சென்னை எலெக்ட்ரிக் ரயிலில் 5 பெட்டி கழண்டு போனதுக்குக் காரணம் இது தான்!

சென்னை எலெக்ட்ரிக் ரயிலில் கோச் இணைப்பு அறுந்ததால் 5 பெட்டிகள் மட்டும் கழன்று பின்னால் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் எப்படி நடந்திருக்கும் இந்த இணைப்பு அறுந்து போக என்ன காரணம்? ரயில் கோச்கள் எல்லாம் எப்படி இணைக்கப்படுகின்றன எனக் காணலாம் வாருங்கள்.

நேற்று அதிகாலை 4.40 மணிக்குச் சென்னை கடற்கரையிலிருந்து 40505 என்ற எண் கொண்ட எலெக்ட்ரிக் ரயில் ஒன்று செங்கல்பட்டை நோக்கிப் புறப்பட்டது. சரியாக மணி 5.20க்கு சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றுவிட்டுக் கிளம்பும் போது எலெக்ட்ரிக் ரயிலின் கடைசி 5 பெட்டிகள் மட்டும் திடீரென பின்பக்கம் நோக்கி நகர்ந்தது. மற்ற பெட்டிகள் முன்பக்கம் நகர்ந்துள்ளனர்.

chennai emu coach detached

பலருக்கு என்ன நடக்கிறது என் தெரியவில்லை. ஆனால் இந்த பிரச்சனையை ஆரம்பத்திலேயே உயர்ந்த ரயில் ஓட்டுநர் ரயிலை உடனே நிறுத்திவிட்டார். பின்னர் பயணிகள் கீழே இறங்கிப் பார்த்த போது ரயிலில் உள்ள கடைசி 5 பெட்டிகள் கழன்று பின் நோக்கிச் சென்றுள்ளது தெரியவந்தது. இதையடுத்து பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அதே ரூட்டில் வேறு பாதை வழியாகச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்ல உத்தரவிடப்பட்டது. பயணிகள் அந்த ரயில்களைப் பயன்படுத்தினர்.

இந்நிலையில் இந்த ரயில் எப்படி 5 பெட்டிகள் மட்டும் அறுந்த சென்றது எனப் பார்க்கும் போது இதன் கப்ளிங் கழன்று போயிருந்தது. கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இந்த ரயிலின் கப்பளிங் சேர்க்கப்பட்டு ரயில் சோதனைக்காகத் தாம்பரம் பணிமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தற்போது இந்த கப்ளிங் கழன்று போனது என விசாரணை மற்றும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

chennai emu coach detached

சரி கப்ளிங் என்றால் என்ன? ரயில் பெட்டிகள் நேராக இருக்கும் இதனால் ஓர நீளமாக ஒரேபெட்டியாக ரயிலில் பயன்படுத்தினால் அதை டிராக் மாற்றுவது, திருப்புவது எல்லாம் கடினம். இதனால் ரயில்கள் எப்பொழுதும் தனித்தனி பெட்டிகளாகத் தான் வடிவமைக்கப்படு இணைக்கப்படும். இப்படி தனித்தனியாக வடிவமைக்கப்பட்ட பெட்டிகளை இணைக்கும் கருவி தான் கப்ளிக் எனப்படும்.

தற்போது பல வகையான கப்ளிங்கள் பயன்பாட்டில் உள்ளது எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளுக்கு ஒரு விதமா கப்ளிக், சூப்பர்ஃபாஸ்ட் ரயில்களுக்கு ஒரு விதமான கப்ளிக், எலெக்ட்ரிக் ரயில்களுக்கு ஒரு விதமான கப்ளிங் என வித விதமா கப்ளிங் பயன்பாட்டில் உள்ளது. தென் மாவட்டங்களில் தற்போது எலெக்ட்ரிக் ரயில் இன்ஜினை கழட்டி டீசல் இன்ஜினிற்கு மாற்றும் போது நாமே நேரடியாக இந்த கப்ளிங் பொருத்துவதைக் காண முடியும்.

பொதுவாக இந்த கப்ளிங் அதிக எடை கொண்டது, மிக கனமாக இருக்கும். இது அறுந்து போவது என்பது நடக்காத காரியாம். இதைச் சரியாகப் பொருத்தவில்லை என்றால் கழன்று போயிருக்க வேண்டுமானால் வாய்ப்பு இருக்கிறது. ரயிலின் வேகத்திற்கு ஏற்ப கப்ளிங் அசைந்து கொடுத்துக்கொண்டே இருக்கும் அவ்வப்போது இந்த கப்ளிங்கை சோதனை செய்வார்கள். அதிகம் நகர்ந்திருந்தால் மீண்டும் அதன் மீது சுத்தியலால் அடித்து பழைய நிலைக்குக் கொண்டுவந்து விடுவார்கள். இதனால் கப்ளிங் கழன்று போனது அரிதான ஒரு விஷயம்.

சென்னையில் செயல்பாட்டில் இருக்கும் எலெக்ட்ரிக் ரயில்களில் எலெக்ட்ரிக்கல் கனெக்ஷன் பொருத்தப்பட்ட மேனுவல் கப்ளர்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த மேனுவல் கப்ளர்கள் நிரந்தரமாக இருக்கும் ஒவ்வொரு முறையும் கழட்டி மாட்ட வேண்டிய அவசியம் இல்லை. யிலில் இரண்டு பக்கமும் இயங்கும் ஆப்ஷன் இருப்பதால் கப்ளர்களுக்கு வேலை குறைவு தான். இருந்தாலும் இது எலெக்ட்ரிக்கல் முறையில் இயக்கப்படுவதால் இந்த கப்ளர் கழன்று போனால் உடனடியாக ஓட்டுநருக்கு சிக்னல் சென்று ரயில் நிறுத்தப்படும்.

நேற்றைய சம்பவத்திலும் இப்படியாகத் தான் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. ரயிலில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் டிரைவரின் துரிதமான செயல்பாட்டால் எந்த விதமான உயிர்ச் சேதமும் இல்லாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரயில்களில் கப்ளிங் மிக முக்கியமான கருவி, பொதுவாக ரயில்வே அதிகாரிகள் கப்ளிங் விஷயத்தில் மிகக் கவனமாக இருப்பார்கள். இதனால் கப்ளிங் செய்யும் போது தனி நபர் இல்லாமல் அதை ஒரு குழுவின் பணியாகச் செய்வார்கள். ஆனால் அதையும் மீறி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 17, 2023, 12:40 [IST]
English summary
Chennai electric train coach detached find the reason here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+