள்கிறார். இந்த அயர்லாந்து அணியின் முன்னணி பைக் ரைடராக விளங்கும் டேனியல் மோகேடா சமீபத்தில் நடந்த சூப்பர்ஸ்போர்ட் 300 பந்தயத்தின்போது ஏற்பட்ட மோதலில் அடைந்த காயத்தினால் முக்கியமான வேர்ல்டு எஸ்பிகே எஸ்எஸ்பி300 பந்தய தொடரை தவறவிடுகிறார்.

வேர்ல்டு எஸ்பிகே எஸ்எஸ்பி300 பந்தயம் ஆனது 1988ஆம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. மிகவும் அதிகமாக மாடிஃபை செய்யப்பட்ட புரோடெக்‌ஷன் ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிள்கள் இந்த பந்தயத்தில் பயன்படுத்தப்படுகின்றன. அதாவது, இந்த பந்தயத்திற்கென பிரத்யேகமாக மோட்டார்சைக்கிள்கள் உருவாக்கப்படுவதில்லை. பொது விற்பனையில் இருக்கும் பைக்குகள் தான் பந்தயத்திற்கு ஏற்ப மாடிஃபை செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.

செக் குடியரசு நாட்டில், வேர்ல்டு எஸ்பிகே எஸ்எஸ்பி300 பந்தய தொடரின் பயிற்சி சீசன்கள் இன்று (ஜூலை 19) துவங்குகின்றன. அதனை தொடர்ந்து முக்கியமான போட்டிகள் ஜூலை 20இல் இருந்து துவங்கப்பட உள்ளன. பயிற்சி சீசனின் 4வது சுற்றில் கவின் குவிண்டால் பங்கேற்க உள்ளார். இத்தகைய பந்தயத்தில் கலந்துக் கொள்வது குறித்து கவின் குவிண்டால் கூறுகையில், "இது ஒரு சிறந்த வாய்ப்பு, நான் ஒரே நேரத்தில் கற்றுக் கொள்ளவும், அனுபவிக்கவும் முயற்சிப்பேன்" என்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், கடந்த காலங்களில் இருந்து பல இந்திய பைக் ரைடர்கள் உலகளவிலான பந்தயங்களுக்கு முன்னேற்றி உள்ளனர். இருப்பினும், சென்னையை சேர்ந்த கவின் குவிண்டாலின் வளர்ச்சியை அசூர வளர்ச்சியாகவே பார்க்கிறோம். இந்தியாவில் இருந்து எந்த பைக் ரைடரும் தகுதி பெறாத பந்தயத்தில் வெறும் 19 வயதிலேயே பங்கேற்க உள்ளார் என்றால், வரும் ஆண்டுகளில் கவின் குவிண்டாலின் வளர்ச்சி இன்னும் பெரியதாக இருக்கும் என்பது உறுதி.

More from DriveSpark

Article Published On: Friday, July 19, 2024, 11:40 [IST]
English summary
Chennai bike rider kavin quintal debut at worldsbk ssp300 competitions
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+