காரை ரிவர்ஸ் எடுத்த கணவன்! நசுங்கி பலியான மனைவி! இந்த தப்பு தான் எல்லாத்துக்கும் காரணம்!
சென்னை ஆவடி பகுதியில் கணவர் காரை ரிவர்ஸில் எடுக்கும் போது காருக்கும் சுவருக்கும் இடையே சிக்கி மனைவி பரிதாபமாக பலியான சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. கார் ஓட்ட தெரியாமல் கணவர் இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இது அப்பகதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காரை ரிவர்ஸில் எடுக்கும் போது எப்படி எடுக்க வேண்டும்? இது போன்ற விபத்து ஏற்படாமல் எப்படி தடுக்க வேண்டும் என்ற விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.
சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் ராஜா, இவருக்கு திருமணமாகி மனைவி இருக்கிறார். இவர் கடந்த மாதம் புதிதாக மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் காரை வாங்கியுள்ளார். ஆனால் இவருக்கு கார் ஓட்ட தெரியாது. தற்போது டிரைவிங் பயிற்சி பள்ளியில் சேர்ந்து கார் ஓட்ட கற்று வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை எனவும் தெரிகிறது.

இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் காரில் கோவிலுக்கு சென்று வர முடிவு செய்தனர். கார் சரியாக ஓட்ட தெரியவில்லை என்றாலும் மனைவியை அழைத்துக்கொண்டு காரிலேயே கோவிலுக்கு சென்றுள்ளார். எப்படியோ காரை ஓட்டி சென்று பத்திரமாக வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் காரை பார்க்கிங் செய்ய மனைவியை உதவிக்கு அழைத்துள்ளார்.
மனைவி காரின் பின்னால் இருந்து ரிவர்ஸ் பார்க்க கணவன் காரை ரிவர்ஸில் எடுத்து பார்க்கிங் செய்ய முயற்சி செய்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக இவர் காரை ரிவர்ஸில் எடுக்கும் போது மனைவி காருக்கும் சுவருக்கும் நடுவே நின்றார். அப்பொழுது ராஜாவால் காரை கண்ட்ரோல் செய்ய முடியவில்லை. இதனால் அவர் காரை ரிவர்ஸில் எடுக்கும் போது எதிர்பாராத விதமான கார் அவரது மனைவி மீது மோதி அவரை சுவற்றில் வைத்து நைத்தது.

இதனால் பதறிய ராஜாஜ காரிலிருந்து இறங்கி அவரது மனைவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். அப்பொழுது அவரது மனைவியில் நெஞ்சு, கால் உள்ளிட்ட பல பகுதிகளில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது மனைவி, சிகிச்சை பலனிற்றி உயிரிழிந்தார். இந்த செய்தி தற்போது அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கார் ஓட்ட படிக்கும்போது பலர் செய்யும் தவறு சரியான வழி காட்டி இல்லாமல் காரை இயக்குவது தான். கார் நன்றாக ஒட்டப்படிக்கும் வரை சரியான வழிகாட்டி இல்லாமல் காரை இயக்க முயற்சி செய்ய கூடாது. முக்கியமாக ரிவர்ஸ் எடுப்பது, பார்க்கிங் செய்வது தான் கார் ஓட்டுவதில் சிரமமான டாஸ்காக இருக்கும். இது போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
பலர் காரை ரிவர்ஸ் எடுக்கும் போது நேரடியாக காருக்கு பின்னால் நின்று ரிவர்ஸ் பார்க்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு காருக்கு பக்க வாட்டில் முடிந்தளவு தூரமாக நின்று கார் எளிதில் அருகில் வராத இடத்தில் நின்று ரிவர்ஸ் பார்த்து டிரைவருக்கு வழி காட்டினால் இது போன்ற விபத்துக்களை தவிர்க்க முடியும். இந்த விபத்திற்கு முக்கியமான காரணம் போதுமான பயிற்சி இல்லாமல் வாகனத்தை இயக்க முயற்சி செய்ததுதான்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனங்களை ஓட்ட படிக்கும் பலர் இது போன்ற தவறுகளை செய்து மிகப்பெரிய சிக்கலில் மாட்டி விடுகின்றனர். இதனால் நீங்கள் கார் ஓட்டி படித்தால் நன்றாக ஓட்டி படிக்கும் வரை முறையாக கார் ஓட்டி தெரிந்த பயிற்சியளித்து அனுபவம் உள்ள நபர்களை அருகில் வைத்துக்கொள்வது நல்லது. இதனால் தேவையில்லாத இழப்புகளை தவிர்க்க முடியும்.


Click it and Unblock the Notifications









