சிங்கப்பூர் மாதிரி மாறப்போகும் சென்னை! மாடி பஸ் எல்லாம் வரப்போகுதாம்!

சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பஸ்களை இயக்கத்திற்கு கொண்டு வர சென்னை பெருநகர கார்பரேஷன் திட்டமிட்டுள்ளது. இந்த பஸ்கள் கடந்த 2008ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்து பின்னர் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் இந்த பஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 2008ம் ஆண்டு வரை டபுள் டக்கர் என்ற இரண்டு தளம் கொண்ட பஸ்கள் பயன்பாட்டில் இருந்தது. பின்னர் அந் பஸ் செல்லும் ரூட்களில் பாலங்கள் கட்டவேண்டியது இருந்தது உள்ளிட்ட சில பிரச்சனைகள் காரணமாக இந்த பஸ்கள் பயன்பாட்டிலிருந்து நிறத்தப்பட்டன.

chennai double decker bus

இந்நிலையில் சென்னை மாநகராட்சி பகுதியில் சுற்றுலா அனுபவங்களை அதிகரிக்க அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. அதன் ஒரு பங்காக சென்னை மாநகராட்சி பகுதியில் மீண்டும் டபுள்டக்கர் பஸ்களை சென்னை சென்னை பெருநகர மாநகராட்சி தேசிய தூய்மையான காற்று அமைப்பு மற்றும் எம்டிசி சார்பில் சென்னையில் முதல் கட்டமாக 20 எலெக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பஸ்கள் எல்லாம் பிரைவேட் காண்ட்ராக்ஸ் அடிப்படையில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பஸ்களை தயாரிக்கும் நிறுத்துடனேயே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கொண்டு வரப்படடுள்ளது. இந்த பஸ்ஸை இயக்குதற்காக தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்யப்படும். எந்த ரூட்டில் இயக்கப்படுகிறது. இதற்கு எவ்வளவு செலவாகும். எவ்வளவு தூரம் இயக்க முடியும். வருமானம் எவ்வளவு லாபம் எப்படி கிடைக்கும் என்பது குறித்து இனி ஆய்வு செய்யப்படும்.

chennai double decker bus

தற்போது உள்ள திட்டங்களின்படி இந்த பஸ்களை திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை சென்னையில் முக்கிய சாலைகளான அண்ணாசாலை, காமராஜர் சாலை, இசிஆர் ஆகிய பகுதிகளில் இயக்கப்படும். வார இறுதி நாட்களில் சுற்றுலாவிற்காக இந்த பஸ்கள் பயன்படுத்தப்படும் என தெரிகிறது. இது குறித்த திட்ட அறிவிப்புகள் எல்லாம் பின்னர் வெளியிடப்படும் என தெரிகிறது.

இந்த பஸ்கள் இந்தாண்டு இறுதிக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது. ஏற்கனவே பஸ்கள் இயங்கும் போது 18ஏ என்ற தடத்தில் இயங்கிவந்தது. இந்த ரூட்டில் மீண்டும் பஸ்கள் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் 70-80 களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பஸ்கள் நீண்ட ஆண்டுகளாக பிரபலமாக இருந்தது. தற்போது இந்த பஸ்ஸை நவீனப்படுத்தி புதிய வசதிகளுடன் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

தற்போது வரப்போகும் டபுள் டக்கர் பஸ்கள் முழுமையான ஏசி பஸ்களாக இயங்கும் என எதரி்பார்க்கப்படுகிறது. முதலில் 20 பஸ்கள் பயன்பாட்டிற்கு வந்தாலும் வருங்காலங்களில் இந்த பஸ்கள் அதிகம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பாரக்கப்படுகிறது. தற்போது உள்ள நவீன பஸ்களில் உள்ள அம்சங்கள் எல்லாம் இந்த பஸ்ஸில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டபுள் டக்கர் பஸ்கள் நகர விரிவாக்கலின்போது நிறுத்தப்பட்ட நிலையில் மும்பை போன்ற நகரங்களில் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த பஸ்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர தற்போது சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ள நிலையில் இந்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, August 4, 2025, 17:00 [IST]
English summary
Chennai double decker bus return 2025 launch details
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+