ஹெலிகாப்டரில் பறக்காமல் வீதியில் இறங்கிய ஸ்டாலின்... ஏன் சிகப்பு நிற மஹிந்திரா தார் காரில் வந்தார் தெரியுமா?

சென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மஹிந்திரா தார் காரில் வந்து ஆய்வு செய்தார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹெலிகாப்டரில் பறக்காமல் வீதியில் இறங்கிய ஸ்டாலின்... ஏன் சிகப்பு நிற மஹிந்திரா தார் காரில் வந்தார் தெரியுமா?

சென்னையில் தற்போது கன மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன் தினம் (நவம்பர் 7) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் தனது வழக்கமான காரை பயன்படுத்தவில்லை.

ஹெலிகாப்டரில் பறக்காமல் வீதியில் இறங்கிய ஸ்டாலின்... ஏன் சிகப்பு நிற மஹிந்திரா தார் காரில் வந்தார் தெரியுமா?

அதற்கு பதிலாக சிகப்பு நிற மஹிந்திரா தார் காரை பயன்படுத்தினார். இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள ஆஃப் ரோடு எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். எனவே சவாலான பயணங்களை மேற்கொள்ளும் திறன் இதற்கு உண்டு. இதன் காரணமாகதான் சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மஹிந்திரா தார் எஸ்யூவி காரை பயன்படுத்தினார்.

ஹெலிகாப்டரில் பறக்காமல் வீதியில் இறங்கிய ஸ்டாலின்... ஏன் சிகப்பு நிற மஹிந்திரா தார் காரில் வந்தார் தெரியுமா?

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயன்படுத்தியது மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் பழைய தலைமுறை மாடல் ஆகும். தற்போது இந்திய சந்தையில் மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் புதிய தலைமுறை மாடல் விற்பனையில் உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ஹெலிகாப்டரில் பறக்காமல் வீதியில் இறங்கிய ஸ்டாலின்... ஏன் சிகப்பு நிற மஹிந்திரா தார் காரில் வந்தார் தெரியுமா?

இதற்கு இந்திய சந்தையில் உச்சகட்ட வரவேற்பு கிடைத்துள்ளது. பழைய தலைமுறை மாடலுடன் ஒப்பிடுகையில் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி பல்வேறு அம்சங்களில் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி காரில், பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணக்கமான பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

ஹெலிகாப்டரில் பறக்காமல் வீதியில் இறங்கிய ஸ்டாலின்... ஏன் சிகப்பு நிற மஹிந்திரா தார் காரில் வந்தார் தெரியுமா?

கியர் பாக்ஸை பொறுத்தவரை, 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் பெட்ரோல் வேரியண்ட்களில், 2.0 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் டீசல் வேரியண்ட்களில் 2.2 லிட்டர் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டரில் பறக்காமல் வீதியில் இறங்கிய ஸ்டாலின்... ஏன் சிகப்பு நிற மஹிந்திரா தார் காரில் வந்தார் தெரியுமா?

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி காரில் 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல் ஆகிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் பாதுகாப்பு வசதிகளிலும் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி தலைசிறந்து விளங்குகிறது. குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் புதிய தலைமுறை தார் எஸ்யூவி 4 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது.

ஹெலிகாப்டரில் பறக்காமல் வீதியில் இறங்கிய ஸ்டாலின்... ஏன் சிகப்பு நிற மஹிந்திரா தார் காரில் வந்தார் தெரியுமா?

பாதுகாப்பை பொறுத்தவரை இந்த எஸ்யூவி காரில், இபிடி உடன் ஏபிஎஸ், ஏர்பேக்குகள், ரோல் ஓவர் மிட்டிகேஷன் உடன் இஎஸ்பி, ஹில் ஹோல்டு மற்றும் ஹில் டெசண்ட் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற காரணங்களால்தான் புதிய தலைமுறை தார் எஸ்யூவி காருக்கு இந்தியாவில் அமோகமான வரவேற்பு கிடைத்துள்ளது.

ஹெலிகாப்டரில் பறக்காமல் வீதியில் இறங்கிய ஸ்டாலின்... ஏன் சிகப்பு நிற மஹிந்திரா தார் காரில் வந்தார் தெரியுமா?

மஹிந்திரா நிறுவனம் புதிய தலைமுறை தார் எஸ்யூவி காரை தொடர்ந்து, எக்ஸ்யூவி700 காரை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த புதிய காருக்கு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன. அடுத்ததாக ஸ்கார்பியோ காரின் புதிய தலைமுறை மாடலையும் மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

ஹெலிகாப்டரில் பறக்காமல் வீதியில் இறங்கிய ஸ்டாலின்... ஏன் சிகப்பு நிற மஹிந்திரா தார் காரில் வந்தார் தெரியுமா?

அடுத்த ஆண்டு, அதாவது 2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது உலக அளவில் நிலவி வரும் செமி கண்டக்டர் பற்றாக்குறை பிரச்னையால் புதிய தலைமுறை ஸ்கார்பியோவின் அறிமுகம் தள்ளி போவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஹெலிகாப்டரில் பறக்காமல் வீதியில் இறங்கிய ஸ்டாலின்... ஏன் சிகப்பு நிற மஹிந்திரா தார் காரில் வந்தார் தெரியுமா?

ஏனெனில் ஏற்கனவே புதிய தலைமுறை தார் மற்றும் எக்ஸ்யூவி700 ஆகிய கார்களுக்கு அதிக முன்பதிவுகள் குவிந்துள்ளன. அந்த வாடிக்கையாளர்களுக்கு கார்களை விரைவாக டெலிவரி செய்ய வேண்டியுள்ளதால், புதிய தலைமுறை ஸ்கார்பியோவை மஹிந்திரா நிறுவனம் எப்போது விற்பனைக்கு கொண்டு வரும் என்பது தொடர்பாக உறுதியான தகவல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.

ஹெலிகாப்டரில் பறக்காமல் வீதியில் இறங்கிய ஸ்டாலின்... ஏன் சிகப்பு நிற மஹிந்திரா தார் காரில் வந்தார் தெரியுமா?

புதிய தலைமுறை தார் மற்றும் எக்ஸ்யூவி700 ஆகிய கார்களை போலவே புதிய தலைமுறை ஸ்கார்பியோ காருக்கும் உச்சகட்ட வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர எக்ஸ்யூவி300 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் மஹிந்திரா நிறுவனம் அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Chennai floods tamil nadu cm mk stalin inspects rain affected areas in mahindra thar suv
Story first published: Tuesday, November 9, 2021, 0:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X