சிஎஸ்கே-வை விடுங்க சென்னை டர்போரைடர்ஸ் தான் இந்த தடவை கலக்க போறாங்க! எங்க தெரியுமா?
தெற்காசியாவிலேயே முதன்முறையாக சென்னையில் வரும் 9 மற்றும் 10ம் தேதி எஃப் 4 கார் பந்தயம் இரவு நேர கார் பந்தயமாக சென்னை சாலைகளில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான முன்னேற்பாடுகள் எல்லாம் தயாராகி வருகின்றன. இதற்கான டிக்கெட்டுகளும் ஆன்லைனில் விற்பனையாகி வரும் நிலையில் இந்தப் போட்டி குறித்த விரிவான விபரங்களை தான் நாம் இங்கே காணப் போகிறோம்.
சென்னையில் கார் ரேஸ் பந்தயமான இந்தியன் ரேஸிங் லீக் போட்டிகள் டிசம்பர் 1ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிகள் மொத்தம் 5 சுற்றுகளாக நடைபெற உள்ளன. இந்தியன் ரேஸிங் லீக் மற்றும் எஃப் 4 இந்தியன் சாம்பியன்ஷிப் ஆகிய போட்டிகள் ஒரே நேரத்தில் நடத்தப்படுகின்றன.

இதில் முதல் மூன்று சுற்றுகள் மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட் பகுதியிலும் நான்காவது சுற்று சென்னை ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட்டிலும் ஐந்தாவது சுற்று மீண்டும் மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்டிலும் நடைபெற திட்டமிட்டுள்ளது. இந்த போட்டி சென்னையில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. மக்கள் இதைபற்றி தான் அதிகமாக பேசி வருகின்றனர்.
முதல் சுற்று ஏற்கனவே நிறைவேறிய நிலையில் இரண்டாவது சுற்று டிசம்பர் 1 மற்றும் 2ஆகிய தேதிகளில் ஏற்கனவே நடந்து முடிந்து விட்டன. இந்த தேதிகளில் இந்தியன் ரேஸிங் லீக் மற்றும் எஃப்4 ஆகிய போட்டிகள் மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் வைத்து நடந்தது. இன்று இந்தியன் ரேஸிங் லீக்கிற்கான மூன்றாவது சுற்று நடக்கிறது. 5 மற்றும் 6ம் தேதிகளில் இந்த மூன்றாவது சுற்றின் எஃப்4 கார்பந்தயம் போட்டியும் நடக்க உள்ளது.

டிசம்பர் 8-10ம் தேதி வரை இந்தியன் ரேஸிங் லீக் மற்றும் எஃப்4 கார் பந்தயப் போட்டி சென்னை ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் பகுதியில் வைத்து நடக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பார்முலா ரேஸிங் சர்க்யூட் என்பது சென்னை சாலைகளில் அமைக்கப்பட உள்ளன. சென்னை தீவுத்திடல் பகுதியை சுற்றியுள்ள சாலைகள் இந்த கார் ரேஸ் பந்தயத்திற்காக தயாராகி வருகின்றன. எஃப்4 கார் பந்தயத்திற்கான ஐந்தாவது சுற்று 16, 17ம் தேதிகளில் நடக்கவுள்ளன.
இந்தப் போட்டிகளில் மொத்தம் 12டிரைவர்கள் பங்கேற்க உள்ள நிலையில் ஒரு டீமிற்கு இரண்டு டிரைவர்கள் வீதம் மொத்தம் 6டீம்கள் இதில் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஹைதராபாத் பிளாக் பேட்ஸ், ஸ்பீட் டிமன்ஸ் டெல்லி, சென்னை டர்போ ரைடர்ஸ், காட் ஸ்பீட் கொச்சி, கோவா ஆசஸ், பெங்களூர் ஸ்பீட்டிஸ்டர்ஸ் ஆகிய டீம்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியன் ரேஸிங் லீக் மற்றும் எஃப்4 ஆகிய இரு போட்டிகளுக்குமே இந்த டீம்களின் பெயர்கள் தான் வைக்கப்பட்டுள்ளன.

போட்டியில் வெற்றி பெறும் தனிப்பட்ட டிரைவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்கள் சார்ந்த டீம்களுக்காகவும் கோப்பைகள் வழங்கப்பட உள்ளன. அதன்படி வெற்றி பெறும் கார்கள் டீமின் ஒட்டுமொத்த பெர்ஃபார்மென்ஸ் ஆகியவற்றை வைத்து எந்த டீம் வெற்றி பெற்றது என்ற அறிவிப்பும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக இப்படியான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் இந்த சீசன் முழுவதும் அவர்கள் விரும்பும் டீம் எப்படி பெர்ஃபார்ம் செய்கிறது என்பதை சீட் நுனியில் இருந்து பார்க்கும் அளவிற்கு இந்த போட்டி ஆர்வமாக இருக்கும் என கூறப்படுகிறது.

ரேஸிங் லீக் போட்டி என்பது இந்தியாவில் உள்ள மோட்டார் ஸ்போர்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் அதிகரிக்கவும் வளர்ந்து வரும் மோட்டார் ரேஸர்களை ஊக்குவிக்கவும் அவர்களுக்கு திறனை காட்டும் ஒரு களமாக பயன்படுத்தவும் இது உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் பொழுதுபோக்கு அதே நேரம் திறமையை மேம்படுத்தும் ஒரு இடமாக இந்த இந்தியன் ரேசிங் லீக் உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பொது சாலைகளில் இந்த ரேஸ் போட்டியை நடத்துவதற்காக தமிழக அரசு உதவி செய்து வருகிறது. தமிழக அரசின் விளையாட்டு துறை இதற்காக ரூபாய் 40 கோடியை ஒதுக்கி சாலைகளை மேம்படுத்தி பாதுகாப்பு வசதிகளை கொண்டு வந்து பார்வையாளர்களுக்கான கேலரிகளை அமைத்து இந்த ரேஸ் போட்டிக்கான அனைத்து விதமான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
இதற்காக இந்த ரேஸ் போட்டியை நடத்தும் நிறுவனத்திற்கும் தமிழக அரசுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கார் பைக் ரேஸ் ரசிகர்களை உருவாக்க மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் என நம்பப்படுகிறது. இந்த போட்டியை லட்சக்கணக்கான மக்கள் இதை பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் நடக்கும் இந்த எஃப்4 கார் பந்தய போட்டியை காண ரசிகர்களுக்கான டிக்கெட் தற்போது ஆன்லைனில் விற்பனையாகி வருகின்றன. ரசிகர்கள் இந்த டிக்கெட்டை எடுத்து கார் பந்தயப் போட்டியை நேரில் காண முடியும். சென்னை தீவுத்திடலை சுற்றி உள்ள பாதையில் இந்த எஃப்4 கார் பந்தயம் என்பது நடக்க உள்ளது. அடுத்த வாரம் சென்னையை இந்த கார் ரேஸ் பந்தயம் தான் கலக்கப்போகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னையில் பொது சாலையில் இப்படியான கார் பந்தத்தை நடத்துவதன் மூலம் மக்கள் மத்தியில் கார் பந்தயம் குறித்த ஒரு மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்படும். இதன் மூலம் மக்களின் பார்வை கார் பந்தயத்தின் மீது படும் இதனால் கார் பந்தயத்தில் காண ரசிகர்கள் அதிகமாக இருப்பார்கள். தொடர்ந்து கார் பந்தயம் குறித்த ஊக்குவிப்பையும் மக்கள் மத்தியில் கொண்டுவர இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









