சென்னை கடற்கரையில் துவங்கிய ஹெலிகாப்டர் சேவை! டிக்கெட் விலை இவ்வளவு கம்மியா?

சென்னை-இசிஆர் மகாபலிபுரம் பகுதியில் ஹெலிகாப்டர் (Chennai ECR Helicopter Service) சேவை நேற்று முதல் துவங்கியுள்ளது. மக்கள் மத்தியில் நீண்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில் இந்த சேவையை தமிழக அரசு தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து துவங்கி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிகமாக ஈர்க்கப்படுவார்கள் என தெரிகிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

சென்னை தற்போது தமிழகத்தின் தலைநகராக மட்டுமில்லாமல் தென்னிந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலா தளமாக இருக்கிறது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்னையை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

chennai ecr kovalam helicopter service

சென்னைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் கோவளம் கடற்கரை மகாபலிபுரம் ஆகிய பகுதிகளை தான் அதிகம் சுற்றி பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சென்னையில் ஹெலிகாப்டர் டூர் சேவை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வந்தது. இதை நிறைவேற்ற தமிழக அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுப்பு செய்தது.

இந்நிலையில் சென்னை பகுதியில் ஹெலிகாப்டர் டூர் சேவையை அறிமுகப்படுத்த தமிழக அரசு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. அதன்படி தனியார் நிறுவனம் இந்த சேவையை வழங்குவதற்கான ஏற்பாடுகளை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் செய்தது. இதற்காக சென்னை கோவளம் பகுதியில் ஹேலிபேடுகள் எல்லாம் அமைக்கப்பட்டன.

chennai ecr kovalam helicopter service

இந்நிலையில் சென்னை பகுதியில் இந்த ஹெலிகாப்டர் விமான சேவையை செயல்படுத்துவதற்காக சென்னை சர்வதேச விமான நிலையத்திலும் அனுமதி கோரி விண்ணப்பம் செய்யப்பட்டிருந்தது. இதற்கான அனுமதியை சென்னை சர்வதேச விமான நிலையம் வழங்கிய நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் இந்த விமான சேவை துவங்கியுள்ளது.

சென்னை கோவளம் திருவிடந்தை பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் பயணிக்க சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஹெலிகாப்டரில் பயணிக்க ஒரு நபருக்கு ரூபாய் 5,000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதன்படி வெறும் 10 நிமிடத்தில் இந்த ஹெலிகாப்டர் பயணம் முடிந்து விடும். ஆனால் இந்த 10 நிமிடமும் சூப்பரான அனுபவம் கிடைக்கும். ஹெலிகாப்டரில் பறக்கும் போது ஏரியல் வியூவில் சென்னை சிட்டியை பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

chennai ecr kovalam helicopter service

ஒரு பக்கம் சென்னை சிட்டியும் மறுபக்கம் கடலும் நமக்கு காட்சி தரும். இந்த கண்கொள்ளாக் காட்சி ரசிப்பதற்காகவே இந்த சேவை துவங்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இந்த சேவை துவங்கிய நிலையில் ஏகப்பட்ட மக்கள் இது சேவையை பயன்படுத்தினர். ஒரே நாளில் 20 முறை ஹெலிகாப்டர்கள் பறக்கப்பட்டு அதில் மக்கள் பயணித்தனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏகப்பட்ட மக்கள் இந்த சேவையை பயன்படுத்த ஆர்வமாக இருந்தனர்.

ஹெலிகாப்டர் சேவையை பெற ஒரு நபருக்கு ரூபாய் 5,000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. உங்கள் குடும்பத்தின் நான்கு பேர் இருந்தால் தலா ரூபாய் 5,000 விதம் ரூபாய் 20,000 கட்டணம் செலுத்தினால் இந்த ஹெலிகாப்டர் சேவையை நீங்கள் அனுபவிக்க முடியும். சென்னையில் விடுமுறை தினங்களை கழிக்கவும் குழந்தைகளுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரவும் இந்த ஹெலிகாப்டர் சேவை மிக நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டது.

இனி வார விடுமுறை நாட்கள், அரசு விடுமுறை நாட்களில் இந்த ஹெலிகாப்டர் சேவையை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கி விடுவார்கள் என எதிர்பார்க்கலாம். சென்னை கடற்கரையோர பகுதியில் நீங்கள் வசித்துக் கொண்டிருந்தால் நீங்கள் அடிக்கடி இந்த ஹெலிகாப்டர் பறப்பதை பார்க்க முடியும். நேற்றே பலர் அடிக்கடி ஹெலிகாப்டர் பரப்பதற்கான காரணம் என்ன என பேச துவங்கி விட்டனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுற்றுலாவை மேம்படுத்த ஹெலிகாப்டர் சேவை என்பது மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. குறிப்பாக வெளிநாட்டு பயணிகளை இந்த ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை அதிகம் ஈர்க்கும் இதுபோக சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த சேவையை பயன்படுத்தக்கூடிய பொதுமக்களும் அதிகமாக இருப்பதால் இந்த சேவை நிச்சயம் லாப நோக்கில் செல்லும். நீங்கள் இந்த ஹெலிகாப்டர் சேவையில் பணம் செய்வீர்களா?

More from DriveSpark

Article Published On: Tuesday, November 14, 2023, 12:12 [IST]
English summary
Chennai ecr kovalam helicopter service ticket details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X