ஃபாரீன் போல ஆக போகுது நம்ம சென்னை.. பேருந்துகளுக்கு என தனி பாதையை அமைக்க பிளான் போட்டுட்டு இருக்காங்க!

நீங்கள் சென்னையில் வசிப்பவராக இருந்தால் காலை மற்றும் மாலையில் வெளியில் செல்வதைக் கட்டாயம் விரும்ப மாட்டீர்கள். ஏனெனில் அந்த அளவிற்கு மிக மோசமான போக்குவரத்து நெரிசலே காலையிலும், மாலையிலும் சென்னையில் நிலவுகின்றது. இந்த போக்குவரத்து நெரிசலுக்கு மிக முக்கியமான காரணங்களாக பல கூறப்படுகின்றன.

அதில் ஒன்றாக சென்னை மாநகரப் போக்குவரத்து (MTC) பேருந்துகளைக் கூறலாம். சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின்கீழ் இயக்கப்படும் பேருந்துகள் பெரும்பாலானவை சாலையை அடைத்த வண்ணம் பயணிப்பதும், நடு ரோட்டில் வாகனத்தை நிறுத்தி பயணிகளை ஏற்றுவது மற்றும் இறக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.

Chennai bus bay

இதனாலேயே சில நேரங்களில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பிற வாகன ஓட்டிகள் இடையே வாக்குவாதம் உள்ளிட்ட மோதல்கள் ஏற்படுகின்றன. இதுமட்டுமில்லைங்க, அரசு பேருந்து ஓட்டுநர்கள் அடாவடியாக செயல்படுவதன் காரணத்தினால் பிற வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்படுகின்றது. அதுதவிர, மிகப் பெரிய போக்குவரத்து நெரிசலுக்கும் அது வழிவகுக்கின்றது.

இதுமட்டுமா, சில நேரங்களில் வாகன விபத்துகளுக்கும் அது வழிவகுக்கின்றது. இந்த நிலையில்தான், சென்னையில் அரசு பேருந்துகளுக்கு என சூப்பரான திட்டத்தை வகுத்து இருக்கின்றனர். அதாவது, 'பஸ் பே' (Bus Bay) எனும் திட்டத்தையே சென்னை மாநகராட்சியில் நடைமுறைப்படுத்த அரசு தற்போது ஆயத்தமாகி உள்ளது.

முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த திட்டம் சென்னையில் அமல்படுத்தப்பட இருக்கின்றது. இதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும் பணியில் தற்போது அதிகாரிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளனர். பஸ் பே என்பது பேருந்து மட்டுமே பயணிப்பதற்கான தனி பாதை ஆகும். பேருந்துகள் தடையில்லாமல் பயணிப்பதை உறுதிப்படுத்தும்.

இந்த பாதையானது, பேருந்து நிறுத்தம் வருவதற்கு சில மீட்டர் முன்னாடியே தொடங்கிவிடும். அது பேருந்து நிறுத்தம் தாண்டியும் சில மீட்டர் இடைவெளிக்கு நீண்டிருக்கும். பேருந்துகள் சுலபமாக பேருந்து நிறுத்தத்திற்கு வந்துவிட்டு, பின்னர் தடையில்லாமல் வெளியேறுவதை உறுதிச் செய்யும் விதமாக இந்த பாதை இருக்கும்.

மேலும், பயணிகள் பத்திரமாக பேருந்தில் ஏறி - இறங்கவும் இது வழிவகுக்கும். இதன் அடிப்படையிலேயே இந்த பஸ் பே திட்டத்தை பயன்பாட்டிற்குக் கொண்டு வர போக்குவரத்துத் துறை தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. அதேவேளையில், பேருந்துக்கான வழித்தடத்தில் மற்ற வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, ஆட்டோக்கள் இந்த தடத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை மீறும் வாகனங்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், அபராதம் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நடவடிக்கைகளும் சென்னயைில் தடையில்லா போக்குவரத்தையும், விபத்தில்லா போக்குவரத்தையும் உருவாக்குவதே முக்கிய நோக்கமாகும். மேலும், சிரமம் இல்லா பயணத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கிலும் இந்த பஸ் பே திட்டம் அமல்படுத்தப்பட இருக்கின்றது. முதல் கட்டமாக சென்னை முதல் தாம்பரம் வரையிலும், கிண்டி முதல் கோயம்பேடு சிஎம்பிடி பேருந்து நிறுத்தம் வரையிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட இருக்கின்றது.

பேருந்துகள் இந்த வழித்தடத்தை பயன்படுத்தியே பயணிகளை ஏற்றுவது மற்றும் இறக்குவது ஆகியவற்றை செய்ய வேண்டும். இடையில் நிறுத்தி பயணிகளை ஏற்றவோ இறக்கவோ கூடாது. அர்ப்பணிக்கப்பட்ட பாதையை பயன்படுத்துவதை ஒவ்வொரு பேருந்து ஓட்டுநரும் உறுதி செய்ய வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நம்ம சென்னையில் உள்ள பெரும்பாலான பேருந்து ஓட்டுநர்கள் பேருந்து நிறுத்தத்தில் முறையாக பேருந்தை நிறுத்துவதே இல்லை. பேருந்து இருக்கும் இடத்தைத் தாண்டிச் சென்றே பேருந்தை நிறுத்துகின்றனர். சில நேரங்களில் நிறுத்தங்களில் நிறுத்துவதே இல்லை. இந்த மாதிரியான சூழல்களைத் தவிர்க்கும் பொருட்டே பஸ் பே திட்டம் விரைவில் கொண்டு வரப்பட இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, November 24, 2023, 22:05 [IST]
English summary
Chennai bus bay plan details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+