சென்னைக்கு வரப்போகிறது டபுள் டக்கர் பஸ்! எந்த ரூட்ல வரப்போகுது தெரியுமா?

சென்னை மாநகரப் பகுதியில் மீண்டும் டபுள் டக்கர் பஸ்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளன. கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த பஸ்கள் எல்லாம் பயன்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் 500 பஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பஸ்கள் வர உள்ளன. எந்தெந்த ரூட்களில் வரப்போகிறது? இந்த பஸ்களில் என்ன அம்சங்கள் இருக்கப் போகிறது என்ற விபரங்களை தான் இங்கே விரிவாக காணப்போகிறோம்.

சென்னை மாநகரப் பகுதியில் கடந்த 1970ம் ஆண்டு முதல்முறையில் டபுள் டக்கர் பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் அந்த காலத்தில் போதிய வரவேற்பு இல்லை என்பதால் 1980களில் இந்த பஸ்களின் செயல்பாடு நிறுத்தப்பட்டது. பின்னர் 1997ம் ஆண்டு மீண்டும் டபுள் டக்கர் பஸ்களை சென்னை பகுதியில் அறிமுகப்படுத்த திட்டமிட்டப்பட்டது. அதன்படி குறிப்பிட்ட சில ரூட்களில் மட்டும் டபுள் டக்கர் பஸ்கள் இயங்கி வந்தன.

chennai double decker bus

சுமார் 11 ஆண்டுகள் அதாவது 2008ம் ஆண்டு வரை சென்னை பகுதியில் டபுள் டக்கர் பஸ்கள் இயங்கி வந்தது. ஆனால் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு இந்த டபுள் டக்கர் பஸ்களின் இயக்கம் என்பது பிரச்சினையாக இருந்ததால், இந்த பஸ்கள் நிறுத்தப்பட்டது. முக்கியமாக மெட்ரோ பணிகள் பால வேலைகள் நடக்கும்போது டபுள் டக்கர் பஸ்களால் சரியாக இயங்க முடியாத சூழ்நிலை இருந்தது. இதனால் இந்த பஸ்களின் இயக்கம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் சென்னை பகுதியில் மீண்டும் டபுள் டக்கர் பஸ்களை கொண்டு வருவதன் மூலம் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்க முடியும். மக்களுக்காக பல்வேறு விதமான நன்மைகளை வழங்க முடியும் என்ற கருத்து நிலவியதால் மீண்டும் தமிழக அரசு சென்னை பகுதியில் டபுள் டக்கர் பஸ்களை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

chennai double decker bus

இந்நிலையில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் டபுள் டக்கர் பஸ்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன்படி உலக வங்கியிடமிருந்து நிதி உதவி பெறப்பட்டு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்த மேற்கொள்ளப்படுகிறது. உலக வங்கி இந்த பஸ்களை வாங்குவதற்கான பணத்தை வழங்குகிறது.

அதன்படி தனியார் நிறுவனம் பஸ்களுக்கான இயக்கம் மற்றும் செலவுகளை பார்த்துக் கொள்ள வேண்டும், இந்த பஸ் எந்த ரூட்டில் இயங்க வேண்டும் எவ்வளவு டிக்கெட் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற விபரங்களை எல்லாம் தமிழக அரசு தெரிவிக்கும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் பஸ்கள் வாங்கப்பட உள்ளன.

சென்னைக்கு வரப்போகும் டபுள் டக்கர் பஸ்கள் எல்லாம் எலெக்ட்ரிக் பஸ்களாக வர உள்ளது. ஏற்கனவே இது போன்ற பஸ்கள் மும்பையில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. அதேபோன்ற பஸ்கள் தான் சென்னைக்கும் பயன்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் தமிழக அரசிடமிருந்து தனியார் பஸ்களை இயக்கும் ஒப்பந்தத்தை அசோக் லேலண்ட் நிறுவனம் தான் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிறுவனம் ஏற்கனவே கடந்த ஆண்டு சென்னை பகுதியில் டபுள் டக்கர் பஸ்களை இயக்குவதற்கான சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக செய்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு தரப்பில் இருந்து சுமார் 960 கோடி மதிப்பில் பஸ்கள் வாங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 500 டபுள் டக்கர் பஸ்களை வாங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் இந்த டபுள் டக்கர் பஸ்கள் எல்லாம் சுற்றுலா தளங்களை குறி வைத்து இயக்கப்படும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. இதன் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு டபுள் டக்கர் பஸ்களில் பயணம் செய்த அனுபவத்தை பிறமொழியும் இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அதிகம் ஈர்க்கப்படுவார்கள் என்பதால் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பகுதியில் இயக்கம் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் இந்த பஸ்களை இயக்க தமிழக அரசு முடிவு செய்து புதிய பஸ்கள் வாங்கப்பட்டுள்ள இந்த பஸ்கள் எல்லாம் தற்போது டிப்போக்கு வந்துள்ள நிலையில், விரைவில் இந்த பஸ்கள் எல்லாம் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. இதை தொடர்ந்து டபுள் டக்கர் பஸ்களும் விரைவில் பயன்பாட்டிற்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மும்பை போன்ற நகரங்களில் இந்த டபுள் டக்கர் பஸ்க்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களிலும் இந்த பஸ்கள் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது நிச்சயம் வரவேற்கத்தக்கது. பெருநகரங்களில் மக்கள் விருப்பத்திற்காகவும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும் இது நிச்சயம் பெரிய அளவில் பயன்படும் என எதிர்பார்க்கலாம். எந்த ரூட்டில் வரப்போகிறது என்ற தகவல் இனிதான் வெளியிடப்படும்.

More from DriveSpark

Article Published On: Monday, July 15, 2024, 18:53 [IST]
English summary
Chennai double decker bus return soon
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+