28 கார்கள் 29 பைக்குகளை ஊழியர்களுக்கு பரிசளித்த சென்னை முதலாளி! யாருப்பா இவரு!

சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் தன் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்த ஆயுத பூஜைக்கு 28 கார்கள் மற்றும் 29 பைக்குகளை வாங்கி பரிசாக வழங்கியுள்ளார். இது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. தங்கள் ஊழியர்களுக்கு இப்படியான வாகனங்களை வாங்கி பரிசாக வழங்கிய உரிமையாளரை பலர் பாராட்டி வருகிறார்கள். இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சென்னை செம்மஞ்சேரி மற்றும் நாவலூர் ஆகிய பகுதிகளில் டீம் டேட்டலிங் சொல்யூஷன் என்ற பெயரில் தனியார் நிறுவனம் ஒன்று கடந்த 19 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்நிறுவனம் தற்போது மிகப்பெரிய அளவில் அதிக ஊழியர்களைக் கொண்ட பெரிய நிறுவனமாக இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவன உரிமையாளர் ஸ்ரீதர் கண்ணன் இந்த நிறுவனத்தில் பணியாற்றும் நம்பகமான ஊழியர்களுக்கு பரிசு வழங்க விரும்பினார்.

Chennai Businessman Gifts Cars Bikes

அதன்படி அவரது நிறுவனத்தில் 10ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஊழியர்களுக்கு காரை பரிசாக வழங்கவும், 7ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு பைக்கை பரிசாக வழங்கவும் முடிவு செய்தார். அதன்படி நாவலூர் பகுதியில் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் இந்த ஆண்டுக்கான ஆயுத பூஜை ஏற்பாடுகள் எல்லாம் நடந்து வந்தது. அப்பொழுது நிறுவனத்தின் தரப்பில் இருந்து ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் ஆயுத பூஜை விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

அதன்படி ஊழியர்களின் குடும்பத்தினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில். ஊழியர்களுக்கு தெரியாமல் சர்ப்ரைஸ் ஆக நீண்ட ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களுக்கு கார் மற்றும் பைக்குகளை பரிசாக வழங்கினார். இவர் வழங்கிய கார் பைக் பரிசுகளில் பென்ஸ் கார் முதல் ஸ்கூட்டர்கள் வரை பல்வேறு விதமான வாகனங்கள் இருந்தன மொத்தம் 28 கார்களும் 29 பைக்குகளும் பரிசாக வழங்கப்பட்டது.

Chennai Businessman Gifts Cars Bikes

இதற்காக நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்ரீதர் கண்ணன், ரூபாய்3.5 கோடி செலவு செய்துள்ளார். இந்த பரிசை வழங்கிய அவர் ஊடகத்திடம் பேசும் போது கடந்த 25ம் ஆண்டு நிறுவனத்தை 4 பேருடன் துவங்கியதாகவும் தற்போது அவரது நிறுவனத்தில் 150 பேர் பணியாற்றி வருவதாகவும், சென்னையில் செம்மஞ்சூர் மற்றும் நாவலூர் ஆகிய இரண்டு பகுதிகளில் தங்கள் நிறுவனம் நடந்து வருவதாகவும் தங்கள் வளர்ச்சிக்கு பாடுபட்ட ஊழியர்களுக்கு இவர் வழங்கும் பரிசு எனவும் பேசியுள்ளார்.

இவரது ஆயுத பூஜை நிகழ்ச்சியில் கார் பரிசு வழங்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இதை வைத்து பார்க்கும்போது இவர் சிலருக்கு புதிய காரை வாங்கி பரிசளிக்கவில்லை. மார்க்கெட்டில் உள்ள செகண்ட் ஹேண்ட் காரை வாங்கி பரிசளித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து வாகனங்களும் பதிவும் செய்யப்பட்ட வாகனங்களாகவே உள்ளன.

Chennai Businessman Gifts Cars Bikes

இந்த பதிவு எண்ணை வாகன் தளத்தில் செக் செய்த போது இது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே பதிவு செய்யப்பட்ட வாகனங்களாக உள்ளன. அதே நேரத்தில் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வாகனங்களும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதை வைத்து பார்க்கும் போது இவர் ஊழியர்களுக்கு தேவையான வாகனங்களை அவர்களிடமே கேட்டு அறிந்து இந்த பரிசை வழங்கி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக கடந்த ஆறு மாதங்களாக இவர் பணியாற்றி இருக்கலாம் என தெரிகிறது. ஒவ்வொரு வாகனமாக வாங்கி அனைவருக்கும் வாகனம் வாங்கிய பிறகு இந்த ஆயுத பூஜைக்கு இவர் வாகனத்தை பரிசளித்து ஊழியர்களை மகிழ்வித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் இவரது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தற்போது மகிழ்ச்சியில் இருப்பார்கள்.

பொதுவாக ஆயுத பூஜைக்கு தங்கள் வாகனங்களை சுத்தம் செய்து பூஜை போடுவது தான் வழக்கமாக இருக்கும். இந்நிலையில் இந்த ஆயுத பூஜை நாளை முன்னிட்டு ஊழியர்களுக்கு புதிய வாகனங்களை வாங்கி பரிசளித்தது நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது பலர் இப்படி ஒரு முதலாளி நமக்கு கிடைக்கவில்லையே என இயக்கத்தில் இருக்கிறார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தன் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் எந்த விதத்திலும் கஷ்டப்படக் கூடாது என்பதை மனதில் வைத்து நிறுவனத்தின் உரிமையாளர் அந்த ஊழியர்களுக்கு இப்படியான வாகனங்களை பரிசளித்தது நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதுதான். ஒவ்வொரு வருஷமும் இப்படியாக பல நிறுவன உரிமையாளர்கள் தங்கள் ஊழியர்களுக்கு பரிசளித்து வருகிறார்கள். அந்த வரிசையில் சென்னையில் உள்ள தொழிலதிபர் இப்படி பரிசளித்தது தற்போது பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, October 13, 2024, 12:00 [IST]
English summary
Chennai businessman gifts cars bikes employees ayudha pooja
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X