சென்னை கார் ரேஸ் பந்தயத்தில் டிரைவராகும் 16 வயது சிறுவன்! எப்படி செலக்ட் ஆனார் தெரியுமா?

சென்னையில் நடக்கப் போகும் கார் பந்தயப் போட்டியில் பெங்களூருவை சேர்ந்த 16 வயது சிறுவன் பங்கேற்க போவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்த சிறுவன் எஃப்4 கார் ரேஸ் போட்டியில் இதற்கு முன்னர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் இந்த இளம் வயதில் இவர் எப்படி இந்த கார் ரேஸ் போட்டிக்கு வந்தார் என்ற விரிவான விபரத்தை காணலாம் வாருங்கள்.

சென்னையில் வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கார் ரேஸ் போட்டி நடக்கிறது. சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியுள்ள சாலைகளில் இந்த கார் ரேஸ் பந்தயம் என்பது நடைபெற உள்ளது. தெற்காசியாவில் சாலைகளில் நடக்கும் முதல் எஃப்4 கார் ரேஸ் பந்தயமாக இந்த கார் ரேஸ் பந்தயம் தான் இருக்கிறது. இதில் ஏராளமான டிரைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Chennai f4 car race

இந்த போட்டியில் பெங்களூரு கன்னடியன் இன்டர்நேஷனல் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் 16 வயதான ரோஹன் மாதேஷ் என்ற சிறுவன் கலந்து கொள்ள உள்ளார். இவர் மோட்டார் ஸ்போர்ட்ஸில் இதுவரை பல்வேறு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார். சென்னையில் நடக்க போகும் கார் பந்தயத்திற்காக கடந்த டிரைவர் தேர்வு முதல் இந்தியராக இந்த சிறுவன் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் இந்த ஆண்டு சீனியர் ரோட்டஸ் மேக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை ரெப்ரெசென்ட் செய்து கலந்து கொண்டார். இதில் மொத்தம் 76 நாடுகளில் இருந்து கலந்து கொண்டனர். இந்த போட்டியில் 2வது பரிசை தட்டி சென்றார். இந்தாண்டு துபாயில் நடந்த ரோடெக்ஸ் இன்டர்நேஷனல் துபாய் ஆப்லெட் போட்டியில் மெரிடியஸ் கப்பை தட்டிச் சென்றார். கடந்த 2021 ஆம் ஆண்டு எக்ஸ் 30 நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

Chennai f4 car race

ரோஹன் கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ஒரு கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்து வருகிறார். ரோஹன் தனது 7வது வயதில் இருந்தே இந்த கார் பந்தயத்தில் தீவிரமான பயிற்சியை பெற்று வருகிறார். இவர் தனது சிறு வயது முதலே கார் ரேஸ் பந்தயத்தை விரும்பி பார்த்து வருகிறார். இதையடுத்து இவரது பெற்றோர்கள் இவரை ஏழு வயதிலேயே கார் ரேஸ் கொடுத்த பயிற்சிக்கு அழைத்து சென்று விட்டனர்.

மலேசியாவில் நடந்த கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொண்டது தான். இது இவரது முதல் சர்வதேச கார் ரேஸ் பந்தயம் ஆகும். கடந்த 8 ஆண்டுகளாக கார்ட் ரேஸராக இருந்த ரோஹன் தற்போது எஃப்4 கார் ரேசராக களமிறங்குகிறார். இது தான் இவர் முதன் முறையாக எஃப்4 காரை ரேஸை ஓட்ட இருக்கிறார். இவரது போட்டியை காண பலர் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

Chennai f4 car race

இது குறித்து அவர் படிக்கும் கன்னடியன் இன்டர்நேஷனல் பள்ளியின் நிர்வாக இயக்குனர் சுவேதா சாஸ்திரி கூறும்போது: " மோட்டார் ரேஸிங் பிரிவில் ரோஹன் மாதேஷ் சாதனை நிச்சயம் கவனிக்கத்தக்கதாக உள்ளது. மிகச்சிறிய வயதில் இந்த பெரிய சாதனையை அவர் படைத்து வருகிறார்.

எதிர்காலத்தில் மிகப்பெரிய உச்சத்தை தொடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவரிடம் திறமையும் அதற்கான உழைப்பும் நம்பிக்கையும் இருக்கிறது. அவர் தற்போது எஃப்4 போட்டிக்கான புதிய ரக போட்டியில் களமிறங்க இருக்கிறார். இதை காண நாங்கள் ஆர்வமாக காத்திருக்கிறோம். அவருக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்" எனக் கூறினார்.

ரோஹன் மாதேஷ் தற்போது சென்னையில் நடைபெறும் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் எதிர்காலத்தில் ஒரு திறமையான கார் ரேஸாக வரவேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார். தற்போது இந்தியாவில் நடந்துவரும் எஃப்4 சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்கான ஆர்வத்துடனும் இருக்கிறார். இவர் தொடர்ந்து ரேஸிங் துறையில் பல சாதனைகளைப் படைத்து தன்னைத்தானே வளர்த்துக் கொண்டு தனது பெர்ஃபாமென்சை ஒவ்வொரு முறையும் சிறப்பாக மாற்றிக் கொண்டே வரவேண்டும் என்ற நினைப்பில் இருக்கிறார்.

சென்னையில் நடக்கும் எஃப்4 போட்டிக்கான டிக்கெட்டுகள் தற்போது விற்பனையாகி வருகின்றன. இந்த டிக்கெட் நீங்கள் ஆன்லைனில் பெறலாம். இந்த எஃப்4 போட்டிகள் சென்னையில் முதன்முறையாக நடக்கப்போகிறது. இந்த போட்டியை காண கார் ரேஸ் ரசிகர்கள் பலர் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த கார் ரேஸ் போட்டி இந்து தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய ஊந்து சக்தியை ஏற்படுத்திய அவர்களை கார் ரேஸ் ஓட்ட ஆர்வத்தை ஏற்படுத்தும் இன எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னையில் நடக்கும் இந்த கார் ரேஸ் போட்டியில் 16 வயது சிறுவன் பங்கேற்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது இந்த எஃப்4 கார் ரேஸ் என்பது சாதாரணமான கார் ரேஸ் கிடையாது. இது சர்வதேச அளவில் நடக்கும் மிக முக்கியமான கார் ரேஸ்களில் ஒன்றாக இருக்கிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் பங்கேற்றுள்ளது. இந்தியர்கள் மத்தியில் மிகப்பெரிய ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 5, 2023, 16:28 [IST]
English summary
Chennai f4 car race 16yo kid selected as racer know full details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X