மோட்டார்சைக்கிள்களில் இனி இந்த கண்ட்ரோல் வசதி கட்டாயமா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தொடர்ந்து அதிகரித்துவரும் சாலை விபத்துகளை குறைக்க சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

மோட்டார்சைக்கிள்களில் இனி இந்த கண்ட்ரோல் வசதி கட்டாயமா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கடந்த 2013ல் நடந்த சாலை விபத்து ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த விபத்தில் பெண் பல் மருத்துவர் ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.

அவரது உடலில் கிட்டத்தட்ட 90 சதவீத பாகங்கள் செயலிழந்துவிட்டன. இது தொடர்பான வழக்கை முதலில் விசாரித்த மோட்டார் வாகன தீர்ப்பாயம், 18 லட்சத்து 43 ஆயிரத்து 908 ரூபாயை இழப்பீடாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

மோட்டார்சைக்கிள்களில் இனி இந்த கண்ட்ரோல் வசதி கட்டாயமா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்த இழப்பீட்டு தொகை மிகவும் குறைவாக இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு சமீபத்தில் நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இதனை விசாரித்த நீதிபதிகள், இழப்பீட்டு தொகையை ரூபாய் 1 கோடியே 49 லட்சத்து 80 ஆயிரத்து 548 ஆக உயர்த்தி உத்தரவிட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்த தொகை உடன் 2013ஆம் ஆண்டில் இருந்து 7 சதவீத வட்டி தொகையையும் சேர்த்து 12 வாரத்தில் விசாரணை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டுமென தீர்ப்பளித்துள்ளனர்.

மோட்டார்சைக்கிள்களில் இனி இந்த கண்ட்ரோல் வசதி கட்டாயமா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இதனுடன் தங்களது தீர்ப்பில், சாலை விபத்துகளில் உயிரிழப்பு அதிகரிப்பதற்கு அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவது தான் காரணம் என தெரிவித்துள்ள நீதிபதிகள், வாகனங்களின் வேகக்கட்டுப்பாட்டை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என அரசாங்கங்களை கேட்டு கொண்டுள்ளனர்.

மேலும், அதி விரைவு சாலைகளில் அதிகப்பட்சமாக மணிக்கு 120கிமீ வேகத்தில் செல்லலாம் என்று 2018ல் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும் நீதிபகள் உத்தரவிட்டுள்ளனர்.

மோட்டார்சைக்கிள்களில் இனி இந்த கண்ட்ரோல் வசதி கட்டாயமா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

2009 மற்றும் 2019 ஆண்டுகளில் கணக்கிடப்பட்ட புள்ளிவிபரங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது கடந்த பத்து ஆண்டுகளில் சாலை விபத்தில் இறப்போரின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஒரு மணிநேரத்திற்கு 6 இரு சக்கர வாகன ஓட்டிகள் பலியாகுவதாக மத்திய சாலை போக்குவரத்து கழகம் அறிக்கையில் தெரிவித்ததையும், இந்த விபத்துகளில் சிக்குவோர் 70 சதவீதத்தினர் 18 வயதில் இருந்து 45 வயதிற்குள்ளானவர்கள் தான் என்பதையும் நீதிபதிகள் சுட்டி காட்டியுள்ளனர்.

மேலும், அதி விரைவு சாலைகளில் அதிகப்பட்சமாக மணிக்கு 120கிமீ வேகத்தில் செல்லலாம் என்று 2018ல் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும் நீதிபகள் உத்தரவிட்டுள்ளனர்.

மோட்டார்சைக்கிள்களில் இனி இந்த கண்ட்ரோல் வசதி கட்டாயமா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இதனை கருத்தில் கொண்டு இருசக்கர வாகனங்களை தயாரிக்கும்போதே அவற்றில் வேகக்கட்டுப்பாட்டு தொழிற்நுட்பத்தை பொருத்த வேண்டுமென தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்திரவிட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் கேட்டு கொண்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களிலும் இத்தகைய தொழிற்நுட்பம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், நிர்ணயிக்கப்பட்டதற்கு அதிக வேகத்தில் செல்லும் வாகனங்களை கண்காணிக்க ட்ரோன்களை பயன்படுத்தலாம் எனவும் ஆலோசனை கூறியுள்ளனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Chennai High Court Orders To Center to Instruct Vehicle Manufactures To Place Speed Limiter In Two Wheelers.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X