சென்னைக்கு வரப்போகும் 500 எலெக்ட்ரிக் பஸ்கள்! இப்படி தான் இருக்குமா?
சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் பயன்படுத்துவதற்காக தாழ்த்தள சொகுசு பேருந்துகளை வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மூன்று நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளது. அதன்படி அந்நிறுவனம் வழங்கப் போகும் பஸ்கள் எப்படி இருக்கும்? இதில் என்னென்ன வசதிகள் எல்லாம் இருக்கும்? இதனால் மக்களுக்கு என்ன வகையில் வசதிகள் கிடைக்கும் என்ற விரிவான விபரங்களை தான் இங்கே நாம் காண போகிறோம்.
தமிழக அரசு தற்போது தமிழக முழுவதும் இயங்குவதற்காக புதிய பஸ்களை வாங்க பல்வேறு ஆட்களை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது சென்னையில் சுமார் 500 தாழ்தள மின்சார சொகுசு பஸ்களை வாங்க முடிவு செய்துள்ளது. அதில் 400 பஸ்கள் ஏசி அல்லாத பஸ்களாகவும், 100 பஸ்கள் ஏசி வசதி கொண்ட பஸ்களாகவும் ஆர்டர் செய்ய ஒப்பந்தம் கோரியது.

இந்த ஏலத்தில் ஓலெக்ட்ரா, ஸ்விட்ச் மொபிலிட்டி மற்றும் ஏரோ ஈகிள் ஆட்டோமொபைல் ஆகிய மூன்று நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன விரைவில் எந்த நிறுவனம் குறைவான மதிப்பில் பஸ்களை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. அந்த நிறுவனத்திற்கு ஆர்டர் வழங்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் சென்னை மட்டுமல்லாமல் மதுரை, கோவை ஆகிய நகரங்களிலும் இயங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் இயங்குவதற்காக தலா 100 சொகுசு பஸ்களை வாங்க இதே ஒப்பந்த முறையில் பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே போல 442 தாழ்தள சொகுசு பஸ்களை வாங்க ஏலம் எடுத்தது. ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு பயனுள்ள வகையில் தாழ்தள சொகுசு பேருந்துகளை குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு இணங்க அதன் எண்ணிக்கையை 552 பஸ்களாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது கூடுதலாக 500 பஸ்களை வாங்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளன. இதுவரை மொத்தம் 1552 பஸ்களை தமிழக அரசு வாங்குவதற்காக ஒப்பந்தம் கூறப்பட்டோ அல்லது ஒப்பந்தம் வழங்கப்பட்டு காத்திருப்பு நிலையிலோ இருக்கிறது. அடுத்த சில மாதங்களில் இந்த பஸ்கள் எல்லாம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசு வாங்கும் இந்த பஸ்கள் எல்லாம் மாற்றுத்திறனாளிகளுக்கு பயனுள்ள வகையில் அவர்கள் எளிதாக ஏறவும், இறங்கவும் கூடிய வசதியுடன் கூடிய பஸ்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 500 எலெக்ட்ரிக் பஸ்களுக்கான ஆர்டர் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இயங்குவதற்கான பஸ்களாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்த 500 பஸ்களும் எலெக்ட்ரிக் பஸ்களாக இருப்பதால் இது ஒளி மற்றும் காற்று மாசு ஏற்படுத்தாமல் பயணம் செய்யும் வகையில் இருக்கும். இதனால் சென்னையில் ஏற்படும் காற்று மாசு அளவு ஓரளவுக்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் எந்தெந்த ரூட்டுகளில் எல்லாம் இந்த பஸ்கள் பயன்பாட்டிற்கு வரப் போகிறது? இதில் உள்ள ஏசி பஸ்கள் எந்த ரூட்டில் செயல்பட போகிறது என்ற விரிவான விவரங்கள் எல்லாம் பின்னர் தெரிவிக்கப்படும்.
இந்நிலையில் சென்னையில் களமிறங்க போகும் பஸ்கள் எல்லாம் எப்படி இருக்கும் என்ற புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இப்படியான பஸ்களை நாம் பெங்களூரு மும்பை போன்ற நகரங்களில் தற்போது செயல்பாட்டில் இருப்பதை பார்த்திருப்போம். சென்னையில் இது போன்ற பஸ்கள் செயல்பாட்டில் இல்லாத நிலையில் தற்போது தமிழக அரசும் இதற்கான ஆர்டரை பிறப்பித்துள்ளது. இனி பெங்களூரு, மும்பை நகரங்களுக்கு இணையாக சென்னை நகரமும் மாறும்.
இந்த பஸ்களை வாங்க தமிழக அரசுக்கு என்ற ஜெர்மன் வங்கியின் நிதியுதவி கிடைக்கிறது. இதன் மூலம் தான் தமிழக அரசு இந்த பஸ்களை வாங்குகிறது. தமிழகத்தில் வாங்கப்படும் எலெக்ட்ரிக் பஸ்கள் எல்லாம் தனியார் நிறுவனங்களால் பராமரிக்கப்படும். அரசு மற்றும் தனியார் கூட்டு மாதிரியின் அடிப்படையில் இந்த நிர்வாகம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழக அரசு தற்போது ஆர்டர் செய்துள்ள 500 எலெக்ட்ரிக் பஸ்கள் சென்னை பகுதியில் இயங்குவதற்காக வாங்கப்படுகின்றன. சென்னை பகுதியில் ஏராளமான பஸ்கள் தகுதி இழந்து இயக்கப்பட்டு வரும் நிலையில், இதை நீக்கிவிட்டு இதற்கு பதிலாக இந்த பஸ்களை இயக்குவதற்காகவும், எரிபொருள் செலவை குறைப்பதற்காகவும் இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








