மீண்டும் சென்னையில் கார் ரேஸ்! டிக்கெட் ரேட்டை கேட்டா உடனே புக் பண்ணிடுவீங்க!
சென்னையில் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்த தற்போது தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் நடக்கவிருந்த போட்டி ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், அந்த போட்டியை தற்போது நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி அனைத்து ஏற்பாடுகளும் தற்போது நடந்து வருகின்றன. இந்த போட்டி குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சென்னையில் கடந்த டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அப்பொழுது மிக்ஜாம் புயல் காரணமாக போட்டிகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளில் வெள்ள சேதம் ஏற்பட்டது. இதனால் போட்டி ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த போட்டியை தற்போது மீண்டும் நடத்த தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி மற்றும் செப்டம்பர் மாதம் 1ம் தேதிகளில் இந்த போட்டியை நடத்தி முடிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே திட்டமிட்டபடி சென்னை தீவு திடல் பகுதியை சுற்றியுள்ள சாலைகளில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது.
கடந்த டிசம்பர் மாதம் எப்படி போட்டி திட்டமிடப்பட்டதோ அதே போலவே இந்த முறையும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இந்த போட்டியை இந்தியன் ரேஸிங் லீக் என்ற அமைப்புடன் சேர்ந்து நடத்துகிறது. இந்த போட்டி போட்டியில் சர்வதேச அளவிலிருந்து பல்வேறு வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த போட்டி தீவுத்திடலை சுற்றியுள்ள சுமார் 3.5 கிலோமீட்டர் தூரம் கொண்ட சாலையில் இரவு நேர போட்டியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை தீவுத்திடலில் துவங்கும் இந்த கார் பந்தயம் அண்ணா சாலை, சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம், வழியாக மீண்டும் தீவுத்திடலை சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டி மற்ற கார் ரேஸ் போட்டிகளை விட சற்று வித்தியாசமானதாக இருக்கிறது.
இந்தியா மட்டுமல்லாமல் தெற்காசியாவிலேயே முதன் முறையாக இரவு நேர கார் பந்தயம் என்பதால் இந்த போட்டிக்கு மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் பலர் கலந்து கொள்வதால் இந்த போட்டியை காண ஏராளமான மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் .கடந்த முறையே டிக்கெட்டுகள் எல்லாம் விறுவிறுப்பாக விற்பனையாகின. இந்நிலையில் இந்த முறையும் தற்போது டிக்கெட் குறித்த விவரங்கள் எல்லாம் வெளியாகி உள்ளன.

இந்த போட்டிக்கான டிக்கெட் கட்டணமாக பிரீமியம் ஸ்டாண்ட் பகுதிக்கு முதல் நாள் டிக்கெட் கட்டணமாக ரூபாய்3999-ம், இரண்டாம் நாளுக்கான கட்டணமாக ரூபாய்6,999-ம் வசூலிக்கப்படுகிறது. இதுபோக கிராண்ட் ஸ்டாண்ட் கட்டணமாக முதல் நாளுக்கு ரூபாய் 1,999-ம் கடைசி நாளுக்கான கட்டணமாக ரூபாய்2,599 வசூலிக்கப்படுகிறது. இது போக கோல்டன் லாஞ்ச் என்ற ஸ்டாண்டில் முதல் நாள் டிக்கெட் கட்டணமாக ரூபாய் 7,999 மற்றும் இரண்டாம் நாள் டிக்கெட் கட்டணமாக ரூபாய் 13,999 வசூலிக்கப்படுகிறது.
இருப்பதிலேயே அதிகமாக பிளாட்டினம் லாஞ்ச் டிக்கெட் கட்டணமாக முதல் நாள் ரூபாய் 12,999-ம் இரண்டாம் நாளுக்கான டிக்கெட் கட்டணமாக ரூபாய் 19,999-ம் வசூலிக்கப்படுகிறது. இந்த டிக்கெட்களை ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி குறித்த அடுத்த கட்ட தகவல்கள் எல்லாம் ஒவ்வொன்றாக வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இந்த போட்டிகளை நடத்த கடந்த டிசம்பர் மாதம் திட்டமிட்ட போது இதற்கு பல்வேறு விதமான எதிர்ப்புகள் கிளம்பியது. பொது சாலைகளில் கார் பந்தயம் நடத்த வேண்டிய அவசியம் குறித்த கேள்விகளை பலர் எழுப்பினார்கள். இது குறித்து கோர்ட் வழக்கும் தொடரப்பட்ட நிலையில், கோர்ட் பல்வேறு நிபந்தனைகளின் கீழ் இந்த போட்டியை நடத்த உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சென்னையில் ஃபார்முலா 4 கார் கார் பந்தைய போட்டிகள் நடப்பது பல்வேறு கார் ரேஸ் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான போட்டிகள் நடப்பதை காண்பது அரிது. இதனால் இந்த போட்டியை காண ஏகப்பட்ட ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்த போட்டிக்கான டிக்கெட் புக்கிங் துவங்கியதும், நிச்சயம் டிக்கெட் எல்லாம் விற்று தீரும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









