அதிரடி காட்ட தயாராகும் தமிழக போலீஸ்... சிறப்பு அதிகாரம் வழங்கிய உயர்நீதிமன்றம்...

குறிப்பிட்ட போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும்பட்சத்தில் உடனடியாக கைது செய்யலாம் என புதிய உத்தரவை தமிழக போலீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கின்றது.

தீவிர வேட்டைக்கு தயாராகும் தமிழக போலீஸ்.. சிறப்பு அதிகாரம் வழங்கிய உயர்நீதமன்றம்.. விழிபிதுங்கும் வாகன ஓட்டிகள்!

போக்குவரத்து விதிமீறல்களிலேயே கடுமையாக கண்டிக்க வேண்டிய விதிமீறலாக மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவது (ட்ரிங்க் அண்ட் டிரைவ்) இருக்கின்றது.

ஏனென்றால், ஒரு நபர் மது அருந்தியநிலையில் தன்னை மறந்து முற்றிலுமாக நிதானத்தை இழந்தவராக மாறிவிடுகின்றார். இந்த நிலையில் அவர் வாகனத்தை இயக்கும்போது என்ன வேகத்தில் செல்கின்றோம், எம்மாதிரியான சூழ்நிலையில் இருக்கின்றோம் இருப்பதை அவர்களால் உணரமுடிவதில்லை.

தீவிர வேட்டைக்கு தயாராகும் தமிழக போலீஸ்.. சிறப்பு அதிகாரம் வழங்கிய உயர்நீதமன்றம்.. விழிபிதுங்கும் வாகன ஓட்டிகள்!

இதுபோன்ற நிலையில் வாகனத்தை இயக்கும்போது, பெரும்பாலும் அவர்கள் விபத்தையே ஏற்படுத்தி விடுகின்றனர். மேலும், அவருக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் ஆபத்தை உருவாக்கிவிடுகின்றார்.

இதனை விளக்குகின்ற வகையில் பல்வேறு சம்பவங்கள் நாட்டில் அரங்கேறியிருக்கின்றன. மேலும், போலீஸாரும் மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கினால் எத்தகைய நிலை ஏற்படும் என்பதுகுறித்த விழிப்புணர்வு மற்றும் வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு வருகின்றனர்.

தீவிர வேட்டைக்கு தயாராகும் தமிழக போலீஸ்.. சிறப்பு அதிகாரம் வழங்கிய உயர்நீதமன்றம்.. விழிபிதுங்கும் வாகன ஓட்டிகள்!

இருப்பினும், அதனை மது பிரியர்கள் சற்றும் கண்டுக்கொள்வதில்லை. மேலும், மது அருந்திவிட்டு ஜாலி ரைடும் சென்று வருகின்றனர். இதன் விளைவாக விபத்தில் சிக்கி தான் மட்டும் துன்புறுவதில்லாமல், எதிரில் வரும் அப்பாவி வாகன ஓட்டிகளையும் ஆபத்தில் சிக்க வைத்துவிடுகின்றனர். இந்த நிலைக்கு நிரந்தர முடிவு காண வேண்டும் என அனைத்து தரப்பிலிருந்தும் அரசுக்கு வற்புறுத்தல்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றது.

தீவிர வேட்டைக்கு தயாராகும் தமிழக போலீஸ்.. சிறப்பு அதிகாரம் வழங்கிய உயர்நீதமன்றம்.. விழிபிதுங்கும் வாகன ஓட்டிகள்!

குறிப்பாக, சாலையோரங்களில் இருக்கும் மது கடைகளை அகற்றுதல் மற்றும் போலீஸார் தீவிர கண்கானிப்பில் ஈடுபட வைத்தல் வேண்டும் என்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், அரசுக்கு அதிகளவில் வருவாய் ஈட்டு தருவது மதுபான கடைகள் என்பதால் இந்த விவகாரத்தில் ஆமை வேகத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தீவிர வேட்டைக்கு தயாராகும் தமிழக போலீஸ்.. சிறப்பு அதிகாரம் வழங்கிய உயர்நீதமன்றம்.. விழிபிதுங்கும் வாகன ஓட்டிகள்!

இந்நிலையில், குடிமகன் ஒருவரால் சாலை விபத்தில் படுகாயமடைந்த மணிகண்டன் என்பவர் அளித்த மனுவின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் புதிய அதிரடி உத்தரவுகளை தமிழக போலீஸாருக்கு பிறப்பித்திருக்கின்றது.

தீவிர வேட்டைக்கு தயாராகும் தமிழக போலீஸ்.. சிறப்பு அதிகாரம் வழங்கிய உயர்நீதமன்றம்.. விழிபிதுங்கும் வாகன ஓட்டிகள்!

இந்த புதிய உத்தரவின்படி, மது போதையில் வாகனத்தை இயக்குபவர்கள் உடனடியாக கைது செய்யப்படும் நிலை உருவாகியிருக்கின்றது. இதுமட்டுமின்றி, குடி மகன்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தீவிர வேட்டைக்கு தயாராகும் தமிழக போலீஸ்.. சிறப்பு அதிகாரம் வழங்கிய உயர்நீதமன்றம்.. விழிபிதுங்கும் வாகன ஓட்டிகள்!

ஏற்கனவே, தமிழக போலீஸார் வாகன தணிக்கையில் புதிய உத்வேகத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், போலீஸாருக்கு மேலும் உற்சாகமூட்டும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவுகளை அடுக்கடுக்காக வழங்கியிருக்கின்றது.

தீவிர வேட்டைக்கு தயாராகும் தமிழக போலீஸ்.. சிறப்பு அதிகாரம் வழங்கிய உயர்நீதமன்றம்.. விழிபிதுங்கும் வாகன ஓட்டிகள்!

இதனால், மது பிரியர்கள் தற்போது விழி பிதுங்கி நிற்கின்றனர். ஏற்கனவே, நாடு முழுவதும் ஒவ்வொரு மாநில போலீஸாரும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக இரும்பு கரம் நீட்டி வருகின்றனர்.

தீவிர வேட்டைக்கு தயாராகும் தமிழக போலீஸ்.. சிறப்பு அதிகாரம் வழங்கிய உயர்நீதமன்றம்.. விழிபிதுங்கும் வாகன ஓட்டிகள்!

இந்நிலையில், தமிழக போலீஸாரின் இரும்பு கரங்களுக்கு கூடுதல் கவசம் வழங்கும் வகையில் இந்த புதிய உத்தரவு அமைந்திருக்கின்றது. இந்த உத்தரவை நீதிபதி கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழக போலீஸுக்கு வழங்கியிருக்கின்றது.

தீவிர வேட்டைக்கு தயாராகும் தமிழக போலீஸ்.. சிறப்பு அதிகாரம் வழங்கிய உயர்நீதமன்றம்.. விழிபிதுங்கும் வாகன ஓட்டிகள்!

கைது மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்து மட்டுமின்றி மது போதையில் வாகனத்தை இயக்காதபடி பிரத்யேக கருவிகளை வாகனங்களில் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தையும் அவர்கள் முன் வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, போதையில் வாகனம் ஓட்டியவர்கள் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த தகவலை நீதிமன்றத்தில் சமர்பிக்கவும் உத்தரவிட்டனர். இதனால், முன்பைக் காட்டிலும் தற்போது போலீஸார் கூடுதல் விருவிருப்புடன் செயல்பட ஆரம்பித்திருக்கின்றனர்.

தீவிர வேட்டைக்கு தயாராகும் தமிழக போலீஸ்.. சிறப்பு அதிகாரம் வழங்கிய உயர்நீதமன்றம்.. விழிபிதுங்கும் வாகன ஓட்டிகள்!

ஆகையால், வாகன ஓட்டிகள் நிச்சயம் இனி மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இல்லையேல் நிச்சயம் ஜெயில் கம்பிகளை எண்ணுவதற்கு தயாராக இருக்க வேண்டும். ஏனெனில் வரும் காலங்களில் தமிழக போலீஸார் டிரிங்க் அண்ட் டிரைவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை ஆயத்தமாகி வருகின்றனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Chennai HighCourt Ordered To Arrest Alcohol Consumed Drivers. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X