சென்னை மழையை விட சோகமான செய்தி இது தான்! கார் பந்தயத்த ஒத்தி வச்சுட்டாங்க!

சென்னையில் நடக்கவிருந்த கார் ரேஸ் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து எந்த தேதியில் நடைபெறும் என்ற தகவல் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சென்னையில் கடந்த டிசம்பர் 1 தேதி முதல் எஃப் 4 மற்றும் இந்தியன் ரேஸ் லீக் ஆகிய கார்பந்தய போட்டிகள் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் நான்காவது ரவுண்டு சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள சாலையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மத்த ரவுண்டுகள் எல்லாம் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ரேஸ் டிராக்கில் நடைபெற்று வந்த நிலையில் இந்த ஒரு ரவுண்டு மற்றும் சென்னை சாலைகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

chennai car race postponed

இதற்காக கார் பந்தயத்தை நடத்தும் நிறுவனம் தமிழக அரசுடன் இணைந்து இந்த ஏற்பாடுகளை செய்து வந்தது. இதற்காக தமிழக அரசு ரூபாய் 40 கோடி பணத்தை ஒதுக்கீடு செய்து சென்னை தீவுத்திடல் மைதானம் மற்றும் அதை சுற்றியுள்ள சாலைகளை ரேஸ் பந்தயம் நடக்கும் அளவிற்கு மேம்படுத்தி கொடுத்தது. இதற்கான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் சென்னையில் யாரும் எதிர்பாக்காத வகையில் திடீரென மழை வெள்ளம் ஏற்பட்டது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையை சுற்றியுள்ள பகுதியில் கடும் மழை பெய்தது இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கின. பல இடங்களில் மழை வெள்ளநீர் பெருகி தத்தளித்து வருகின்றன. தற்போது தமிழக அரசே சென்னையில் மீட்பு பணிகளை செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் வரும் 9 மற்றும் 10 தேதி சென்னை தீவுதிடலை சுற்றியுள்ள மைதானத்தில் கார் ரேஸ் பந்தயம் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

chennai car race postponed

மழை வெள்ளம் காரணமாக இந்த கார் பந்தயப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த இந்த போட்டியை காண டிக்கெட் எடுத்தவர்களுக்கு டிக்கெட் பணம் திரும்ப வழங்கப்படும் அல்லது போட்டி நடக்கும் நாளில் இந்த டிக்கெட்டை பயன்படுத்த முடியும் என அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தமிழக அரசு சென்னை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்யும் பணியில் இறங்கி உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடக்கவிருந்த இந்த கார் பந்தய போட்டி இரவு நேர கால்பந்தய போட்டியாக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக எஃப்4 கார்கள் எல்லாம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு தயார் செய்யப்படும் பணிகள் துவங்கியிருந்தது. சென்னை தீவுத்திடல் மைதானத்தில் பிட்ஷாப்களை அமைத்து அங்கு கார்களை தயார் செய்து. மைதானத்தை சுற்றியுள்ள சாலையில் இந்த கார் ரேஸ் பந்தயம் நடக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக ஏற்பாடுகள் எல்லாம் நடந்து வந்தன.

chennai car race postponed

இந்நிலையில் சென்னை மழை குறுக்கிட்டதால் இந்த கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் என்று இந்த கார் பந்தயம் நடக்கும் என்ற தகவல் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிக்காக தமிழக அரசு கோர்ட்டில் வழக்குகளையும் சந்தித்து வந்தது. இந்த போட்டிக்காக தமிழக அரசு ஒரு ரூபாய் 40 கோடி பணத்தை செலவிட்டது. குறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் தமிழக அரசு தமிழகத்தில் விளையாட்டு துறையை மேம்படுத்தவும் தமிழக இளைஞர்கள் மத்தியில் கார் ரேஸ் பந்தயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தனியார் நிறுவனத்துடன் செய்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் தான் இந்த பணம் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையிலேயே தற்போது கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் எல்லாம் சரி செய்யப்பட்டு சென்னை அரசு பணியாளர்கள் எல்லாம் தங்கள் ரெகுலர் பணிக்கு திரும்பிய பின்பு இந்த கார் பந்தயம் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியும் இந்த டிசம்பர் மாத இறுதிக்குள் கால்பந்தயம் நடக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னையில் தற்போது கனமழை காரணமாக பல்வேறு இடங்கள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றன. பல இடங்களில் தண்ணீர் வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்வதற்காக தற்போது சென்னை மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமான முயற்சியில் இறங்கி வருகின்றனர். இந்த பணி தான் முக்கியம் என்பதால் கார் பந்தய போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 6, 2023, 11:39 [IST]
English summary
Chennai car race postponed by tn govt for cyclone michaung damage
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X