நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சூப்பர் உத்தரவிட்ட சென்னை ஹைகோர்ட்! இனியாவது தூக்கத்தில் இருந்து விழிக்குமா?

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் சூப்பர் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சூப்பர் உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்... இனியாவது தூக்கத்தில் இருந்து விழிக்குமா..?

பொது நல வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நிதிமன்றம் நெடுஞ்சாலைகளில் நிகழும் விபத்துகளுக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பொறுப்பேற்க வேண்டும் என அறிவித்துள்ளது.

சமீபத்தில் அரங்கேறிய பெங்களூரு-கேரளா பேருந்து விபத்து சம்பவம் தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களையுமே உலுக்கும் வகையில் இருந்தது.

நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சூப்பர் உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்... இனியாவது தூக்கத்தில் இருந்து விழிக்குமா..?

இதில், கேரள அரசுக்கு சொந்தமான பேருந்து ஒன்று திடீரென தவறான பாதையில் வந்து எதிரில் தோன்றிய கன்டெய்னர் லாரி மீது விபத்தைச் சந்தித்தது. இந்த சம்பவத்தில் சுமார் 21 பேர் பரிதாபமாக பலியாகினர்.

மேலும், பல பலர் படுகாயமடைந்தனர். இந்த விபத்திற்கு கன்டெய்னர் லாரி அதிவேக வந்ததே முக்கியமாக காரணமாகக் கூறப்படுகின்றது. இதனாலேயே, மேம்பாலத்தின் இறக்கத்தில் லாரியை கட்டுப்படுத்தப்படுத்த முடியமால் சாலையின் எதிர்ப்புறத்தில் சென்றதற்கான காரணம் என கூறப்படுகின்றது.

நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சூப்பர் உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்... இனியாவது தூக்கத்தில் இருந்து விழிக்குமா..?

அந்த நேரத்தில், கணிசமான வேகத்தில் வந்த பேருந்து திடீரென தோன்றிய லாரியின் பக்கவாட்டில் உராய்ந்தவாறு சென்றது.

இதில், பேருந்தின் வலப்பக்கம் முழுவதுமாக சிதலமடைந்தது. இத்துடன், அப்பகுதியில் பயணித்த 16 பயணிகளும் வாகனங்களுக்கு இடையே சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். தொடர்ந்து, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சிலரும், மருத்துவமனையில் சிலரும் அடுத்தடுத்தாக உயரிழந்தனர்.

நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சூப்பர் உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்... இனியாவது தூக்கத்தில் இருந்து விழிக்குமா..?

அவ்வாறு, மருத்துவமனையில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து என்று கூறப்படுகின்றது. ஆகையால், ஒட்டுமொத்தமாக இந்த விபத்தில் பரிதாபமாக பலியானோரின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்தது, அன்றைய தினத்திலேயே.

நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சூப்பர் உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்... இனியாவது தூக்கத்தில் இருந்து விழிக்குமா..?

இந்த சம்பவத்தில் பாலியாகிய பெரும்பாலானோர் கேரளத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இருப்பினும், தமிழகத்தின் அவினாசி பகுதியில் விபத்து அரங்கேறியதால், கேரளத்தைக் காட்டிலும் தமிழகத்தின் இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. அதிகாலையில் 3 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்து லாரி ஓட்டுநரின் தூக்க கலக்கமான இயக்கத்தினாலே நடைபெற்றிருக்கும் என்று கூறப்படுகின்றது.

நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சூப்பர் உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்... இனியாவது தூக்கத்தில் இருந்து விழிக்குமா..?

இதனாலேயே மேம்பாலத்தின் இறக்கத்தை சரியாக கணிக்க முடியாமல் தடுப்புகளைத் தாண்டி சாலையின் அடுத்த பகுதியில் லாரியை இறக்கியுள்ளார். இந்த விபத்திற்கு ஓட்டுநரின் தவறே மிக முக்கிய காரணமாக இருக்கின்றது.

ஆனால், பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு முறையான சாலை கட்டமைப்பு இல்லாததே முக்கிய காரணியாக இருக்கின்றது. இதனாலயே, இதுபோன்ற விபத்து சம்பவங்கள் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு முக்கிய நெடுஞ்சாலைகளில் நாள்தோறும் நடைபெற்று வருகின்றது.

நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சூப்பர் உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்... இனியாவது தூக்கத்தில் இருந்து விழிக்குமா..?

குறிப்பாக, அண்மைக் காலங்களாக நகரத்தின் உட்புற சாலைகளுக்கு இணையாக தேசிய நெடுஞ்சாலைகளில் நடைபெறும் விபத்துகள் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு நெடுஞ்சாலைகள் ஒழுங்கான கட்டமைப்பைக் கொண்டிராததே முக்கிய காரணம் ஆகும். இதுகுறித்த பொதுநல வழக்கு ஒன்றிலேயே சென்னை உயர்நீதி மன்றம், "நெடுஞ்சாலைகளில் நடைபெறும் விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" தெரிவித்தது.

நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சூப்பர் உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்... இனியாவது தூக்கத்தில் இருந்து விழிக்குமா..?

தொடர்ந்து, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தரத்தின் அடிப்படையில் சாலைகள் அனைத்து மீண்டும் சீராக கட்டமைப்புச் செய்யப்பட்டிருக்கின்றதா என்பதை உறுதி செய்யும்படியும் அந்த அமர்வு நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட்டது.

தேசிய நெடுஞ்சாலை 4ன், மதுரவாயல் மற்றும் வாலாஜாபாத் ஆகிய இரு பகுதிளுக்கும் இடையிலான சாலை கட்டமைப்பு மிகவும் மோசமானதாக காணப்படுவதாக தொடரப்பட்ட பொதுநல வழக்கின்கீழ், நீதிபதிகள் எம் சத்யநாரயணன் மற்றும் ஆர் ஹேமதலா ஆகியோர் அடங்கிய அமர்வு இத்தகைய உத்தரவை பிறப்பித்தது.

நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சூப்பர் உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்... இனியாவது தூக்கத்தில் இருந்து விழிக்குமா..?

அப்போது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பாக பங்கேற்ற உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜி கார்த்திகேயன், நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றிய ஆவணங்களைச் சமர்பித்தார்.

அதில், ஒப்பந்ததாரர்கள் தரப்பில் தாமதம் ஏற்படுவது தெரியவந்தது. இதற்கு என்ன காரணம் என்ற கேள்வியை நீதிமன்றம் எழுப்பியது.

நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சூப்பர் உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்... இனியாவது தூக்கத்தில் இருந்து விழிக்குமா..?

அப்போது, "நெடுஞ்சாலைகளில் பணியை மேற்கொள்வதற்கு அந்த மாநில அரசின் வெவ்வேறு துறைகளில் சென்று அனுமதியைப் பெறவிருக்கின்றது. இதனால், நீண்ட நாள் காலதாமதம் ஏற்படுகின்றது" என தெரிவித்தார்.

ஆகையால், பல்வேறு பங்குதாரர்களை உள்ளடக்கிய ஒற்றைச் சாளர நிறுவனத்தை நிறுவ வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இவ்வாறு, செய்தாலே ஒரே இடத்தில் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்க முடியும் என கார்த்திகேயன் கூறினார்.

நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சூப்பர் உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்... இனியாவது தூக்கத்தில் இருந்து விழிக்குமா..?

இதையடுத்து, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடி அனுமதியைப் பெற ஒற்றை சாளர நிறுவனத்தை அரசு உருவாக்க வேண்டும் என்பதை கவனித்தது. ஆனால், இதனைக் கொண்டுவர நீண்ட நாள் தேவைப்படும் என்பதையும் நீதிமன்றம் உணர்ந்தது. ஆகையால், தற்காலிகமாக தமிழகத்தின் தலைமைச் செயலாளர் இதற்கு கவனம் செலுத்த வேண்டும் என கூறியது.

நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சூப்பர் உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்... இனியாவது தூக்கத்தில் இருந்து விழிக்குமா..?

இருப்பினும், மோசமான சாலையின் காரணமாக விபத்து அல்லது இழப்பு ஏதேனும் அரங்கேறினால் அதற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் பொறுப்பேற்க வேண்டும் என்பதை நீதிமன்றம் திட்டவட்டமாக தெரவித்துவிட்டது. ஆகையால், இனி வரும் காலங்களில் முறையான கட்டமைப்பு இல்லாத சாலையால் விபத்து ஏற்படுமேயானால் அதற்கு என்எச்ஏ-வும் பெறுப்போற்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது.

நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சூப்பர் உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்... இனியாவது தூக்கத்தில் இருந்து விழிக்குமா..?

ஏற்கனவே, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் என்எச்ஏ-வுக்கு டோல்கேட் சார்ந்தும், மோசமான சாலை பற்றியும் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அந்த புகார்களுக்கு இதுவரை ஆணையம் இதுவரை செவிசாய்க்கவில்லை. மேலும், இந்த விவகாரத்தில் ஆணையம் தூக்க கலக்கத்தில் இருப்பதாகவே மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சூப்பர் உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்... இனியாவது தூக்கத்தில் இருந்து விழிக்குமா..?

இதைத்தொடர்ந்து, தற்போது நீதிமன்றம் கொடுத்துள்ள உத்தரவு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. இனியாவது நெடுஞ்சாலை ஆணையும் பொறுப்புணர்வுடன் செயல்படும் என நம்பப்படுகின்றது.

தற்போது, குண்டும் குழியுமாக உள்ள நெடுஞ்சாலைகளில் ஒட்டுப் போடும் பணிகள் நடைபெற்று வருவதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

Source: New Indian Express

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Chennai HC Said NHAI Also Liable To Pay Compensation To Victims Of Accidents. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X