இனிமே டிராஃபிக்கை பற்றி கவலை வேண்டாம்!சென்னை தமிழன் உருவாக்கப்போகும் உலகின் முதல் பறக்கும் எலெக்ட்ரிக் டாக்ஸி
சென்னை ஐஐடி பேராசிரியரும் மாணவரும் சேர்ந்து இ-பிளேன் என்ற நிறுவனத்தை உருவாக்கி அதில் பறக்கும் டாக்ஸிகளை உருவாக்கும் முயற்சியில் 5 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த முயற்சி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

மனிதன் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகரத் துவங்கியது முதல்தான் இந்த உலகில் மனித நாகரீகம் என்ற ஒன்றே தோன்றியது. இன்று வரை மனிதன் கண்டுபடித்த மிகப்பெரிய கண்டுபிடிப்பாகச் சொல்லப்படுவது சக்கரம் தான். ஒரு பொருளையோ ஒரு நபரை இருக்கும் இடத்திலிருந்து சுலபமாக வேறு இடத்திற்கு நகர்த்திச் செல்ல இந்த சக்கரம் பயன்பட்டது.

அன்றிலிருந்து இன்றுவரை மனித இனத்திற்குப் போக்குவரத்து வசதி என்பது மிக இன்றியமையாத விஷயமாக மாறிவிட்டது. இன்று சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து என்ற கட்டமைப்புகள் வந்துவிட்டன. இவை எல்லாவற்றையும் தாண்டி இன்று மனிதர்களின் தேவைகள் அதிகமாகிவிட்டது.

சாலையிலும் ரயிலிலும் செல்லும் மக்கள் மிக வேகமாகச் செல்ல வேண்டும் என நினைக்கிறார்கள். விமானம் சீக்கிரமாகச் சென்றாலும் அதிகமாகச் செலவு ஆவதால் குறைந்த செலவில் செல்ல வேண்டும் என நினைக்கிறார்கள். இப்படியாக மக்கள் தேவையைப் பூர்த்தி செய்யப் பல விதமான வாகனங்கள் மற்றும் ஏற்கனவே இருக்கும் வானகங்களில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

இப்படியாக மக்களுக்கு இருக்கும் முக்கியமான பிரச்சனை போக்குவரத்து நெருக்கடி, இந்தியாவில் டில்லி, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் மிக அதிக அளவு போக்குவரத்து நெருக்கடிகள் இருக்கிறது. மெட்ரோ, அகலமான சாலைகள், மேம்பாலங்கள் இப்படியாக எதுவும் போக்குவரத்தைச் சமாளிக்க முடியவில்லை.

இந்நிலையில் இதற்குத் தீர்வு அளிக்கும் வகையில் சமீபத்தில் பறக்கும் கார்களை கண்டுபிடிக்கப் பல நிறுவனங்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. லண்டனைச் சேர்ந்த வெர்ட்டிக்கல் ஏரோ ஸ்பேஸ் நிறுவனம் 2024ம் ஆண்டிற்குள் பறக்கும் கார்களை வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளனர். அடுத்தாக ஜெர்மனியைச் சேர்ந்த வோலோகாப்டர் நிறுவனம் 2023ம் ஆண்டு இறுதிக்குள் பறக்கும் கார்களை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர்.

கடந்தாண்டு நவம்பர் மாதம் வோலோகாப்டர் நிறுவனம் இ-விடிஓஎல் என்ற பெயரில் பறக்கும் கார் ஒன்றைத் தயாரித்து தென் காரியாவில் சோதனை செய்து பார்த்தது. அதில் மனிதர்களை வைத்தே பயணத்தைச் செய்தது. முற்றிலும் எலெக்ட்ரிக்கில் இயங்கும் இந்த காரை பயன்பாட்டிற்குக் கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகிறது. பறக்கும் கார்களை பொருத்தவரை அதை டாக்ஸி சர்வீஸ் போன்று தான் நடத்த முடியும் தனியார்கள் இந்த காரை சொந்தமாக வாங்கும் அளவிற்கு தொழிற்நுட்ப வசதிகள் தற்போது உள்ளது.

இந்நிலையில் உலகின் முதல் பறக்கும் டாக்ஸிகளை அறிமுகப்படுத்தும் போட்டியில் இந்தியாவை அதுவும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு குழு ஒன்றும் இணைந்துள்ளது. இதன்படி அதன்படி இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி - மெட்ராஸ் சார்பில் அதில் பேராசிரியராக பணியாற்றி வரும் சத்ய நாராயண சக்கரவர்த்தி மற்றும் அவரது மாணவர் பிரஜல் மேத்தா ஆகியோர் கடந்த 2017ம் ஆண்டு இ-பிளேன் என்ற நிறுவனத்தைத் துவங்கிப் பறக்கும் கார்களை வடிவமைக்கத் துவங்கினர்.

சுமார் 5 ஆண்டுக்கால கடின உழைப்பிற்குப் பின்பு இந்நிறுவனம் தனது புரோட்டோ டைப்பை சமீபத்தில் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. இந்த புரோட்டோ டைப் தற்போது அனுமதி சான்றிற்காகக் காத்திருக்கிறது. இந்நிலையில் இது வெற்றிகரமாக முடிந்துவிட்டால் அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் பறக்கும் டாக்ஸிகள் சாத்தியப்படும் என சத்ய நாராயண சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

பேராசிரியரும் மாணவரும் சேர்ந்து உருவாக்கிய இந்த இ-பிளேன் நிறுவனத்திற்குக் கடந்த 2021ம் ஆண்டு 1 மில்லியன் அமெரிக்க டாலர் ஃபன்டிங் கிடைத்துள்ளது. இந்நிலையில் அந்நிறுவனம் இந்த பறக்கும் கார்களை இயக்கும் பைலட்களை அடுத்தாண்டு துவக்கத்தில் தேர்வு செய்யவிருப்பதாகவும் அடுத்த ஆண்டே மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களில் இதை முதற்கட்டமாகச் சாத்தியப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இ-பிளேன் நிறுவனம் 20-25 பறக்கும் கார்களை உருவாக்கி அதைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் என்றும்,இது ஹெலிகாப்டர் போல இருந்த இடத்திலிருந்தே மேலே செல்லும் என்பதால் இதற்கு ஓடுதளம் தேவையில்லை இதனால் இதை ஜன நெருக்கடி உள்ள பகுதிகளில் கூட வீட்டு மொட்டை மாடிகளில் தரையிறங்கும்படி செய்யலாம்.

இந்த பறக்கும் டாக்ஸி நடைமுறைக்கு வந்தால் போக்குவரத்து பிரச்சனைக்கு மட்டுமல்ல ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தற்போது செல்லும் வேகத்தைவிட 10 மடங்கு அதிகமான வேகத்தில் பயணித்துவிட முடியும் மேலும் இதற்கு ஆகும் செலவுகளும் 2 அல்லது 3 முடங்கு குறைவாக இருக்கம் என்றும் சத்யநாராயணன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் : "இந்த பறக்கும் கார்களை தயாரிப்பதில் இருக்கும் முக்கியமான பிரச்சனை இதன் பேட்டரி தான். பறக்கும் போது எடைகளைச் சரியாகக் கையாள வேண்டியது அவசியம் லித்தியம் அயான் பேட்டரிகள் அதிகமாக எடையில் இருப்பதால் அதைச் சரியான எடையுடன் கட்டமைப்பது சவாலாக இருந்தது" எனக் கூறினார்.

மேலும் தற்போது ஏற்கனவே பறக்கும் கார்களை தயார் செய்து தென் கொரியாவில் சோதனை செய்த வோலோகாப்டர் நிறுவனம் 3 கி.மீ தூரத்தைக் கடக்க 5 நிமிடம் வரை எடுத்துக்கொண்டது. இது அதிகமாக நேரம் ஆகும். தற்போது சென்னையில் தயாராகியுள்ள புரோட்டோ டைப்பின்படி அதை விட மிக வேகமாக இது பயணிக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் இந்தாண்டு இறுதிக்கும் சென்னையில் பறக்கும் கார் தயாராகி சோதனை செய்யப்படும். சோதனை வெற்றிகரமாக நடந்து முடியும் பட்சத்தில் இந்தியாவில் அடுத்த ஆண்டே சரக்குகளை ஏற்றிச் செல்லும் பறக்கும் கார்கள் உருவாக்கப்படும். பின்னர் அரசு அனுமதிக்குப் பிறகு மனிதர்கள் பயன்படுத்தும் பறக்கும் டாக்ஸிகளுக்கான கார்கள் தயார் செய்யப்படும். இந்த பறக்கும் டாக்ஸிகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications