100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
தேர்தலை முன்னிட்டு தமிழகத்திற்குள் இயங்கும் விமானங்களின் டிக்கெட் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. தேர்தலுக்கு வாக்களிக்க மக்கள் பல சொந்த ஊருக்கு செல்ல டிக்கெட் விலை புக் செய்து வருவதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே பஸ் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில் விமான டிக்கெட் விலையும் அதிகரித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலான இந்திய பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் தற்போது துவங்கிவிட்டது. முதற்கட்ட வாக்குப்பதிவுகள் நாளை தமிழக உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளன. இது தேர்தலில் வாக்களிப்பதற்காக தமிழகத்தில் இருந்து வெளியூரில் வேலை பார்க்கும் பலர் சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார்கள்.

இதனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே பஸ் ரயில் போன்ற வாகனங்களில் முன்பதிவுகள் துவங்கி பரபரப்பாக சென்றது. இந்நிலையில் தற்போது அதில் டிக்கெட் கிடைக்காதவர்கள் எப்படியாவது ஊருக்கு சென்று விட வேண்டும் என்ற நினைப்பில் விமானங்களில் கூட அடிக்க தேடி வருகிறார்கள். ஆனால் இந்த நேரத்தில் விமான டிக்கெட் விலை நான்கு மடங்காக உயர்ந்துள்ளது.
தற்போது சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வழக்கமாக ரூபாய் 3957 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூபாய் 12,716 டிக்கெட் கட்டணமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல சென்னையிலிருந்து மதுரைக்கு வழக்கமாக ரூ3674 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூபாய் 14,412 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையிலிருந்து சேலத்திற்கு செல்ல வழக்கமாக ரூபாய் 2,533 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த டிக்கெட் கட்டணம் ரூபாய் 5,500 க்கும் மேல் அதிக கடைசியாக விற்பனையானது. தற்போது இந்த விமானத்தில் இன்றும், நாளையும் டிக்கெட் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல சென்னையில் இருந்து கோவை பயணம் செய்ய ரூபாய் 3,342 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இது ரூபாய் 8,216 ஆக உயர்ந்துள்ளது. இப்படியாக தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் சென்னையிலிருந்து பயணம் செய்ய டிக்கெட் கட்டணம் என்பது அதிகமாக இருக்கிறது.
பொதுவாக பண்டிகை காலங்களில் இது போன்ற டிக்கெட் கட்டண உயர்வு என்பது இருக்கும். தற்போது தேர்தல் என்பதால் அதிக பயணிகள் பயணிப்பார்கள் என்ற கருத்தில் டிக்கெட் விலை அதிகமாக உள்ளது. வழக்கமாக இறுதி நேரத்தில் டிக்கெட் புக் செய்யும் போது கூட இவ்வளவு அதிகமான கட்டணம் இருக்காது. ஆனால் தற்போது தேர்தல் நேரத்தில் பஸ், ரயில் போன்ற வாகனங்களில் டிக்கெட் முழுவதுமாக வெற்றி தீர்ந்ததால் விமான டிக்கெட் விலை அதிகரித்துள்ளது.
தேர்தல் நேரத்தில் ஓட்டு போடுவதற்காக எப்படியும் பயணிகள் பயந்து தான் ஆக வேண்டும் என்ற கருத்தில் இந்த விலை உயர்வை விமான சேவை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இது பயணிகளுக்கு ஒரு பெரும் பிரச்சனையாக தான் இருக்கிறது. மத்திய அரசு இது போன்ற விஷயங்களை கண்காணித்து தேர்தல் நேரங்களில் இது போன்ற டிக்கெட் கட்டண விலை உயர்வை தடுக்க வேண்டும்.
தேர்தலில் 100% வாக்குப்பதிவிற்காக பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற பயணங்களுக்கான டிக்கெட் விலை அதிகரிப்பு காரணமாக கூட வாக்குப்பதிவில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது. பலர் டிக்கெட் விலை அதிகமாக இருப்பதால் சொந்த ஊருக்கு போவதை தவிர்த்து வாக்களிப்பதே தவிர்த்து விடுவார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வழக்கமாக பண்டிகை காலங்களில் இது போன்ற விலை உயர்வை விமான சேவை நிறுவனங்கள் அறிவிப்பது என்பது வாடிக்கையான விஷயம் தான். அது நேரடியாக நாட்டின் எந்த ஒரு விஷயத்தையும் பாதிக்காமல் இருக்கும். ஆனால் தேர்தல் நேரங்களில் இப்படியான விலை உயர்வு அறிவிப்பது வாக்குப்பதிவு சதவீதத்தை குறைக்க வாய்ப்பு உள்ளதால், இனி இது போன்ற தேர்தல் நேர டிக்கெட் விளைவு உயர்வை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








