சென்னை கார் ரேஸ் போட்டியை காண டிக்கெட் ரேட் இவ்வளவு கம்மியா? எப்படி புக் பண்ணனும் தெரியுமா?

சென்னையில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் ஃபார்முலா 4 ரேஸ் போட்டி நடக்கவிருக்கும் நிலையில், அந்த போட்டிகளுக்கான டிக்கெட் தற்போது ஆன்லைனில் விற்பனை துவங்கியுள்ளன. இதன்படி இந்த போட்டியை நேரில் காண விரும்பும் ரசிகர்கள் தற்போதே ஆன்லைனில் இந்த போட்டிக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். டிக்கெட் விலை என்ன? எப்படி போட்டியை நேரில் காண்பது? ஆன்லைனில் லைவாக எப்படி காண முடியும் என்ற முழுமையான விவரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

சென்னையில் சென்னை ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் தரப்பில் இருந்து இந்தியன் ரேஸிங் திருவிழா நடந்து வருகிறது இந்த போட்டியின் பார்முலா போர் போட்டியின் இரண்டாவது சுற்று சென்னையில் உள்ள பந்தயம் பொது சாலையில் வைத்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் இந்த போட்டிகள் நடைபெற விருந்த நிலையில் அப்பொழுது மழை வெள்ளம் ஏற்பட்டது காரணமாக போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.

chennai formula 4 car race ticket

இந்நிலையில் இந்த போட்டிகளை இந்த மாதம் நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்தியன் ரேஸிங் திருவிழா போட்டியின் பயிற்சி சுற்று வரும் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டியின் முதல் சுற்று 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட் என்ற பகுதியில் வைத்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் இந்த போட்டியின் 2ம் சுற்று ஆகஸ்ட் 30 மற்றும் செப்1 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள பொது சாலைகளில் வைத்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை தீவுத்திடல் சுற்றி உள்ள பகுதியில் இந்த போட்டிகள் நடக்கின்றன. இந்த போட்டியில் கொல்கத்தா, அகமதாபாத், டெல்லி, கொச்சி, கோவா, சென்னை, ஹைதராபாத், பெங்களூர், ஆகிய அணிகளின் தரப்பில் இருந்து வீரர்கள் பங்கேற்க உள்ளார்கள்.

chennai formula 4 car race ticket

இந்த போட்டிகளுக்கான டிக்கெட்கள் தற்போது ஆன்லைனில் விற்பனை செய்ய துவங்கப்பட்டுள்ளன. பேடிஎம் இன்சைட் தளம் மூலம் இந்த போட்டியை காண ரசிகர்கள் தங்கள் டிக்கெட்டுகளை புக் செய்து கொள்ளலாம். போட்டி இரண்டு நாட்களாக நடப்பதால் முதல் நாளுக்கு மட்டும் தனியாக டிக்கெட், இரண்டு நாட்களுக்கும் சேர்த்து டிக்கெட் என 2 விதமான டிக்கெட்களை பெற முடியும்.

இந்த போட்டி நடக்கும் பாதையில் சரியான இடங்களை தேர்ந்தெடுத்து அங்கு பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மாடத்தில் இருந்து போட்டிகளை கண்டு ரசிக்க டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக இருக்கிறது. தற்போது இந்த போட்டியை காண ரூபாய் 1699 முதல் ரூபாய் 10,999 என்ற விலையில் டிக்கெட் விற்பனையாகி வருகின்றன.

இது ஆரம்ப கால குறைந்த விலை டிக்கெட்டுகள் மட்டுமே. போட்டி நாள் நெருங்க நெருங்க இந்த டிக்கெட் விலை அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. அதே நேரம் புக்கிங் அதிகரித்தாலும் டிக்கெட் விலை உடனடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் இந்த போட்டியை காணும் முடிவு நீங்கள் இருந்தால் உடனடியாக இந்த போட்டியை காண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இது மட்டுமல்லாமல் இந்த போட்டியை டிவி மூலமாகவும் காண முடியும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதுபோக லைவ் ஸ்டிரீமாக ஃபேன் கோடு- FanCode என்ற ஆப் மூலமும் இந்த போட்டியை நேரடியாக காணமுடியும் இந்த போட்டி இந்தியாவிலேயே நடக்கும் முதல் இரவு நேர கார்பந்தய போட்டியாகும்.

பொதுவாக வெளிநாடுகளில் தான் இது போன்ற கார் பந்தய போட்டிகள் நடக்கும். தற்போது இந்தியாவில் இதுபோன்ற கார் பந்தய போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளது இந்திய இளைஞர்களை கார் ரேஸ் பந்தயத்தின் மீது ஆர்வத்தை தூண்டுவதற்கான முயற்சியாகும். இந்த போட்டிக்கு பிறகு கார் ரேஸ் மீது ஆர்வம் கொண்டு பல இளைஞர்கள் கார் ரேஸ் குறித்த விழிப்புணர்வை பெறுவார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இளைஞர்கள் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் அதே நேரம் அவர்களுக்கு கார் ரேஸ் மீதான ஆர்வத்தை தூண்டுவதற்காகவும் இப்படியான போட்டிகளை பொதுசாலையில் நடத்த திட்டமிட்டது நிச்சயம் வரவேற்கத்தக்கது தான் ஆனால் இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு. ஏற்படாமல் இருக்க வேண்டும் அதே நேரம் போட்டியை பாதுகாப்பாகவும் எந்தவித அசமாக விதங்களும் நேராக வகையிலும் திட்டமிட்டு நடத்த வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, August 5, 2024, 13:38 [IST]
English summary
Chennai formula 4 car race ticket and live broadcast info
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+