சென்னையில் எலெக்ட்ரிக் பஸ் வெடித்ததா? உண்மையில் நடந்தது இது தான்!
சென்னை வியாசர்பாடி பஸ் டிப்போவில் கண்காணிப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த எலெக்ட்ரிக் பஸ் பேட்டரி வெடித்து இரண்டு பேருக்க படுகாயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின? உண்மையில் எலெக்ட்ரிக் பஸ்ஸின் பேட்டரி தான் வெடித்ததா? இரண்டு பேர் படுகாயம் அடைந்தது எப்படி? இந்த சம்பவம் குறித்த முழுமையாக உண்மை தகவலை காணலாம் வாருங்கள்.
சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதல்வர் ஸ்டாலின் எலெக்ட்ரிக் பஸ் சேவையை துவக்கி வைத்தார். இந்த பஸ்கள் எல்லாம் தற்போது பயன்பாட்டில் இருந்து வருகின்றன. முக்கியமாக அதிக எண்ணிக்கையிலான எலெக்ட்ரிக் பஸ்கள் சென்னை வியாசர்பாடி பஸ் டிப்போவில் இருந்து தான் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வியாசர்பாடி பஸ் டிப்போவில் இருந்து வெடி சத்தம் ஒன்று கேட்டது. இதை கேட்டு பதறிப்போன பஸ் டிப்போ ஊழியர்கள் சத்தம் வந்த இடத்தை நோக்கி சென்று பார்த்த போது அங்கிருந்த ஊழியர்கள் இருவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இவர் பஸ்ஸின் பேட்டரியை சோதனை செய்த போது பேடட்ரி வெடித்ததாக சிலர் கருதினர்.
இதையடுத்து சென்னை பஸ் டிப்போவில் நிறுத்தப்பட்டிருந்த எலெக்ட்ரிக் பஸ் பேட்டரி வெடித்ததாக செய்திகள் பரவியது. ஏற்கனவே எலெக்ட்ரிக் வாகனங்களில் பேட்டரி வெடித்து தீபிடிக்கும் சம்பவம் பல இடங்களில் நடந்த நிலையில் இது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து எம்டிசி நிர்வாகம் தெளிவான விளக்கத்தை வெளியிட்டுள்ளது.

அதன்படி நடந்த சம்பவத்தில் எலெக்ட்ரிக் பஸ் சோதனைக்காக பஸ் டிப்போவில் நித்தி வைக்கப்பட்டிருந்தது.தற்போது உள்ள ஒப்பந்தத்தின்படி தமிழகத்தில் இயங்கி வரும் எலெக்ட்ரிக் பஸ்களை அதை தயாரித்த நிறுவனமே தான் பாராமரிக்க வேண்டும். இதன்படி டாடா கீஸான் நிறுவனத்தின் ஊழியர்கள்இருவர் குறிப்பிட்ட பஸ்ஸின் பேட்டரியை சோதனை செய்ய சென்றுள்ளனர்.
வழக்கமாக பேட்டரியை மல்டி மீட்டரை வைத்து தான் சோதனை செய்வார்கள். இவர்கள் எடுத்து சென்ற மல்டி மீட்டரில் கோளாரு இருந்துள்ளது. இதனால் இவர்கள் அதை பேட்டரியில் வைத்த போது மல்டி மீட்டர் தான் வெடித்துள்ளது. பஸ்ஸின் பேட்டரிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் பலர் எலெக்ட்ரிக் பஸ்களில் பயணிக்கவே தயங்கி வருகின்றனர். ஆனால் நடந்த சம்பவத்திற்கும் பஸ்ஸின் பேட்டரி வெடிப்பிற்கும் சம்மந்தம் இல்லை எனவும், மல்டி மீட்டரில் இருந்தபிரச்சனை காரணமாக பேட்டரி வெடித்தது எனவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் பஸ் பேட்டரி வெடித்தது என்ற செய்தி பலருக்கு எலெக்ட்ரிக் பஸ்களில் பயணிக்க அச்சத்தை ஏற்படுத்தியது. எலெக்ட்ரிக் பஸ்கள் பல்வேறு சோதனைகளுக்க பிறகே மக்கள் பயன்பாட்டிற்கு வருவதால் இதில் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு தான். இதனால் நீங்கள் தைரியமாக பயணிக்கலாம்.


Click it and Unblock the Notifications